தொடர்கள்
சோகம்
சீதாராம் யெச்சூரி

20240813210042690.jpeg

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதோடு தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர். தமிழகத்தில் பல தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு பணியாற்றியவர்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீதாராம் யெச்சூரி. இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழி நடத்தி அகில இந்திய அளவில் சக்தி மிக்க அமைப்பாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
1952 இல் சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. அவசரநிலை காலத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டார். 1975 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் 1985இல் மத்திய குழு உறுப்பினர். 1992 முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்.2015 முதல் பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டுஇன்றைய சூழ்நிலையில் இயக்கத்தின் முன் உள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர் சீதாராம் யெச்சூரி.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி நூறு ஆண்டுகள் கடந்து இருக்கும் நிலையில் அதன் ஆளுமையாக வலம் வந்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி முக்கியமானவர். இரண்டு முறை மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தனது வாதங்களை அழுத்தமாக பதிவு செய்தவர் சீதாராம் யெச்சூரி.
2015 இல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரைமீது விவாதத்தின் போது அந்த உரையை கடுமையாக விமர்சனம் செய்தவர் சீதாராம் யெச்சூரி. அந்த உரையில் அவர் பல திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் அப்போது மாநிலங்களவைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடு அந்த திருத்தங்களை வலியுறுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார். அப்போது யெச்சூரி உங்கள் சங்கடம் எனக்கு புரிகிறது திருத்தங்களை திரும்ப பெறுவது என்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல எனவே எனவே வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
72 வயதான சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார்