தொடர்கள்
ஆன்மீகம்
தினம் தினம் திவ்ய அனுபவம் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240812200807700.jpg

கண்ணிநுண் சிறுதாம்பு தனியன்

அவிதி3த விஷயாந்தர: ச்சடா2ரே:

உபநிஷதா3ம் உபகா3நமாத்ர போ4க3:

அபி ச கு3ணவஸாத் ததே3கஸேஷீ

மது4ரகவிர்ஹ்ரு'த3யே மமாவிரஸ்து.

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,

மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை

ஆள்வார் அவரே யரண்.

- ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

நாம் பெருமாளுக்கு மட்டும் அடியவர்கள் அல்லர்

பெருமாளின் அடியவருக்கெல்லாம் அடியவர்

நம் ஆச்சார்யனுக்கே நாம் அடிமை

இதுதான் ஜீவாத்மாவுக்கு முக்கியமான தன்மை

நம்மாழ்வாரை தவிர வேறு தெய்வத்தையும் அறியாதவர்

நம்மாழ்வாரே தனக்கு கதி என்று குருவருளால் திருவருள் என்பதை காட்டி

தன் ஆச்சார்யனையே பாடிய மதுரகவி ஆழ்வாருடைய நம் ஆழ்வாரின் பெருமைகளை சொல்லும் 11 பாசுரங்கள்

உரலோடு கட்டுண்ட கண்ணனைவிட

மிகமிக இனிமையானவர் நம்மாழ்வார்

கண்ணிநுண் சிறுதாம்பு முதல் பாசுரம்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால்

கட்டு உண்ணப் பண்ணிய பெருமாயன்

என்னப்பனில்

நண்ணித் தென் குருகூர்

நம்பி என்றக்கால்

அண்ணிக்கும் அமுதூறும்

என்நாவுக்கே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

நம்மாழ்வார் திருவடிகளில் சரணாகதி செய்வதுதான்

நாம் உய்வடைவதற்கான வழி!

கண்ணிநுண் சிறுதாம்பு இரண்டாம் பாசுரம்

நாவினால் நவிற்று

இன்பம் எய்தினேன்

மேவினேன்

அவன் பொன் அடி மெய்ம்மையே

தேவு மற்றறியேன்

குருகூர் நம்பி

பாவின் இன் இசை

பாடித் திரிவனே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

நம்மாழ்வாருக்கே காட்சி தராத பெருமாள் மதுரகவி ஆழ்வாருக்கு காட்சி தந்தது ஏன்?

கண்ணிநுண் சிறுதாம்பு இரண்டாம் பாசுரம்

நாவினால் நவிற்று

இன்பம் எய்தினேன்

மேவினேன்

அவன் பொன் அடி மெய்ம்மையே

தேவு மற்றறியேன்

குருகூர் நம்பி

பாவின் இன் இசை

பாடித் திரிவனே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

கண்ணிநுண் சிறுதாம்பு நான்காம் பாசுரம்

நன்மையால் மிக்க

நான்மறை ஆளர்கள்

புன்மை ஆகக்

கருதுவர் ஆதலில்

அன்னையாய் அத்தனாய்

என்னை ஆண்டிடும் தன்மையான்

சடகோபன்

என் நம்பியே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

கண்ணிநுண் சிறுதாம்பு ஐந்தாம் பாசுரம்

நம்பினேன்

பிறர் நன் பொருள் தன்னையும்

நம்பினேன்

மட வாரையும் முன் எலாம்

செம் பொன் மாடத்

திருக் குருகூர் நம்பிக்கன்பனாய்

அடியேன்

சதிர்த்தேன் இன்றே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

நம்மாழ்வார் அனுகிரஹத்துக்கும்

பெருமாள் அனுகிரஹத்துக்கும்

6 வித்தியாசத்தை சொல்கிறார் மதுரகவி ஆழ்வார்!

கண்ணிநுண் சிறுதாம்பு ஆறாம் பாசுரம்

இன்று தொட்டும்

எழுமையும் எம்பிரான்

நின்று தன் புகழ்

ஏத்த அருளினான்

குன்ற மாடத்

திருக் குருகூர் நம்பி

என்றும் என்னை

இகழ் வுலன் காண்மினே.

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

நம்மாழ்வார் திருவடிகளை எப்போது பணிந்தேனோ...

அப்போதே என் பாவங்கள் எல்லாம்

உருத்தெரியாமல் மாய்ந்து போய்விட்டன!

கண்ணிநுண் சிறுதாம்பு ஏழாம் பாசுரம்

கண்டு கொண்டு என்னைக்

காரி மாறப்பிரான்

பண்டை வல்வினை

பாற்றி அருளினான்

எண்டிசையும்

அறிய இயம்புகேன்

ஒண் தமிழ்ச்

சடகோபன் அருளையே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்

உலகத்திலேயே மிக உயர்ந்தது ஆச்சார்யானின் அனுகிரஹம்தான்

கண்ணிநுண் சிறுதாம்பு எட்டாம் பாசுரம்

அருள் கொண்டாடும்

அடியவர் இன்புற

அருளினான்

அவ்வருமறையின் பொருள்

அருள் கொண்டு

ஆயிரம் இன் தமிழ் பாடினான்

அருள் கண்டீர்

இவ்வுலகினில் மிக்கதே

- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்