தொடர்கள்
கதை
மும்பை முகுந்த் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

20250003194811334.jpeg

ரோட்டரி கிளப் மற்றும் பெரிய வியாபாரிகள் ஸ்பான்சர் மூலம்

மன்னார்குடி நேஷனல் ஹை ஸ்கூல் கிரவுண்ட் ல வருடா வருடம் கிறிஸ்துமஸ் லீவ் போது நடக்கும்.கிரிக்கெட் திருவிழா தான்.ய மன்னார்குடி பிரீமியர் லீக் கிரிக்கெட் மேட்ச் 10டீம்க்கும் நடக்கும்.

இரண்டாம் தெரு மன்னார்குடி ஆன்டி ராபர்ட்ஸ் ன்னு பெயர் வாங்கிய கோச், சந்திரமௌலி . இப்படிக் கவலையா, அதுவும் அவன்வீட்டு,இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை.

"கவலைப்ப டாதே சகோதரா நம்ம ஓத்தைத்தெரு பிள்ளையார் பாத்துபாரடா"

காதல் கோட்டை படப் பாடலை சொந்த மெட்டில் பாடிக்கொண்டேவந்தார்கள். இரண்டாம் தெரு கேப்டன் சீமாச்சும் கூடவே முகுந்ததும்

"இரண்டு வருடமா உங்களுக்கு ஸ்பொன்சர் பண்ணி ஜெயிக்கமாபோயிடீங்க.?இந்த தடவை ஜெயிக்கல அவ்வளவு தான்".

M PL ல் தன் டீமுக்கு ஸ்பான்சர் செய்த, உசிலமணி சைஸ்,ஏத்தகுடி எதிராஜ் ஐயங்கார் காச் மூச்ன்னு மௌலியிடம் கத்தி கொண்டுருந்தார்.

மௌலிக்குப் பயம் தொற்றிக் கொண்டது.

முலந்து லிருந்து வந்த முகுந்த் கையில் ஒரு வித்தியாசமான பேட்டும் கையுமா, அவனுடன் வந்தவனைப் பார்த்து “யாருடா சீனு இது”?

முகுந்த் சீனுவோட கசின். லெக் ஸ்பின்னர் என்று அறிமுகப் படுத்தினான் ஷாஹுல்.

A பிரிவில் 5 டீம் B பிரிவில் 5 டீம் .

A பிரிவில் மேல இரண்டாம் தெருவுடன், ஹரித்திரா நதி.டீம் முதல் லீக் மேட்ச்.

.அந்த டீம் ஸ்டராங் .அதுவும் ஸ்ரீராம்,வெங்கிட்டு,குமார் ராஜு போன்றவர்கள்வெரி ஸ்டராங் பேட்டிங் லைன். ஆஸ்திரேலியா, நியூசிலந்து இரண்டும் சேர்ந்த கலவை டீம்ன்னு சொல்லுவா..

அதுவும் குமார் இருக்கானே அவன் பேட் கம்மின்ஸ்மாதிரி, அதே உயரம் . சீம் பௌலிங் 149.5 கி. மீ ஸ்பீட்.வெங்கிட்டு.ஸ்மித் மாதிரி

."கவலைபடாதே சீனு. இந்தத் தடவை கோப்பையை நாம தட்டறோம் என்றான் முகுந்த்.".

"இதென்ன கிட்டிபில் விளயாட்டா!.முகுந்தை கடித்தான் சீனு".

"இது வரைக்கும் எந்த மேட்ச் அவங்கள நாம ஜெயிச்சதில்லை தெரியுமா?

" இரண்டு வருடம் எல்லா டீம் கிட்டையும் செம அடி."

"ஹரித்திரா நதி டீம் இரண்டு தடவை சாம்பியன்டா.இப்ப ஹாட்ரிக் அடிக்கப் போறங்கா!ன்னு!.

மன்னாரகுடி டைம்ஸ் வேற, அவங்களைப் பக்கம் பக்கமா எழுதி புகழ்ந்து தள்ளி இருக்காங்க". நிறைய ஸ்பான்சர் வேறே.

"இருக்கட்டுமே.அதனால் என்ன? "அசால்டா சொன்னான் முகுந்த்.ஒன் மேல நம்பிக்கை வை". BELIVE YOURSELF.

மௌளிக்கு முகுந்த் இப்படிச் சொன்னதும் சுவரை விட்டு இறங்கி “ஹை முகுந்த் ஐ ஆம் மௌலி டீம் கோச் பாங்க்ல வொர்க் பண்றேன்”.

