தொடர்கள்
பொது
பட்டுக்கோட்டை (சகோதரிகள்) பாட்டிகள்-வேங்கடகிருஷ்ணன்

20250001160801949.jpg

பாசம்& கலையால் இணைந்த பட்டுக்கோட்டை (சகோதரிகள்) பாட்டிகள்

"எங்களுக்கு வயது என்பது வெறும் எண்களே" என்று நிரூபித்துள்ளனர் எழுபத்தைக் கடந்த இந்த பட்டுக்கோட்டை சகோதரிகள். மூத்தவர் கமலா, இளையவர் விஜயலக்ஷ்மி. சிறுவயது முதலே கைவினை கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். கமலா சிறுவயதிலேயே இப்போதுள்ள தலைமுறை அதிகம் அறிந்திடாத மணிகளைக்கொண்டு பொம்மைகளை வடிவமைத்தல், பல விதமான வடிவங்களில் ஒயர்கூடை பின்னுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். விஜயலக்ஷ்மி ஓவியக்கலையில் சிறந்தவர். இந்த ஆர்வம் தான் தன்னுடைய 60 வயதிலும் விஜயலட்சுமியை தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுக்கொள்ள தூண்டியது. அவரது கணவரின் ஊக்கம் அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஸ்ரீரங்கத்தில் திரு. ராமானுஜம் அவர்களிடம் அவர் முறையாக இந்த பயிற்சியை எடுத்துக்கொண்டார். குருகுலத்தில் எப்படி ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டுமோ அவ்வாறே இந்த கலையை கற்றார். வயது, குடும்பச்சுமை, உடல் ஒத்துழையாமை , பேரன், பேத்திகள் என காரணங்கள் சொல்லத்தூண்டும் இந்த வயதில் தான் இவர் இந்த கலையை கையிலெடுத்து தன் வாழ்வை அர்த்தமுள்ள வகையில் கழிக்கிறார். இதுவரை இவர் நூற்றிற்கும் மேற்பட்ட படங்களை வரைந்துள்ளார்.

20250001160035367.jpg20250001160122745.jpg

அதில் 95% வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் இல்லம் மற்றும் அவர்களின் அலுவலகங்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.

20250001160240783.jpg20250001160338638.jpg

ஒரு படம் வரைய ஏறக்குறைய 60 லிருந்து 75 நாட்கள் அவருக்கு தேவைப்படுகிறது அந்த ஓவியத்தின் செய்முறை நிலைகளில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் அது அதற்கு தேவையான உழைப்பினை கொடுத்து அந்தந்த நேரத்தை வழங்கி ,அடிப்பகுதி காய்ந்த பின்னர் அதன் மேலே அடுத்த வேலையை துவங்குவது என்று புராதன முறையில் எப்படி தஞ்சாவூர் ஓவியங்கள் உருவாக்கப்பட்டனவோ அந்த முறையில் இருந்து சற்றும் பிசகாமல் தன் முழு ஈடுபாட்டையும் செலுத்தி அவர் இந்த ஓவியத்தை உருவாக்குவது நமக்கு மிகுந்த வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.

20250001160445910.jpg
அவருடைய சமீபத்திய ஓவியங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு இங்கே தந்துள்ளோம் அதிலிருந்து அதன் வளமான கலை அம்சத்தையும் அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு முக்கியமான விஷயம் இப்போது கடைகளில் கிடைக்கும் தஞ்சாவூர் ஓவியங்களில் முகம் குறிப்பாக மூக்கு சரியாக அமைவதில்லை ஓவியம் வரைபவர்களுக்கு அந்த ஓவியத்தை ரசித்து வரையும் பாங்கு இருப்பதும் அவசியம் அப்போதுதான் இந்த ஓவியத்தின் முகம் கண்கள் மூக்கு ஆகியவை தீர்க்கமாய் அமையும். பல ஓவியங்களை நேரில் பார்த்திருப்பதால் என்னால் இந்த வித்தியாசத்தை உடனே கவனித்து ரசிக்க முடிந்தது இவருடைய எல்லா ஓவியத்திலும் முகம் தனித்துவமாய் விளங்குகிறது. தஞ்சாவூர் ஓவியக்கலைக்கான பிரத்யேக வகுப்புகளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்டமுறையில் சொல்லிக்கொடுக்கிறார்.

20250001160550385.jpg2025000116063338.jpg


கமலா, ஒயர் கூடையிலேயே மடிக் கணினியை எடுத்து செல்லும் பையை வடிவமைத்துள்ளார்.

20250001161115990.jpg20250001161152569.jpg

நவராத்திரி விழா நாட்களில் இல்லத்திற்கு வருபவர்களுக்கு பரிசளிக்க இந்த கூடைகளை மொத்தமாக மற்றும் ஆடரின் பேரிலும் கமலா செய்து தருகிறார்.

20250001160905934.jpg
மேலும் பல பேர்களுக்கும் இந்த கலையை ஆர்வமுடன் சொல்லித்தரும் இவர் பார்வை திறன் அற்றவர்.பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னுவதில் தனிப்பட்ட ஆர்வத்தைக் கொண்டு அதனை முறையாக கற்றுக் கொண்டு தன்னுடைய பதின்ம வயதிலேயே கூடைகள் போட ஆரம்பித்தவர்,

2025000116131043.jpg20250001161347114.jpg20250001161443200.jpg20250001161543783.jpg

அவர் கூடை போடும் அழகை எதிரில் உட்கார்ந்து பார்க்கும் போது அவருக்கு பார்வை இல்லை என்று நம்மால் நிச்சயமாய் நம்ப முடியாது.

20250001160956847.jpg20250001162007915.jpg

மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் சொல்வது போல எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கிறது அவர்களுடைய அபார நினைவாற்றல் அந்த கணக்குகளை இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது ஒருவேளை இந்த கணக்குகள் தான் அவருடைய அந்த அபாரமான நினைவாற்றலுக்கு காரணமோ என்னமோ?

20250001161654326.jpg


விஜயாவின் ஓவியதிறமைக்கு ஊக்கமாக கமலாவும், கமலாவின் இரு விழிகளாக விஐயாவும், இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளத கமலா இன்றும் தன் தங்கை விஜயா குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

20250001161746884.jpg
பாசம், உறவு மற்றும் எந்த வயதிலும் ஆர்வம் மட்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த தலைமுறைக்கு உரக்க சொல்லும் இந்த " சிங்கப் பெண்"களுக்கு விகடகவி வாசகர்களின் சார்பாக எங்களின் சல்யூட்.