கேரளா வயநாடு , கண்ணூர் , கோழிக்கோடு , மலப்புரம் , காசர்கோடு என்று கடந்த மாதம் முழுவதும் மழை கொட்டி கொண்டே இருந்தது.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி செவ்வாய் கிழமை அதிகாலை கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தல கிராமங்களான முண்டக்கை , சூரல் மலை மற்றும் அட்டமலை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க திடீர் என்று இரவு 2 மணிக்கு மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு பெரிய மலையே சரிந்து வெள்ளத்தில் பாறைகள், மண், மரங்கள் என்று அடித்து வந்து ஒட்டுமொத்த கிராமங்கள் அடித்து சென்று உருக்குலைய செய்துவிட்டது .விடியற்காலை நான்கு மணிக்கு அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது .
ஏராளமானோர் கொத்து கொத்தாக சேற்றிலும் வெள்ளத்திலும் சிக்கி காணாமல் போய்விட்டனர் .அதிகாலை மழை கொட்டிக்கொண்டிருக்க விடிந்த பொழுது கிராமங்கள் வீடுகள் இருந்த அடையாளம் தெரியாமல் போனது .
மிக பயங்கர நிலச்சரிவு தகவல்கள் பறக்க நாடே அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயின . மீட்பு பணியை எப்படி எதிர்கொள்வது என்று திணறி போய்விட்டனர் கேரள அதிகாரிகள் .
தேடும் பணியில் ராணுவம், மீட்பு படை , தன்னார்வலர்கள் என்று பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் பலரை மீட்டனர் அதில் பெரும்பாலும் இறந்த உடல்கள் தான் சிக்கின.அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து எப்படியோ தப்பி பிழைத்தவர்கள் காட்டு வழியாக மேப்பாடிக்கு சென்றுள்ளனர் .
சூரல் மலையில் மழை கொட்டிக்கொண்டிருக்க ஒரு பள்ளியில் முகாமில் தங்க வைத்த பலர் காணவில்லை .இந்த பயங்கர நிலச்சரிவு "உருள் பொட்டல்" அதாவது ' நீர் இடி ' அல்லது 'மேக வெடிப்பு' ஏற்பட்டு இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டது .ஏராளமான வீடுகள் , கடைகள் , கோயில் , பள்ளிவாசல் , ஆலயம் கடைகள் மற்ற வாகனங்கள் இருந்த இடமே தெரியவில்லை .ஐநூறு குடும்பங்கள் அடித்து செல்லப்பட்டன அதுவே மிக அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது .
மீட்பு படையினர் தேட தேட பல உடல்கள் சிதைந்து கிடைத்துள்ளன .
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேற்றில் புதைந்து காணாமல் போய்விட்டனர் .முண்டகை பகுதியில் ஒரு வீட்டில் திருமணம் நடக்க இருக்க உறவுகள் அனைவரும் தங்கியிருந்தனர் நிலச்சரிவில் காலையில் அந்த வீடே காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் அறிந்து உறைந்து போயினர் .மிக பெரிய பேரிடர் கேரளாவை உலுக்கி நடுங்க வைத்து விட்டது .
கடவுள் தேசம் என்று மார்தட்டி கொள்ளும் கேரளா அரசு அதிர்ச்சியில் நடுங்கி போயிருக்கிறது .ஏராளமானோர் இறந்து போக பலர் காணவில்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது .
சுற்றுசூழல் ஆர்வலர் நீலகண்டனை தொடர்பு கொண்டு பேசினோம் ,
வயநாட்டிற்கு இது முதல் முறையில்லை 2019 யில் முண்டகை பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டரில் உள்ள புத்தமலை ஏற்பட்ட மேக வெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவில் 15 பேர் இறந்துபோயினர் .அதே போல மலப்புரம் மாவட்டத்தில் கவள பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 57 பேர் இறந்து போக 11 பேர் கிடைக்கவில்லை.
2012 ஆம் ஆண்டே சூழலியாளர் மாதவ காட்வில் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் ஆராய்ந்து மூன்று பகுதிகளாக பிரித்து மத்திய அரசுக்கு தன் அறிக்கையை சமர்ப்பித்து வயநாடு முண்டகை , சூரமலை பகுதி இடுக்கி சில இடங்கள் பேரிடர் ஏற்படக்கூடிய முதல் பகுதி இதை மாநில அரசுகள் கவனமாக கண்காணித்து பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று எச்சரித்தும் அதை மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை .அரசியல் வாதிகள் தங்களின் சொந்த லாபத்திற்காக இதை கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை .இந்த பகுதியில் குவாரிகள் , மரங்களை வெட்டுவது , ரிசார்ட் கட்டிடங்கள் கட்டுவது என்று டெவலப் செய்ய அதுவே பெரிய ஆபத்தில் முடிந்தது .
இந்தியாவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அதிகமான நிலச்சரிவுகள் கேரளாவில் தான் ஏற்பட்டுள்ளது .இந்த பகுதியில் 500 மி மீ மழை கொட்டியது ஒரு வீடு கூட காணவில்லை , சூரல் மலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது .ஏர் லிப்ட்டிங்கிற்கு வழியில்லாமல் போனது .அப்படியும் ஹெலிகாப்டர் பலரை மீட்டு சென்றது .
