சர்வதேச அளவில் போயிங் மற்றும் ஏர்பஸ் உள்பட பல்வேறு விமான சேவை நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக, உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, சீன அரசின் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், முதன்முறையாக சி-919 என்ற பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது.
சீனாவில் முதன்முறையாக தயாரான சி-919 பயணிகள் விமானம் கடந்த 28-ம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானம் வெற்றிகரமாக தனது வணிகரீதியான பயணத்தை துவங்கியது.
முதல் கட்டமாக, ஷாங்காயில் இருந்து பீஜிங் சென்ற சி-919 விமானத்தில் 128 பயணிகள் பறந்து சென்றனர். இந்த விமானம் 2 மணி 25 நிமிடங்களில் பீஜிங்கை சென்றடைந்தது. இந்த விமானம் சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளதாக சீன ஏர்லைன்ஸ் நிறுவனத் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.
உபரி தகவல் சுமார் ஐந்து மணி நாற்பத் நிமிட நேரத்தில் இரயிலிலேயே பீஜிங்கிற்கும் ஷாங்காய்க்கும் போய் விடலாம். அது தான் சீனாவின் உள்கட்டமைப்பின் பலம்.
Leave a comment
Upload