தொடர்கள்
பொது
" கனவாகி போன ஊட்டி இரண்டாவது சீசன் " ஸ்வேதா அப்புதாஸ் .

ஊட்டி அருமையான குளு குளு கால சூழ்நிலை .

20240812235945901.jpg

ஊட்டியை விசிட் செய்வது ஏப்ரல், மே மாதம் என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் . அப்பொழுது தான் சீசன் களைகட்டி இருக்கும் கோடை விழா நடக்கும்.

20240813000035724.jpg

செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது சீசன் களைகட்டுவது பற்றி பலருக்கு தெரிவது இல்லை .

தென் மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடித்து செப்டம்பர் மாதம் சற்று விலகி பளிச் காலநிலை எட்டி பார்க்கும்போது ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்குவது ஒரு சிறப்பான ஒன்று .

20240813000332743.jpgஇரண்டாவது சீசன் களை கட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் .

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த சீசனில் தான் ஊட்டிக்கு வருவது வழக்கம் .

தற்போது அவர்களின் வருகை மிக குறைவு .

தமிழக சுற்றுலா கழகம் சார்பாக மாவட்ட நிர்வாகம் பொட்டானிக்கல் கர்டெனில் சில நிகழ்ச்சிகள் நடத்தி வந்தன .

அண்ணா ஸ்டேடியத்தில் நட்சத்திர நிகழ்வுகள் நடந்து வந்தன .

தற்போது அது மிஸ்ஸிங் .

20240813000428941.jpg

தேயிலை விழா ஸ்ட்ரீட் ஷாப்பிங் ஷோ படகு இல்லத்தில் சுற்றுலாக்களை கவர நிகழ்வுகள் இல்லாமல் போனது .

விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறும்போது ,

20240813000459787.jpg

"ஊட்டியில் செகண்ட் சீசன் ஒரு காலத்தில் மிக சிறப்பாக இருக்கும் . தற்போது எந்த நடவடிக்கைக்கும் இல்லாமல் வெரிச்சோடி போய் இருக்கிறது .

எந்த நிகழ்வுகளும்இல்லை இதை பற்றி எவருக்கும் கவலை இல்லை .

உள்ளூர் உணவு திருவிழா , தோடர் , குறும்பர் , கோத்தர்களின் கலாச்சார நடனம் .

இசை நிகழ்வுகள் நடந்த காலம் கனவாகி போய்விட்டது .

செகண்ட் சீசன் இதமான சீசன் உள்ளுர் வாசிகள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தினால் நன்றாக இருக்கும் .

கோடை சீசனில் உள்ளூர் வாசிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் போய்விடுகிறது .

20240813001611407.jpg

இந்த இரண்டாவது சீசனில் தான் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பை கொடுக்கலாம் .

20240813001649942.jpg

கமர்ஷியல் சாலையில் இசை நிகழ்வு கூட நடத்தலாம் .எதுவமே இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயம் " என்று கூறினார் .

சுற்றுசூழல் ஆர்வலர் கிளவுஸ் கூறுகிறார் ,

2024081300064613.jpg

" என்னை பொறுத்தவரை கோடை சீசன் செகன்ட் சீசன் காணாமல் போய்விட்டது .தற்போது வருடம் முழுவதும் சீசன் தான் .எப்பொழுதும் சுற்றுலாக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் .

அதே போல கால மாற்றமும் சரியாக இருக்கிறது . எப்போழுது வெயில் அடிக்கிறது எப்பொழுது மழை கொட்டுகிறது என்று தெரிவதில்லை .

திடீர் குளிர் காற்று என்று மோசமாக இருக்கிறது .உள்ளூர் வாசிகள் இங்கிருந்து வெளியூரில் செட்டில் ஆகிவிட்டனர் .

செப்டம்பர் மாதத்தில் தான் அவலாஞ்சி ஏரியில் டிரவுட் மீன் உருவாகி துள்ளி குதிக்கும் .

20240813000726787.jpg

தென் மேற்கு பருவ மழை விடைபெற்றவுடன் டிரவுட் மீன் முட்டையிட்டு குஞ்சி பொரித்து ஓடைகளில் துள்ளி குதிப்பதை பார்க்க முடியும் .

இங்கு தான் 1863 ஆம் வருடம் பிரிட்டிஷ் ஆங்கிளர் டிரவுட் மீன் குஞ்சி பொரிப்பகத்தை துவங்கினார் .

20240813000812420.jpg

பின்னர் 1907 ஆம் ஆண்டு ஹென்றி சார்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேயர் டிரவுட் மீன் பொரிக்கும் பண்ணை துவக்கினார் .

இந்த பண்ணை கடல் மட்டத்தில் இருந்து 2,036 மீட்டர் உயரத்தில் உள்ளது .டிரவுட் மீன் 15 டிகிரி மற்றும் 20 டிகிரி சீதோஷண நிலையில் தான் உயிர்வாழும் .இந்த குஞ்சி பொரிப்பகத்தில் வருடத்திற்கு அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை குஞ்சி பொரிக்கும் திறன் கொண்டது .

20240813000857997.jpg

2019 ஆகஸ்ட் 8 ஆம் தேதி இங்கு ஏற்பட்ட மிக பெரிய மேக வெடிப்பில் 820 மி மீ மழை கொட்டி அவலாஞ்சி பாதி காணாமல் போனது அதே போல டிரவுட் மீன் குஞ்சி பொரிப்பகம் காணாமல் போய்விட்டது .

அத்தோடு செப்டம்பர் சீசனும் காணாமல் போய்விட்டது .

தற்போது மீண்டும் பொரிப்பகம் கட்டப்பட்டுள்ளது விரைவில் டிரவுட் மீன் குஞ்சிகள் பொரிக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறேன் அதே போல மீண்டும் இரண்டாவது சீசன் களைகட்டினால் அருமை தான் " என்கிறார் .

20240813000926445.jpg

செப்டம்பர் மாதத்தில் தான் பள்ளிகள் யிடையே விளையாட்டு போட்டிகள் நடக்கும் .அது ஒன்று தான் தற்போது நடக்கிறது .

காணாமல் போன ஊட்டி இரண்டாவது சீசனை புதிய கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு மீட்டெடுப்பாரா பார்க்கலாம் .