தொடர்கள்
அரசியல்
நம் ஆட்சி மீது அதிருப்தி இருக்கு ஆர்.எஸ்.பாரதி - விகடகவியார்

20240811190131519.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் சூடாக பால் கொழுக்கட்டை தந்த ஆபீஸ் பையன் "நீங்கள் பாஜக, அதிமுக கூட்டணி என்று சொல்கிறீர்கள்.

எடப்பாடி நிருபர்களிடம் அரைத்த மாவையே அரைக்காதீர்கள் என்று சொல்கிறாரே "என்று கேட்க விகடகவியார் பதில் சொல்லாமல் பால் கொழுக்கட்டையை ருசி பார்த்தார்.

அமெரிக்காவிலிருந்து கட்சியை சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஏவா வேலு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரிடம் காணொளி மூலம் ஆலோசனை செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அவர் எல்லா மாவட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் மக்களிடம் ஆலோசனை செய்யச் சொன்னேனே அது என்ன ஆனது ? என்று கேட்க அப்போது அமைச்சர்கள் எல்லாம் சரியா தான் போகுது தலைவரே என்று சொல்ல

ஆர்.எஸ்.பாரதி "தளபதி அப்படியெல்லாம் சரியா போகிறது என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 29 சதவீதம் கட்சிக்காரர்களே நம் மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் இவர்கள் செயல்பாடு தான் காரணம் மற்றபடி உங்கள் மீது மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் மரியாதை இருக்கிறது "என்று உண்மையை உடைத்து சொல்ல அமைச்சர்கள் அதன் பிறகு ஆமோதித்தார்கள்.

ஆர்.எஸ்.பாரதி கட்சியை சீரமைக்க நிர்வாகிகள் நிறைய பேரை நீங்கள் மாற்ற வேண்டும். கட்சிக்கு உழைக்கும் உண்மையான நிர்வாகிகள் பட்டியலை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம் என்று சொன்னார். "அதற்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன சொன்னார் ?"என்று நாம் கேட்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் செப்டம்பர் 17-ஆம் தேதி முப்பெரும் விழா அந்த கொண்டாட்டம் எல்லாம் முடியட்டும் 20-ஆம் தேதி நாம் அதிரடி மாற்றங்களுக்கு தயார் ஆகலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதுபோல் அடிக்கடி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்.

எதுவும் நடக்கவில்லை என்று நாம் சொன்னதும் விமானம் ஏறுவதற்கு முன்பு வெயிட் அண்ட் சி என்று சொன்னாரே முதல்வர் எனவே வெயிட் பண்ணுங்கள் என்றார் விகடகவியார்.

விஜய் கட்சி விஷயத்துக்கு வாரும் என்று நாம் சொன்னதும் கட்சிச் சின்னம் அலப்பறை மாநாட்டுக்கு 33 கேள்வி கேட்டு காவல்துறை அவரை தாளித்து இருக்கிறது. அவருக்கு இதெல்லாம் புது அனுபவம் அதே சமயம் ஆளுங்கட்சி அவரைப் பார்த்து பயப்படுகிறது என்று அவருக்கு தெரிகிறது எனவே நாம் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் நடிகர் விஜய்.

மாற்றுக் கட்சியினர் விஜய் கட்சியில் சேருவார்கள் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது என்று நாம் சொன்னதும்

விஜயும் மூத்த அரசியல் தலைவர்களின் ஆலோசனை தேவை என்று விரும்புகிறார்.

அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் இவர் திமுக, மதிமுக என்று போய் கடைசியாக தற்சமயம் அதிமுகவில் அடைக்கலம். இதேபோல் பல கட்சிகள் கண்ட பழகருப்பையா ஆகியோர் பெயர் அடிபடுகிறது அதெல்லாம் சபைக்கு வந்தால்தான் உண்மை தெரியும் என்று விகடகவியார் சொல்ல சரி ஆளுங்கட்சி விஜயின் அரசியல் வரவை எப்படி பார்க்கிறது என்று நாம் கேட்க உளவுத்துறை தகவல் படி திமுக ஓட்டை தான் அவர் பங்கு போடுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து வருகிறது ஆளுங்கட்சி .

அதனால் தான் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் விஜய் கட்சி மாநாட்டுக்கு தொந்தரவா என்ற கேள்விக்கு டென்ஷன் ஆகி விஜய்யிடம் போய் இந்த கேள்வியை கேளுங்கள் யார் தொந்தரவு செய்கிறார்கள் என்று முதலில் அவர் சொல்லட்டும் என்று பதில் சொன்னார்.

கட்சிக்கொடி கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வந்த பிறகும் விஜய் வெளிப்படையாக கருத்து சொல்லாமல் ஒதுங்குகிறார் இவர் எப்படி அரசியலில் சமாளிப்பார் இவரை நம்பலாமா என்ற சந்தேகமும் சிலருக்கு வரத் தொடங்கி இருக்கிறது என்றார் விகடகவியார்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறாரே ?"என்று நாம் கேட்டதும் "இதற்கு இரண்டு பதில்கள் இருக்கிறது.

முதல் பதில் திமுக கூட்டணியை விட்டு தொல்.திருமாவளவன் போக மாட்டார். இந்த முறை சட்டசபை கூடுதல் இடங்கள் கேட்பதற்கு தொல்.திருமாவளவன் செய்யும் அரசியல் என்று ஒரு பதில் இன்னொரு பதில் இப்போதைக்கு திமுகவின் செல்வாக்கு மக்களிடம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை .அதிமுகவுடன் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று நம்புகிறார் தொல் திருமாவளவன் எனவே திருமாவளவன் முடிவு போகப் போகத் தான் தெரியும் "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

புறப்படுவதற்கு முன்பு விகடகவியார் சொன்ன இரண்டு தகவல்கள்

கோட் படத்தில் விஜயகாந்தை ஏ ஒன் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு நிறைய வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கும் இதைப் பயன்படுத்தினால் என்ன என்று யோசிக்கிறது

தேமுதிக அதேபோல் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ஸ்மிருதி ராணி ஒதுக்கப்பட்டு விட்டார் கண்டு கொள்ளவில்லை என்றெல்லாம் விமர்சனம் வந்த வந்தது. ஆனால், அதெல்லாம் இல்லையாம் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அவர்தானம். .