“ஐ ஆம் முகுந்த் அண்டர் 16 மும்பையில் விளையாடி இருக்கேன். “

,"எங்க டீம் ஒன்னும் அவ்வளவு ஸ்ட்ராங் கிடையாது. சுமாரான டீம்"உன்னை நம்பிதான் இருக்கம்டா"

"யாமிருக்கப் பயமேன்" பேட்டில் ஒட்டிருந்த ஸ்டிக்கர் வாசகத்தைக் காமிச்சான் முகுந்த்.

அப்படி இப்படின்னு ஒரு 15 பேர் தேத்தி, அன்னிக்கு ஐயங்கார் முன்னாடி டீம் செலக்ட் ஆனது.

"எதிராஜ் அய்யங்கார் ரொம்ப நல்லவருடா"

முகுந்த் ஐஸ் வைக்க,அவர் காலடி மண்ணை எடுத்து பூசி கொண்டனர்.எல்லோரும்.

"எஜமான் காலடி மண் எடுத்து "பாட்டைப் பாட ஆரம்பித்தான். முகுந்த்..

அய்யங்கார் முகத்தில் 1000 வாட் பல்ப் வெளிச்சம் மாதிரி சந்தோசம்.” முகுந்த் நீ லகான் படப் பாட்டைப் பாடுவேன்னு நினைச்சேன்”.

முதல் மேட்ச் முகுந்த் சீனு ஸ்ரீராம்மூணுபேரும்வீட்டில் பழையதுபிளஸ் மாவடு ஊறுகாய் புல்வெட்டு, வெட்டி விட்டு கிளம்பும் போது ,

"போகாத போகாதே என் பசங்களா!! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!!!. நீங்க தோக்கிற மாதிரி சொப்பனம் நான் கண்டேன்"சொப்பனம் கண்டேன்.!!!!."

முகாரி ராகத்தில்சீனுவோட அம்மா, இப்படிப் பாட,

ஐயோ என்ன மாமி? இப்படி அபசகுணம் மாதிரி பாடறேள்.. மௌலி அலற,

"போன வருஷம், அதுக்கு முதல் வருஷம் பாடினேன் தோத்துட்டுவந்தேள்.இப்போ ஹாட்ட்ரிக்.அடிப்பேள்ன்னு ஒரு அல்ப சந்தோசம் அதான் .

"எங்கேடா அன்வர் ஷாஹுல் ,,பாட்சா?"

"மூணு பேரும்ஓத்தைத்தெரு பிள்ளையார்கிட்ட ஆசிர்வாதம் வாங்க போய்ருக்காங்க?"

"என்னது !'ஆச்சர்யமாகக் கேட்டான் முகுந்த்

"அவங்க மசூதிக்கு தானே போவாங்க?"

"'டேய் மாது !ஒனக்குத் தெரியாது ஒவ்வொரு மேட்சுக்கும், ஒத்ததெரு ஆனந்த விநாயகர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தாதான், அவங்களுக்கு. விக்கட் விழும்"

எதிர் பார்த்த மாதிரி ஹரித்தரா ந்தி டீமின், சீம் பௌலிங்கில் ,தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவரில்120ரன்எடுத்தது.இரண்டாம் தெரு. மும்பை முகுந்த் மட்டும் 28 ரன்.டாப் ஸ்கோரர்.

ஸ்ரீராமின் ஆஃப் பிரேக், முகுந்தின் லெக் ஸ்பின் வொர்க் அவுட் ஆகி ன் 110 ரன்னில் சுருண்டது. ஹரித்திரா நதி

3 விக்கெட் 28 ரன் எடுத்த முகுந்துக்கு மேன் ஆப் தி மேட்ச் ..ஷாஹுல் அன்வர்க்குத் தலா 2 விக்கெட்.

முகுந்த் ஆலோசனைபடி மத்த டீம் ஜெயிச்சு .இதோ செமி பைனல் அசேஷம் டீம்.

இந்த நேரம் பார்த்து ஸ்ரீராம் வயத்து வலின்னு ஒதுங்க

"டேய் நம்ம மௌலியை பௌலிங் போட சொல்லி சமாளிச்சுடலாம்"

என்றான் முகுந்த்.

"அது முடியாதுடா"?

"அவனுக்கும் ஏத்தகுடிக்கும் ஆகாதுடா.அதான் இந்த நாலு மேட்ச் பூரா அவன் 12வது மேன்." ப்ளஸ் கோச். ஏதோ அவனுக்கும் ஏத்தகுடிக்கும் தகராறு

"ஒன்னுமில்லடா அவர் பொண்ணு வசுமதி கிட்ட போய் ,"காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினலே என் இதழ்களிலே"என்று பாடி இருக்கான்.

