என்னுடைய பாட்டி தங்கம்மாள் !
என்னுடைய பாட்டி, அவரது சிறிய வயதிலேயே (29வது வயதில்) தாத்தா (திருவாரூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் இரயில்வே ஸ்டேஷனில் VLR Canteen நடத்தி வந்தார்கள்) 1944அம் ஆண்டு காலமானதால் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் தந்தை (12வயது) இரண்டு சித்தாப்பாக்கள் (8&4வயது) மற்றும் எனது தாத்தாவின் உறவினர்களைச் சேர்த்து பதினாறு பேரையும் தான் ஒருவராக இருந்து அனைவருக்கும் எந்தவித குறைகளும் இல்லாமல் வளர்த்து ஆளாக்கினார்.
எங்கள் தந்தை, இரண்டு சித்தப்பாக்களை நல்லவிதமாகப் படிக்கவைத்து மூவருமே துணை கலெக்டர் பதவி வரை உயர்ந்தனர். என்னுடைய பாட்டியின் அறிவுரைப்படி சொந்த சம்பளத்தில் தான் வாழவேண்டும் என்றதால் மூவரும் லஞ்சம் முதலியன எதுவும் வாங்காமல் சொந்த வீடு கூட இல்லாமல் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நன்றாகப் படிக்கவைத்தார்கள்.
எங்களது திருமணத்தையும், எங்கள் மகள் மற்றும் மகனையும் (கொள்ளு பேத்தி&பேரன்) பார்த்த என்னுடைய பாட்டி தனது 83வது வயதில்(1997ல்) காலமானார்.
அவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம்….
சில வேளைகளில் புகைப்படங்கள் சொல்லும், இனந்தெரியா கதைகள், எழுத்தை விட சுவாரஸ்யம்.....
அதனால் இந்த விண்டேஜ் புகைப்படங்களுடன்... தங்கம்மாள் பாட்டியை நினைவுகூர்கிறேன்....
Leave a comment
Upload