தொடர்கள்
நேயம்
"104 வயது சூப்பர் பாட்டி- ஸ்வேதா அப்புதாஸ் .

ஊட்டி லவ்டேல் பள்ளத்தாக்கின் அருகில் உள்ள குட்டி பழைய நூற்றாண்டு பங்களா "ஏஞ்செலிக்கா"

20250003195604192.jpg

அந்த பங்களாவுக்குள் தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் செஞ்சுரி கிராண்ட்மா மே கன்னிகன் யூனோஸ் !.

நாம் அந்த கிராண்ட்மாவை பார்க்க பங்களாவுக்குள் எட்டி பார்த்தோம் .

20250003195540938.jpg

நாம் அவரை சந்திக்க முன் அனுமதி பெற்றதாலே நம்மை வரவேற்க வழிமேல் விழி வைத்து காத்து ஆயாக அமர்ந்துகொண்டிருந்தார் .

மே பாட்டியை அவரின் நுறு வயது பிறந்தநாள் அன்று சந்தித்ததை நினைவுகூர்ந்தார் .

தற்போது அவரின் வயது 104 சற்று தளர்ந்திருந்தாலும் மனதளவில் இளம் கிராண்ட்மாதான் !.

" எனக்கு 104 வயதாகிவிட்டதா என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சிரியமாக தான் இருக்கிறது " என்கிறார் .

மே பாட்டியின் கன்னத்தில் எந்த சுருக்கமும் இல்லை ஒரு பல் கூட இதுவரை விழவில்லை என்று பற்களை சிரித்தபடி காட்டினார் .

இவரின் அழகான பல்லுக்கு காரணம் கோல்கேட் மற்றும் பெப் சோடென்ட் பேஸ்ட் என்கிறார் கூலாக .

தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கூர்கில் அப்பா ஆல்பர்ட் விக்டர் கன்னிங்கம் ஒரு பிளான்டெர் காபி எஸ்டேட்டுக்கு சொந்தக்காரர் அம்மா மேரி ஆக்னெஸ் எட்வர்ட் கிரேட் ஹவுஸ் வைப் ..

அந்த கால பழைய நினைவுகளை மறக்கவில்லையாம் இன்னும் தன் மனதில் பசுமையாக இருக்கிறது என்கிறார் மே பாட்டி .

ஆங்கிலோ இந்தியன் வம்சத்தை சேர்ந்த இவர் இசைவல்லுனர் யூனுஸை 1949 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டாராம் .

20250003200136438.jpg

உங்களின் திருமணம் காதல் திருமணமா என்று கேட்க

" அந்த காலத்தில் சர்ச் மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வோம் அப்படி ஒரு பார்ட்டியில் யூனுஸை சந்தித்து பழகி அன்பால் திருமணம் செய்துகொண்டேன் எங்களின் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தன இந்த லவ் டேல் போல.. அதே சமயம் அழகான வாழ்க்கை அவரின் இசையை போல " என்று கூறி சிரித்து கொண்டார் .

1999ஆம் வருடம் அவர் என்னை விட்டுப்போய்விட்டார் அவரின் இசையும் அமைதியாகிவிட்டது .

இவருக்கு இரண்டு குழந்தைகள் மார்ஷல் மற்றும் டீனா இருவரும் தங்களின் குடும்பத்துடன் மைசூர் மற்றும் பெங்களூரில் செட்டிலாகிவிட்டனர் .

என் 104 வது பிர்த்டே மற்றும் கிறிஸ்துமஸுக்கு வந்தார்கள் .

அவர்களை நான் தொந்தரவு செய்வதில்லை சுதந்திரமாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும் " என்கிறார் .

இவரின் பள்ளிவாழ்க்கை மைசூர் மற்றும் குன்னூர் செயின்ட் ஜோசப் கான்வென்டில் படித்து ஆசிரியை பயிற்ச்சி எடுத்து லவ் டேல் லாரன்ஸ் ஸ்கூலில் ஆசிரியையாக பணிபுரிந்த்துள்ளார் .

" என் பள்ளி ஆசிரியர்கள் மிஸ் .காலின்ஸ் , மிஸ் .வெப் மற்றும் சிஸ்டர் .இம்மானுவேல் ஆகியோரை மறக்கமுடியாது .அதே போல லாரன்ஸ் ஸ்கூல் பிரின்ஸிபால்கள் கர்னல் .வியாஸ் , கே .டி .தாமஸ் ,இன்னும் என் நினைவில் .உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மைதிலி , ஜான்சன் இன்னும் தொடர்பில் உள்ளனர் " என்கிறார் .

வெல்லிங்டன் ராணுவத்தில் கர்னல் .வர்மாவிடம் ஸ்டெனோவாக பணிபுரிந்ததை பூரித்து கூறினார் .

