தொடர்கள்
அரசியல்
மிஸ்டர் ரீல்

20240813183713619.jpeg

துணை முதல்வர் பதவி பற்றி உதயநிதி ஸ்டாலின்

மிஸ்டர் ரீல் காணவில்லை என்று இந்த இதழில் அறிவியுங்கள் என்று ஆசிரியர் சொன்னது ஆபீஸ் பையன் மூலம் மிஸ்டர் ரீலுக்கு செய்தி லீக்காக வம்பே வேண்டாம் என்று டூட்டியில் ஜாயின் பண்ணினார்.

உதயநிதி ஸ்டாலினை மிஸ்டர் ரீல் பார்க்க போனபோது "நீங்க என் தாத்தா மாதிரி உங்கள மாதிரி அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அட்வைஸ் எல்லாம் எனக்கு தேவை "என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

மிஸ்டர் ரீல் உதயநிதி ஸ்டாலினிடம் "தாத்தா மாதிரி என்று சொல்கிறீர்களே எதிர் முனையில் அமைச்சர் துரைமுருகன் தானே "என்று கேட்க

"இல்லை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு விடுத்தார், அவரிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன்" என்று சொன்னார் உதயநிதி.

"சரி அது இருக்கட்டும் துணை முதல்வர் பதவி எப்போ தான் உங்களுக்கு கிடைக்கும் "என்று கேட்க" மிஸ்டர் ரீல் எனக்கு எதற்கு துணை முதல்வர் பதவி நான் முதலமைச்சரை விட அதிக அதிகாரம் படைத்தவனாக இருக்கிறேன். முதல்வரே நான் சொன்னா மந்திரிங்க எல்லாம் கேட்க மாட்டாங்க நீ பேசு என்கிறார்.

சில அமைச்சர்கள் முதல்வர் வந்தால் கூட எழுந்து நிற்க மாட்டார்கள் நான் போனால் எழுந்திருப்பார்கள். இதனால் முதல்வரே நீ கூட வாப்பா அப்பதான் எனக்கு மரியாதை என்கிறார்.

துரைமுருகன் தான் துணை முதல்வர் பதவி வேண்டும் என்கிறார் இதுதான் நிஜம் "என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல "ஆனா அவரை நீங்கள் விருப்ப ஓய்வில் செல்ல சொல்கிறீர்களே "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு அப்புறம் தான் அவர் துணை முதல்வர் பதவி விஷயத்தை பேசுவதை நிறுத்தினார். இதுவும் என் ஐடியா தான் "என்று சொல்லி சிரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

"ஆனா இளைஞர்களுக்கு வழி விடுங்க வழிவிடுங்க என்று அடிக்கடி சொல்கிறீர்களே "மூத்த அமைச்சர்கள் எல்லாம் ரொம்பவும் குண்டாக வாசலை வழிமறித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்போது இளைஞர் அணிக்கு வழி விடுங்கள் என்று சொன்னேன் அது எப்படி உல்டாவாகி விட்டது "என்று சொல்லி சிரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

"உண்மையிலேயே நீங்க சொல்வது உண்மையா ? என்று மிஸ்டர்ரீல் கேட்க "நான் சொன்னது தான் உண்மை ஆனால், இப்போது அது வேறு மாதிரி ஆகிவிட்டது.

நேற்று துரைமுருகன் நான் இளைஞர்களுக்கு வழி விட தயாராகி விட்டேன் எனக்கு பதில் என் பையனை பொதுச் செயலாளர் ஆக்கிவிடு என்கிறார் என்னத்தை சொல்ல கட்சி ஆட்சி எல்லாமே டார்ச்சர் தான்.

இந்த மீம்ஸ் போடறவங்க என்னதான் ரொம்ப கலாய்க்கிறாங்க "என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல "அந்தக் கார் ரேஸ் அந்த நடிகை விஷயம் சொல்றீங்களா" என்று மிஸ்டர் ரீல் கேட்க "அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என் பையன் இன்பா பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பிக்கப் போகிறார்கள் நற்பணி மன்ற உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட 10 சதவீதம் வாய்ப்பு இளைஞர் அணிக்கு 30 சதவீதம் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் உண்மையான கட்சிக்காரர்களாக இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு மிச்சம் மீதி என்ற ஒரு பார்முலா வைத்திருக்கிறோம் அதுதான் வரும் சட்டசபை தேர்தலில் செயல்படுத்த இருக்கிறோம்.

இந்த விஷயம் லைட்டா லீக்காயிடுச்சு அதனால் தான் மது ஒழிப்பு மாநாடு என்று எங்களை கலாய்க்கிறார் திருமா "என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல "சரி மாநாட்டுக்கு நீங்கள் போகப் போகிறீர்களா" என்று மிஸ்டர் ரீல் கேட்க "கண்டிப்பாக போவேன் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என்றும் அறிவிப்பு வெளியிடுவேன்.

ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்து எத்தனை முதல் கையெழுத்து போட்டு இருக்கோம் அது மாதிரி தான் இது" என்று சொல்லி சிரித்தார் திருமாவளவன் ரொம்ப அப்பாவி தான் போல இருக்கு என்றபடி புறப்பட்டார் மிஸ்டர்ரீல்.