தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற வைட்லைன் குரூப்
மார்க்கெட்டிங் நிறுவனத்தில் காதலியுடன் ஒரு
நாள்கூட டேட்டிங்கூட போக முடியாத அளவுக்கு, இந்நிறுவனத்தில்
பிசியாக வேலை செய்து வருகிறேன்’ என்று நிர்வாகத்திடம் நேரடியாக
புகார் அளித்துள்ளார். எங்களது நிறுவன ஊழியர்கள் டேட்டிங் செய்வதற்கு,
டிண்டர் விடுமுறையைப் பயன்படுத்தலாம். மேலும், இந்நிறுவனத்தில்
வேலை பார்க்கும் ஊழியர்கள் காதலில் இருப்பது, அவர்களுடைய
மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்களின் மகிழ்ச்சியே, இந்நிறுவனத்தின்
உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவும் என்று நம்புகிறோம்.
டிண்டர் லீவு எடுத்து டேட்டிங் செல்லும் ஊழியர்கள், ஒரு வாரத்துக்கு
முன் நோட்டீஸ் மூலம் கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த
வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது. லீவு மட்டுமின்றி, தங்களின் நிறுவன
ஊழியர்களுக்கு டிண்டர் பிளாட்டினம், டிண்டர் கோல்ட் ஆகியவற்றின் 6
மாத சந்தாவை வைட்லைன் குரூப் நிறுவனமே செலுத்துகிறது.
‘இந்த சலுகை எல்லாம் 2024-ம் ஆண்டு, ஜூலை 9 முதல் டிசம்பர் 31-ம்
தேதி வரை பணியில் சேரும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்’ என்று
வைட்லைன் குரூப் நிறுவன அறிவிப்பு டேட்டிங் பிரியர்களை உற்சாகபடுத்தி இருக்கிறது.
Leave a comment
Upload