மறு நாளும்" என் அத்தை மக ரெத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே"ன்னு பாடி கிண்டல் பண்ணி இருக்கான்.

"இவனோ ஓணான் ஒல்லிக்குச்சி.

எப்பிடடா வசு இவனை லவ் பண்ணுவா சொல்லு?".

வேற வழி இல்லாமல் சும்மா கோச்சா இருக்கான்..

"அவன் உயரத்துக்கு ஜேசன் ஹோல்டர் மாதிரிடா! ஆனா உடம்பு சேப்புடா.புத்திசாலி கூட. பால் யார்க்கரா இல்ல புல் டாசான்னு தெரியாத மாதிரி, அவுட் ஸ்விங்கர் இல்லை ,இன் ஸ்விங்கர் போட்டுத் தாக்குவான்".

"நெட் ப்ராக்டிஸ்ல என் பேட் மூலம் டிபண்ட பண்ண முடியல. அவ்வளவு ஸ்பீட்" ஸ்டும்ப் தெரிச்சு ஓடுச்சு. முகுந்த் சொன்னான்.

"நான் ஏத்தகுடியார்கிட்ட பேசிக்கிறேன். செமில யூஸ் பண்றேன்.

முகுந்த் இப்படிச் சொன்னதும் மெளலிக்கு வாயெல்லாம் பல் தெரிய சிரித்தான். .

முகுந்த் கணிப்பு சரியா ஒர்க் அவுட் ஆச்சு.

ஒவ்வொரு ஒவர் பால் போடும் போது, ஓல்லிக்குச்சியை,

தன் உயரத்துக்குக் குனிய சொல்லி, முகுந்த் டிப்ஸ் கொடுத்தது வீண் போகலை.! ஓமகுச்சிக்கு 6 விக்கெட்.

அசேஷம் டீம் 90 ரன் ஆல் அவுட்.

முகுந்த் ஒல்லிக்குச்சி ஓப்பனிங் இறங்கி 6 ஓவர்ல மேட்ச் ஓவர்.மேன் ஆப் தி மேட்ச் ஓல்லிகுச்சிக்கு.

வாழ்நாளில் கிரிக்கெட்ல தான் வாங்கின, சின்ன வெள்ளி கப்பை, நூறு தடவ முத்தம்கொடுத்துருந்தான்

ஓல்லிகுச்சி மௌலி.

"இப்போ ஹரித்திரா நதி டீமும் பைனல்.

நிச்சயம் நம்மள பழி வாங்குவாங்க"

மாது அலட்டிக்கவே இல்லை

"இது சாதாரணப் பேட் இல்லாடா .மங்குஸ் பேட்".

"அப்டின்ன்னா என்னடா?"

.சீனுவும் மத்த வங்களும் நச்சரிக்கவே

"ஒரு sprite ஆர்டர் பண்ணு அப்ப தான் ஒரு sprit டு டன் சொல்வேன் "என்றான் முகுந்த்..

நன்றி கடனா ஓல்லிக்குச்சி ஓடிப்போய், நாடார் கடையில் ,sprite வாங்கிக் கொடுக்க sprit வரஆரம்பித்தது முகுந்து க்கு.

கட கடவெனக் குடித்துவிட்டு,இந்தப் பேட் மூலம், டிபன்ஸ் விளையாட முடியாது. ஷாட் தான். அடிக்க முடியும்.

2010 மே த் யூ ஹைடேன் சி. எஸ்.கே க்கு டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரா விளையாடினப்ப யூஸ் பண்ணி 43 பாலில் 93ரன் எடுத்தான்.

"டே நீ சமீபத்தில். 83 படம் பார்த்தல்ல.

ஜிம்பாபாவிக்கு எதிராக 175 ரன்கபில்தேவ் அடிச்சது இந்த மங்கூஸ் பேட் மூலம்தான்.

முகாரி ராகத்தில் அதே பாட்டை, அம்மா பாட, வீறு நடை போட்டுக் கிரௌண்ட் க்குப் போனது மேல் இரண்டாம் தெரு டீம்.

டாஸ் ஜெயிச்ச ஹரித்திரா நதி டீம் , சேஸ் பண்ணி ஜெயிக்கலாம்ன்னு பௌலிங் செலக்ட் செய்தது.

ஒரு சேஞ்சுக்கு சீனுவோட அன்வர் இறங்க, முதல் ஓவர்ல இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்அவுட்.பூஜ்யத்துக்கு 2 விக்கட் அவுட்.

3வது ஆளா இறங்கிய முகுந்தும் வும் ,4 வது ஆளா இறங்கிய ஒல்லிக்குச்சியும்,

நாலா பக்கமும் அடிச்சு 178 ரன்க்கு ஆல் அவுட். முகுந்த் மட் டும் 68 ரன்.சப்போர்ட் பண்ணிய ஒல்லிக்குச்சி50 ரன்.

179 ரன்எல்லாம் ஜூஜூபி ஹரித்திரா நதி டீமிக்கு. எல்லோரும் ஆரவாரம் செயதார்கள்.

ஓப்பனிங் ஷாஹுல் அருமையான பௌலிங்.10 ஓவரில் 70 ரன் ஆனா விக்கெட் விழாமல் இருந்தது.

ட்ரிங்க்ஸ் பிரேக்கில்,

"மிச்சம் 10ஓவர்ல பொளந்து கட்டுவாங்களே".

முகுந்த் போட்ட, லெக் பிரேக் ஸ்விங் ஆகி அவுட் ஒரே ஓவரில் 2 விக்கெட்.விழ,

முகுந்த் அடுத்த ஓவர் ஒல்லிக்குச்சியைக் கூப்பிட்டுப் பௌலிங் போட சொல்ல ரிசல்ட் கை மேல.

ஒல்லிக்குச்சி மௌலி யார்க்கர் அடுத்தடுத்து 3 விக்கெட் கொடுத்தது.

ஸ்ரீராம் அன்வர் தலா இரண்டு விக்கெட்.

20வது ஓவர்12 ரன் தேவை…ஷாஹுலை டெத் ஓவரில் கொண்டு வந்தான்.முகுந்த்.

ஒல்லிக்குச்சி யை, லாங் லெக் பௌண்டரியில் நிக்கச் சொன்னான்.

"கோயில் புளியோதரை வாங்கற மாதிரி இரண்டு கையையும் தயாரா வைச்சுக்கோ.கேட்ச் கோட்டை விட்ட தொலைச்சுடுவேன்". அதட்டினான் முகுந்த்

ஷாஹுலிடம், குமார் லெப்ட் ஹாண்ட் .நீ ஆப் சைடுல் சரியான லெந்தில் போடு . ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பான் .

முதல் 3 பால் டாட் பால் ஆனது டென்ஷன் ஆனது..4வது பால் ஷார்ட் பிச்சு 4 ரன் 5வது பால் 2 ரன்.கடைசி பால் 6 ரன்தேவை.

பிள்ளையாருக்கு சந்தன காப்பு சாத்தறேன் ஷாஹுல் வேண்டிக்கொண்டான்.எப்படியாவது ஜெயிக்கணும்.

ஒட்டு மொத்த கிரௌண்டும் மயான அமைதி.திக் திக்கென்று இருந்தது யார் ஜெயிப்பா?

எதிர்பார்த்த மாதிரி குமார் சிக்ஸர்க்கு, தூக்கி அடிக்க, பால் பௌண்டரிக்கு 5 அடி முன்னே நின்றுந்த ஒல்லிக்குச்சி கையில், லட்டு மாதிரி விழ!!!

பிறகென்ன!

ஹரித்திரா நதி டீம் 173 ரன்னுக்கு ஆல் அவுட்ஆனது..5 ரன்னில் தோல்வி.

இரண்டாவது முறையா ஒல்லிக்குச்சிக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்

முதல் முறையாக MPL கப் சீனு முகுந்த் வசம்.

மேட்ச் பார்க்க வந்த வசு கையை ஒல்லிக்குச்சி கையோடு சேர்த்தார். ஏத்தகுடியார்.

ஒல்லிக்குச்சிக்கு மட்டுமல்ல .மொத்த டீமிக்கும் ஆச்சர்ய ம்.

செமி யிலும் பைனல் மேட்ச் லும் ஒல்லிக்குச்சி யை சேர்த்து, ஒருவேளை அவன் தன் திறமையை ப்ரூப் பண்ணி, கப் ஜெயிச்சுட்டா, வசுவை மௌலிக்குக் கல்யாணம் பண்ணி கொடுக்க ஓகே வா , என்று ஏத்தகுடி அய்யங்கார் கிட்ட முகுந்த் ,தையரிமா. கேட்டதும், அவரும் நல்ல வேலை நல்ல சம்பளம் தான். ஆனா ஜெயிக்க முடியுமா? என்று கேட்டதும்

ஜெயிச்சா ஓ கே. தான் என்று சத்தியம் பண்ணியதும் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

"எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்ன்னு" பாட்டு பாடி மௌலியும் வசுவும் கிரௌண்ட் டில் ஓட, அவர்களை மற்ற பிளேயர்கள் துரத்தினார்கள்.

20250003194910264.jpeg