தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240811180732216.jpeg

ராகுல்காந்தி ஒரு பக்குவ மற்ற அரசியல்வாதி என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் பாஜக செய்தி தொடர்பாளர்.

கரெக்டுதான் உங்கள ரொம்ப எதிர்த்து பேசுறாரு !!

மிக்ச்சர், காராசேவு வரி குறைப்பு ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு.

சாப்பிட்டு பார்த்து முடிவு செய்து இருப்பாங்க !!

எடப்பாடியை இழக்க விரும்பவில்லை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

அதாவது பன்னீரை இழந்தால் பரவாயில்லை என்கிறார் !!

தெருமுனை கூட்டங்களை காங்கிரஸ் நடத்த வேண்டும் செல்வப் பெருந்தகை அறிவிப்பு.

அதெல்லாம் திமுக தலைவர் சொன்னதான் நடத்துவோம் என்கிறது ஒரு காங்கிரஸ் கோஷ்டி !!

திமுக கூட்டணியில் தான் உள்ளோம் தொல்.திருமாவளவன்.

தலைவர் ஏன் இதை அடிக்கடி சொல்கிறார் ?

தமிழக கனிம வளத்துறையில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு ஆய்வு நடத்த துறை அலுவலர்கள் கோரிக்கை.

அவங்களுக்கு எதுவும் தராமல் அரசியல் தலைவர்கள் சாப்பிடுகிறார்கள் போல இருக்கு !!

அன்பு பணிவு மரியாதை இந்திய அரசியலில் இல்லை ராகுல்காந்தி.

இவர் கட்சியில் இருக்கா !!

இந்தியாவின் புகழை கெடுக்க ராகுல்காந்தி வெளிநாடு செல்கிறார் மத்திய அமைச்சர் விமர்சனம்.

அதெல்லாம் பிரதமர் போய் கட்டிப்பிடித்து சரி செய்து விடுவார் கவலைப்படாதீங்க அமைச்சரே !!

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் முதலமைச்சர் பெருமிதம்.

அப்படியா சொல்றீங்க ?

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அரியானா மக்கள் தயாராகி விட்டார்கள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.

ஆனா ஆம் ஆத்மி கட்சி உங்களோட கூட்டணி வைக்க தயாரா இல்லையே!!

60 லட்சம் லஞ்சம் வழக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது.

அவங்க தனியா ஜிஎஸ்டி வசூல் பண்ணாங்க போல தெரியுது !!

திசைகளை வெல்ல முதல் கதவு திறந்துச்சு நடிகர் விஜய்.

தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு அங்கீகாரம் தந்துச்சாம் !!

நடிகர் விஜய்க்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை மூத்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு.

ஆமா அவரே ஒருவாட்டி முடிவு பண்ணா அவர் பேச்சை அவரே கேக்க மாட்டார் இல்ல !!

நடிகர்கள் ஆரம்பித்த கட்சி எதுவும் போணியாகவில்லை புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

ஆனா ரங்கசாமி இவரை தானே நம்புகிறார் !!

தேர்தலில் சீட் கிடைக்காததால் கதறி அழுத பாஜக பிரமுகர்.

சீட் தரலை என்றால் வேற கட்சிக்கு போவது தானே பழக்கம் புதுசா இருக்கு!!