தொடர்கள்
கதை
உப்பா ? உறவா ? – பா.அய்யாசாமி

20240813184338461.jpg

அடுப்படியில் சாம்பார் கொதிநிலையில் இருந்தது, மூத்த மருமகள் மாலதியும்
உள்ளுக்குள் கொதித்துக்கொண்டியிருந்தாள்.
முந்தைய நாள்வரை தான்கோலோச்சிய வீட்டில் பங்கு பெற இன்னொருவள் வந்து
விட்டாள் என பொறாமையில் தகித்தது மாலதிக்கு. இன்று அவளைச் சமைக்க வேற சொல்லலிருக்கிறாள் அத்தை எனும்போது மாலதிக்கு பொறுக்கமுடியவில்லை.
ஆறு வருடங்களாக கூட்டுக்குடும்பமாக இருந்து எல்லா வற்றையும் பார்த்துபார்த்து செய்தும் இளைவளாக வீட்டிற்கு வந்த தேவியை இரண்டே நாளில் அத்தை
பாராட்டுவதும், அவளைப் புகழ்ந்துப் பேசுவதை நினைத்துதான் தன் மனவக்கிரங்களை
கொட்டி வருகிறாள் மாலதி.
“சமைக்கட்டும் பார்ப்போம்,அப்போ தெரியும் என் அருமை என மனத்தினுள்
நினைத்திருந்தாள் மாலதி. உப்பு அதிகமாயிட்டு என சாம்பாரைத் தவிர்தாள் அத்தை, புளிப்பு என மாமா தவிர்த்தார், ஆனாலும் சமையல் சுவையாக இருந்தது என ஆறுதலுக்காக தேவியிடம் சொன்னதும் மனத்திற்குள் மகிழ்ந்தாள் மாலதி.
அன்றைய் இரவு பக்கத்து வீட்டிலிலிருந்து வந்த அத்தையின் தூரத்து உறவினர், “
என்ன? உன் சின்ன மருமக கைப்பக்குவம் தெருவே பெருமையாகப் பேசுது” என்றாள்
கேலி செய்கிறாளோ என நினைத்த அத்தை அதற்கென்ன பழகிக் கொள்வாள் என அவளிடம் கடுகடுத்தாள்.
இல்லை இல்லை நான் உண்மையாகச் சொல்கிறேன் என்றவள், உன் வீட்டு
வேலைக்காரி சாந்திதான் கூறினாள். என்கிட்ட மட்டுமில்ல நம்ம காலனியிலே
எல்லார்கிட்டேயும் அப்படித்தான் சொன்னாள் என சொன்னதும்,
வரட்டும்,வரட்டும் என நினைக்கும் போதே சாந்தி உள்ளே வந்தாள்.
“என்ன சாந்தி? எங்க வீட்டு விசயத்தையெல்லாம் வெளியிலே தண்டோரா போடுறியா?
ஒழுங்காக வேலை பார்க்கிறதுன்னா பாரு, இல்லை நடையைக்கட்டு என எச்சரித்தாள்
அத்தை கோபமாக அம்மாடி! அத்தையை இப்படி பார்த்ததில்லையே சின்ன மருமகளுக்கு ஆதரவா இப்படி பொங்கிறாங்க என பொறாமை கொழுந்து விட்டெறிந்தது மாலதிக்கு.
அம்மா.. நிசத்தைதான் சொல்கிறேன், அவங்க கொடுத்த சாம்பார் சாதம் அப்படி
இருந்திச்சும்மா.. என்றாள் சாந்தி.
சாம்பார் சாதாமா ? இன்று எங்க வீட்டிலே செய்யவே இல்லையே என்றாள் அத்தை.

