தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

அதிதி சங்கர்

20240811182338707.jpeg

தெலுங்கு படம் ஒன்றில் அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

திரிஷா

20240811182622784.jpeg

விஜய் நடிக்கும் கடைசி படத்தில் விஜய்க்கு ஜோடி சமந்தா. ஆனால், நீங்கள் நடிக்கும் கடைசி படத்தில் நான் இல்லை என்றால் எப்படி என்று திரிஷா அடம் பிடிக்கிறாராம். திரிஷாவுக்கு என்று புதிய கேரக்டரை உருவாக்க விஜய் இயக்குனருக்கு யோசனை சொல்லி இருக்கிறாராம்.

ஜான்வி கபூர்

20240811183409849.jpg

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கிறது. ஜான்வி கபூர் திட்டம் முன்னணி நடிகைகளை தங்கள் வாய்ப்பு போய்விடுமோ என்று இளமை ததும்பும் கேரக்டர்களில் நடித்து கதற விடுவது என்பதுதான் திட்டமாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20240811183647847.jpeg

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்போது மார்க்கெட் கொஞ்சம் டல் தான். எனவே கதாநாயகி வேடம் இல்லாவிட்டாலும் ஏதாவது முக்கிய கேரக்டர் என்றாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் சொல்லி வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ்

20240811184938439.jpeg

தற்சமயம் நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி யாரையாவது காதலித்தால் உங்களை நானே கூப்பிட்டு சொல்வேன் என்று நிருபர்களிடம் சொல்லி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மஞ்சு வாரியார்

20240811185155748.jpg

வேட்டையன் படத்தில் ரஜினி மஞ்சு வாரியார் குத்தாட்டம் பாடல் பரபரப்பாக பேசப்படுமாம்.

தமன்னா

20240811184625730.jpeg

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தமன்னா இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இதுவரை ஐந்தாயிரம் இருக்குமாம். ஆனால், அதை வெளியிட விரும்பாமல் அவர்கள் இதயத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களாம் இது தமன்னா காதலர் சொன்ன ஸ்டேட்மெண்ட்.

அம்மா தீபிகா படுகோன்

20240811185701866.jpeg

ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை தீபிகா படுகோன். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து தீபிகா படுகோன் அம்மாவாகி விட்டார்.

சுட சுட

லைலா

அஜித்தை பின்னால் அமர வைத்து பைக் ஓட்ட ஆசை என்கிறார் நடிகை லைலா.

மகாராணி

விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் நயன்தாரா நடிப்பில் மகாராணி என்ற படத்தை இயக்கப் போகிறார்.

ஸ்ரேயா

கங்குவா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார் 42 வயதாகும் ஸ்ரேயா.