உங்களுடைய இந்த இளமையின் சீக்ரெட் என்ன ? என்று கேட்க .

தன் கையில் இருந்த ஜெபமாலையை எடுத்து இதுவும் இறைவனிடம் ஜெபிப்பதும் தான் .

ஒரு விஷயம் மனதை தெளிவாகவும் க்ளீனாக வைத்துக்கொள்ளவேண்டும் .

பிறரை அன்பு செய்வது நம்மிடம் இருப்பதை பகிர்வது மற்றும் சேவை செய்தாலே நாம் நிம்மதியாக இளமையுடன் வாழலாம் " என்ன சரியா என்று நம்மிடமே கேட்கிறார் மே பாட்டி .

அன்றைய வேலையை அன்றே முடித்து விடவேண்டும் இல்லை என்றால் தேவையற்ற டென்ஷன் வரும் பகைமை மற்றவைகளை பற்றி பேசுவதை தவிர்த்தாலே கூலாக வாழலாம் " என்கிறார் .

20250003200801400.jpg

மே கிராண்ட்மாவை பார்த்துக்கொள்வது ராணி மற்றும் சாந்தி .

தற்போது சாந்தி லீவில் உள்ளதால் முழு வேலையும் ராணி தான் செய்கிறார் எலக்ட்ரிக் , போன் , வீட்டு வரி அனைத்தையும் சரிவர பட்டுவாடா செய்வது நான் தான் என்று கூறும் மே பாட்டிக்கு அரசு எந்த ஓய்வுஊதியத்தை தருவதில்லை என் ஓட்டு மட்டும் அவர்களுக்கு வேண்டும் என்று வருத்தப்படுகிறார் .

முன்னாள் நீலகிரி கலெக்டர் அம்ரித்தின் மனைவி ஆலியா என் நண்பி பென்ஷன் பெற்று தர முயற்ச்சி எடுத்தார் பாவம் சிறு வயதில் அவரை இறைவன் அழைத்துக்கொண்டார் என்று கண்கலங்கிவிட்டார் மே .

என்னதான் என் மகன் மகள் உதவி செய்தாலும் பணம் பத்துவதில்லை வீட்டு வாடகை தான் கைகொடுக்கிறது ஒரு காட் பாதர் காட் மதர் வேண்டும் எனக்கு என்கிறார் .

20250003200529743.jpg

மே கிராண்ட்மா ஒரு சூப்பர் ஆர்ட்டிஸ்ட் அவரின் பொழுதுபோக்கே டூடுல் ஆர்ட்டில் கலரிங் போடுவது எக்கச்சக்க கலரிங் போட்டு வைத்துள்ளார் நமக்கும் கலரிங் போட்டு காட்டினார் .


மே பாட்டிக்கு மிக வருத்தமான விஷயம் அழகிய ஊட்டி , குன்னூர் கான்க்ரீட் ஜங்களாகி மாறி சுத்தமில்லாமல் மாசு கெட்டுபோய்விட்டது .

நீலகிரியிலே லவ் டேல் பகுதி தான் இன்னும் பழையபடி இருக்கிறது நுறு வருடமாக அதன் அழகு அழியவில்லை ஐ லவ் லவ் டேல் ...

என் வீட்டின் கீழ் தான் எங்க மவுண்டைன் ரயில் செல்கிறது அதன் விசில் மற்றும் ஜிக்கு புக்கு சப்தம் தான் எனக்கு நேரத்தை அறிவுறுத்துகிறது தினமும் .

லூடோ , செஸ் , ஹாக்கி , வாலி பால் விளையாடிய காலங்களை நினைவுகூர்ந்தார் மே பாட்டி .

டிவியில் சினிமா பார்க்கும் பாட்டி தமிழ், இங்கிலிஷ், இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார் .

மாதா டிவியில் சண்டே இங்கிலிஷ் திருப்பலி பார்க்க தவறுவதில்லை .

மே கிராண்ட்மாவை அடிக்கடி சந்திக்கும் நபர்கள் ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்தில் இருந்து திவ்விய நன்மை கொண்டுவந்து கொடுக்கும் சிஸ்டர்கள் .

மாதந்தோறும் மருத்துவ டெஸ்ட் எடுக்கும் டாக்டர் .சிதம்பரநாதன் .

இவர்களை என்னால் மறக்கமுடியாது .

தன் சிறுவயதில் கப்பலில் இங்கிலாந்து சென்று வந்துள்ளார் இங்கிலாந்தை விட லவ் டேல் தான் அழகு என்கிறார் .

இந்த அழகான 104 வயது சூப்பர் மே பாட்டியை பார்த்து வந்த பின் நமக்கும் புது தெம்பு பிறந்ததை உணரமுடிந்தது ,.