ராணுவ சேவைக்குப் பின் கலையுலகுக்கு வந்த டெல்லி கணேஷ்... நகைசுவைக்கும் அப்பாற்பட்டுஎல்லோருக்கும்—
பிரியமானவர்.சாது!.அன்பானவர்.பண்பானவர்.மனிதாபிமானம் மிக்கவர்.அதோடு மட்டுமல்லாமல் சிறந்த நகைச்சுவையாளர்.
நடிப்பில் மட்டுமல்ல... .மேடையிலும்,நேரிலும் தனது அனுபவ அலப்பறைகளை சுவையாய்அள்ளித் தெளிப்பவர்.
எனக்கு அவருடன் 30 வருட நட்பு!
அவரின் - 80 -சதாபிஷேகத்தில் கலந்துக் கொண்டு,மனைவி, மற்றும் நண்பர்கள் சகிதம் அவரிடம் ஆசீர் பெரும் பாக்கியம் யாமும் பெற்றோம்.
அந்த விழா கோலாகலம்! கல்யாண கலாட்டா!
சினிமா, டிவி, மீடியா, நாடகம் மற்றும் நண்பர்கள் என்று அவரது நட்பு விசாலம்!
இருந்தும் கூட,ஆடம்பரமில்லாமல் அது சுருக்கம் என்றாலும் மனதிற்கு மிக நெருக்கமான நிகழ்வு.
(வழக்கம் போல) அவருக்கு நெருக்கமான சூப்பர்களை அங்கு காணவில்லை!
சிவகுமார்.ஒய்.ஜி.எம்,எஸ்.பி.எம், காத்தாடி, வரது,சச்சு, KB.மோகன், சிங்காரம்,போன்ற சினிமாபிரமுகர்களுடன்,நல்லி,ஆடிட்டர் NR. கிருஷ்ணமூர்த்தி , லேனா, உதயம் ராம், மற்றும் எழுத்தாளர்கள்,படைப்பாளிகள் என்று அங்கு ஆத்மார்த்த சங்கமம்!
டெல்லிக்கு ,வயதையும் மீறி பயங்கர ஞாபகசக்தி!
வந்திருந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து,,அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை விசாரிக்க தவறவில்லை..
சமீபமாக படைப்பாளிகளின் ‘பேனாக்கள்’ சந்திப்பை ஒருங்கிணைத்து வரும் எனது அடுத்த சந்திப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அவர் வர சம்மதித்திருக்கிறார்.
”மோகன்தாஸ்.. எல்லாம் சிம்பிளா இருக்கட்டும். ஹால் ..அது இதுன்னு ஆடம்பர செலவுகள் வேணாம்.!” என்று அவரே தனது உற்ற நண்பரின் இடத்தை - அதுவும் இலவசமாய் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.
மேடையில் அந்த நெருக்கடியிலும் கூட அவர் என்னிடம் அதுகுறித்து விசாரிப்பு! இன்னா மனுஷன்யா இவர்!
இப்போ தலைப்புக்கு வருவோம்.
எல்லோருக்கும் போல எனக்கும் அபிமானமான மற்றும் நன்கு பழக்கம் உள்ள, SPM,காத்தாடிபோன்றோர் முன் வரிசையில் அமர்ந்திருக்க ,அவர்களுடன், படம் எடுக்க முடியாமல் அதற்கு அங்கே இட நெருக்கடி!
உடனே மனைவியும் நானும் செல்லமாய் அவர்களது காலடியில், அவர்களது பதைப்பையும் பொருட்படுத்தாது அமைர்ந்துக் கொண்டோம்.
அமரும் போது பிரச்சனை இல்லை. தரையிலிருந்து . எழும்போது தடுமாறவே,SPM எனக்கு கைக்கொடுத்து தூக்கி விட—
“மோகன்தாஸ்..நீர் பாக்கியவான் !
SPM சாரால் கைகொடுத்து தூக்கி விடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் நீரும் சேர்ந்து விட்டீர் !”
--என்று காத்தாடி சட்டென தனது ‘காத்தாடி’யை விட—அங்கு ஒரே லக..லக!
-என்.சி.மோகன்தாஸ்
பட மிக்ஸ்: வெ(ள்ளை).தயாளன்
Leave a comment
Upload