ஓ ஓ இது வேற நடந்திருக்கா! மாட்டினாள் தேவி, என நினைத்தாள் மாலதி. இவர்களின்
பேச்சை காதில் வாங்கிய இளையவள், அத்தை ! சாம்பார் சாதம், அது நம்ம வீட்டிலே செய்ததுதான், நான்தான் கொடுத்தேன்.
“ இன்னைக்கு இருக்கு இவளுக்கு: என காதுகளை தீட்டிக்கொண்டு காத்தியிருந்தாள் மாலதி..
“ லையிலே செய்த சாம்பாரில் உப்பு அதிகமாயிட்டு இல்லே, என்று சொல்லும்போதே மாலதியைப் பார்த்தவள்,
ஆமாம்...ம் அதற்கென்ன ?
அதைத்தான் சிறிது காய்களை வெட்டிப்போட்டு சிறிது கோதுமை மாவையும் பிசைந்து உருட்டிப்போட்டு சாதம் கொண்டு கிளறி சாந்திக்கு கொடுத்து விட்டேன் அத்தைஅதைத்தான் சொல்கிறாள் என்றாள் தேவி.
சமர்த்துதான்! என கோரசாக சொன்னார்கள் அத்தையும் உறவுக்காரரும்.
மாலதிக்கு மட்டும் முகம் காற்றுப்போன பலூன் மாதிரி சுருங்கிப்போனது.
அந்த சமயத்தில் அலைபேசியில் அழைப்பு மதுரையிலிருக்கும் மாலதியின் அம்மா
வீட்டிலிருந்து வர.. அப்படியா? என்னாச்சு ? என கேட்டு கண் கலங்கினாள் மாலதி.
என்ன ஆனது என்று அனைவரும் கேட்டும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தவள் பின்
தேறியவாறு, எங்க அம்மாவிற்கு உடம்பிற்கு முடியலையாம் அத்தை என்றதும்,
என்னவாயிற்றாம் ? என குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் கவலைத்
தொற்றியது.
கை கால் வீங்கிடுச்சாம், உப்பு அதிகமாக உடம்பிலே சேர்ந்ததினாலே என்று சொல்லும் போதே அழுகை வந்தது மாலதிக்கு.
இப்போ போய் பார்க்கவும் போகவும் முடியாத சூழல், கணவரும் ஊரில் இல்லாத
நிலை என வருத்தப்பட்டபோது,
பயப்படாதீங்க அக்கா, எனக்கு தெரிஞ்ச டாக்டர் பிரண்டு மதுரையிலே இருக்கிறார்கள்
அவர்களை பக்கத்திலிருந்து கவனிக்கச் சொல்கிறேன், நீங்க நாளைக்குப்போய்
பார்த்துட்டு வாங்க என்றவள்.
“ வயதான காலத்திலே ஏன் தனியாக இருக்கனும்? எங்க அண்ணன் வீடு இருக்கு
அங்கேயே அவர்களை இருக்கச்சொல்லுங்கள், உங்களுக்கு அம்மா என்றால்
எங்களுக்குந்தானே! அவர்களோடு சேர்ந்தேயிருக்கலாம் என சொல்லும்போதே
உடைந்துப் போனாள் மாலதி.

தேவியை தனியே அழைத்துப்போன மாலதி, “ நான் போட்ட உப்புதாண்டி அங்கே
என் அம்மாவிற்கு கூடிடுச்சு” என்னை மன்னித்திடும்மா.. என்றாள்.
தெரியும்மக்கா, நீங்க போட்டதை நானும் பாத்துவிட்டேன் என்றாள் தேவி.
பார்த்த பின்பும் அதை யாரிடமும் சொல்லவில்லையே, ஏன்?
என்னக்கா உப்பை போட்டால் என்ன ? சாப்பாட்டில் மட்டுந்தான் கரிக்கும், சரி
செய்துகிடலாம், ஆனால் உறவு ? என்றவள்
“இல்லக்கா யாருக்கும் என்னை ப்ரூஃப் பண்ண இங்கே வரல” நான் என் வாழ்க்கையை வாழ வந்திருக்கேன், அதனால நீங்கள் செய்ததை நான் தவறாக நினைக்கலை,
அறியாமையினால் ஏற்படும் இயல்புகளில் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்றாள். என்னத்தெளிவுடீ உனக்கு! என தேவின் கன்னத்தை வழித்து நெற்றியில் சொடுக்கி
திருஷ்டி கழித்துப்போட்டாள் மாலதி.