சூரல் மலை யில் இருந்து தான் சாலியார் ஆறு நீர்வீழ்ச்சி இதில் பெரும்பாலான உடல்கள் தூக்கி எறியப்பட்டு அடித்து செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளது . நிறைய உடல்கள் மலப்புரம் வரை அடித்து சென்றுள்ளது .இந்த பகுதியில் டீ , ஏலக்காய், காபி எஸ்டேட்டுகள் உள்ளன இங்கு பணிபுரிந்த அனைவரும் காணாமல் போய்யுள்ளனர் .
முன்னாள் காங்கிரஸ் எம் பி .தாமஸ் இந்த பகுதியில் கட்டிடங்கள் வர அனுமதிக்க கூடாது மீறினால் இடிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார் .இயற்கையை மீறி செயல் படுவது அழிவை ஏற்படுத்துகிறது .2020 ஆம் ஆண்டு நான் ஜப்பான் சென்றபொழுது அங்கு ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு ஒருவர் தான் உயிரிழந்தார் அவரும் அதிர்ச்சியில் இறந்துள்ளார் .அங்கு ஆபத்தை விளைவிக்கும் கட்டிடங்கள் இல்லை என்கிறார் .ஏற்கனவே நான் சொன்னது தான் கால நிலை மாற்றமில்லை இது கால நிலை நெருக்கடி .இனியாவது அரசு எச்சரிக்கையாக இல்லா விட்டால் மேலும் உயிர்கள் பறிபோகும் இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு "என்கிறார் .
இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறும்போது ,
இப்படி ஒரு விபரிதம் வரும் என்பது இயற்கை ஆய்வாளர்களுக்கு தெரியும் .சூழல்வியாளர் மாதவ காட் வில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆராய்ச்சி அறிக்கையில் மழை பொழிவு அதிகம் இருக்கும் , வனப்பகுதி மலை பகுதியில் அதிகமான ஈரப்பதம் கடல் காற்று இருப்பதால் வயநாடு பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு அதிக வெள்ளம் ஏற்படும் என்று கணித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து மாநில அரசுகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு மிக பெரிய விபரீதத்தை வயநாடு சந்தித்து சோகத்தில் முழ்கியுள்ளது .
முண்டகை , சூரல் மலை மேப்பாடி பகுதி முழுவதும் 53 மி மீ முதல் 500 மி மீ வரை மழை கொட்டும் பகுதி அங்கு எந்த சுற்றுலா காட்டேஜ் மக்கள் குடியிருப்பு எதுவமே இருக்கக்கூடாது .அது இயற்கை பாதுகாப்பு பகுதி ஏற்றபோதிலும் பணப்பயிரான டீ , காபி , ஏலக்காய் பயிரிடப்படுகிறது .தற்போது அந்த பயிர்களும் அழிந்து விட்டன .அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போது சுற்றுசூழல் பாதுகாக்கும் முயற்சியில் செயல் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மரங்கள் வெட்டுவது அதிக கட்டிடம் கட்டுவது என்று தொடர்ந்தால் வயநாடு சோகம் மிக பெரிய எச்சரிக்கை மணி என்கிறார் .
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வியாழக்கிழமை காலை நேரடியாக வயநாடு வந்து நிலச்சரிவு பகுதிக்கு சென்று பார்வையிட்டு கண்கலங்கி "எங்கள் அப்பா இறந்த போது எங்களின் மனநிலை எப்படி இருந்ததோ அது போல இப்பொழுது எங்கள் மனம் கனத்திருக்கிறது" என்று கூறினார்கள் இருவரும் இங்கு தந்தை மட்டும் இறக்கவில்லை எல்லா உறவுகளும் இறந்துள்ளனர் . ஒட்டுமொத்த நாடே உதவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .பின் பாதிக்கப்பட்டவர்களை மேப்பாடி முகாமில் சந்தித்து நிலமையை கேட்டு தெரிந்து கொண்டார் .
முண்டகை மற்றும் சூரல் மலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்ல மீட்பு பணி தொய்வானது .
ராணுவம் போர்க்கால அடிப்படையில் பெய்லி பிரிட்ஜ் அமைத்து ரிசார்ட் மற்றும் காட்டில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ராணுவ ட்ரக்குகள் சென்று வருகின்றன .
ரோட்டரி கூடலூர் வேலி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து பொருள்களும் சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் உள்பட அனைத்து கொண்டு போய் கொடுத்தனர் .
நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து அனைத்து பொருள்களும் எடுத்து கொண்டு போகிறோம் " என்று கூறினார் தலைவர் ராபர்ட் .நாட்டை உலுக்கின வயநாடு நிலச்சரிவு மிக அபாய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது .
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்(IMD) பேரிடர் நிகழும் முன்பு ஆரஞ்சு அலர்ட் மழை பொழிவு பற்றி தகவல் கொடுத்தது. வரும் காலத்தில் நிலச்சரிவு குறித்து ஜியோலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா (GSI), வெள்ளம் பற்றி சென்ட்ரல் வாட்டர் கமிஷன்(CWC) மூன்றும் ஒன்றிணைந்து இதுப்போன்ற பேரிடர் நிகழம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை அலர்டகளை தர வேண்டும் என்று முன்னாள் எர்த் சயின்ஸ் அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலர் மாதவன் ராஜீவன் தெரிவித்தார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி 86,000 சதுர மீட்டர் என்பது 925696.3 சதுர அடிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரோ செயற்கை கோள் படம் தெளிவாக்கியுள்ளது.
மனித தவறுகள் தான் இயற்கையை பாழாக்கி வருகிறது.
இயற்கையை பகைத்தால் அது திருப்பி தாக்கும் போது நம்மால் தாங்க முடியாது என்பதே வயநாடு கொடூரம் நமக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை!
Leave a comment
Upload