தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 24 - ரேணு மீரா

20240417044553343.jpg

குறள் -533

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து

எப்பால்நூ லோர்க்குந் துணிவு.

மறதியுடையார் புகழுடன் வாழ மாட்டார்கள் என்பதே எல்லா அறிஞர்களும் கண்ட வாழ்க்கை பாடம்.

வள்ளுவர் பெருமான் மறதியை பற்றி கூறுவதை நாம் சற்று நேர திட்டமிடுதலுடன் சேர்த்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.

அன்றாட வேலைகளில் முக்கியமானது எது?

முன்னுரிமை கொண்டது எது?

என்பதில் தெளிவாக நம் குழந்தைகள் முன் எடுத்துரைக்கின்றோமா என்பதை கவனிக்க வேண்டும் இவற்றை நாம் பின்பற்றி வரும் போது குழந்தைகளும் நம்மை பின்பற்றுவார்கள் இதற்கு சில வழிகளை பார்ப்போம்.

ஒரு சாட் பேப்பரை எடுத்து அதில் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலையையும் விட்டு விட வேண்டாம். அவற்றை பெயர் குறிப்பிட்டு தெளிவாக எழுத வேண்டும்.வேலைகள் மிகப்பெரியதாக இருந்தால் அவற்றை சிறு சிறு வேலைகளாக பிரித்து எழுத வேண்டும். எல்லா வேலைகளும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறதா என பார்ப்பது மிகவும் அவசியம்.

20240417051220357.png

இந்த பட்டியலில் உள்ள வேலைகளை அவற்றின் முக்கியம் மற்றும் அவசரம் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். இதை வண்ணங்கள் கொண்டு அதாவது கலர் பென்சில் மூலம் பட்டியல் இடுவது நல்லது. உங்களைப் பொறுத்தவரை உடனடியாக செய்யவேண்டிய வேலைகளுக்கு பக்கத்தில் A என குறிப்பிடுங்கள். முக்கியம் தான் ஆனால் உடனடியாக செய்ய வேண்டியதில்லை எனும் வேலைகளை B எனக் குறிப்பிட்டு, தாமதமாக செய்தால் பரவாயில்லை என்று நினைக்கும் வேலைகளுக்கு C என்று குறிப்பிடவும்.

இப்போது வேறு ஒரு தனி சார்ட் பேப்பரை எடுத்து உங்கள் வேலைகளை A B C என்கிற வரிசையில் எழுதவும். ஏ வரிசை ஒரு வண்ணத்திலும் பி வரிசை ஒரு வண்ணத்திலும் சி வரிசை வேறு ஒரு வண்ணத்திலும் எழுத வேண்டும்.

இப்போது கடைசியில் வரும் சி வரிசை வேலைகளில் எது தேவை எது தேவை இல்லை என்று நீங்கள் சுலபமாக முடிவு செய்யலாம். இப்போது அந்த நேரம் மொத்தமும் உங்களுக்கு கிடைக்கிறது.

சிலருக்கு இப்படி எழுதி வைத்துக்கொண்டு வேலை செய்யும் அளவுக்கு பெரிய வேலைகள் கிடையாது என்று நினைக்கலாம். நான் மனதிலேயே எல்லாவற்றையும் திட்டம் போட்டு முடித்து விடுவேன் என்று நினைக்கலாம். சிலரால் மன அளவிலேயே திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதுவும் வேலைகள் குறைவாக இருக்கும் போது கேட்கவே வேண்டாம். ஆனால் அவர்களும் கூட இந்த சின்ன வேலைகளை இவ்வாறு எழுதி திட்டமிட்டால் முன்பை விட அதிக திறமையுடன் செய்ய முடியும் அத்துடன் அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.

இப்படி ஒரு chart பேப்பரில் உங்கள் வேலைகளை பிரித்து ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு வண்ணம், முக்கியமாக செய்ய வேண்டிய வேலைக்கு ஒவ்வொரு வண்ணமாக நீங்கள் எடுத்து எழுதி அதை செயல்படுத்துவதை உங்கள் குழந்தைகள் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் தங்கள் பள்ளி பாடங்களையும் அவர்களே ஒரு டைம் டேபிள் தயாரித்து எந்த சப்ஜெக்ட்டை முதலில் படிக்க வேண்டும், ரெக்கார்ட் வொர்க்கை பிறகு முடித்து விட வேண்டும் என்றும்,சிலவற்றை செய்வது அவசியம் இல்லை என்று பிரித்து பார்த்து எழுத ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும். அத்துடன் அவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதை உணர்வார்கள்.

தொடர்ந்து பேசுவோம்…..