மலையாள நடிகை பார்வதி சினிமாவில் இருக்கும் பெண்களின் உரிமைக்காக போராடுவார். சமீபத்தில் சூட்டிங் போகும் இடங்களில் பெண்களுக்கு முறையான பாத்ரூம் வசதி இருக்கணும் என்று பேட்டி தந்தார். இதனால் நடிகர்கள் இவரை பாத்ரூம் பார்வதி என்று கிண்டல் செய்கிறார்கள்.
ஸ்ருதிஹாசன்
தற்சமயம் ரஜினியின் கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் "நான் மிகவும் அழகான குடும்பத்தில் தான் பிறந்தேன். கலை உணர்வுள்ள புத்திசாலித்தனமான பெற்றோர்கள் எனக்கு கிடைத்தார்கள். கடவுளின் அருளால் நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நான் அதனுடைய மறுபக்கத்தை பார்க்கிறேன். என் பெற்றோர்கள் பிரிந்த போது எல்லாமே மாறிவிட்டது என்பது தான் உண்மை. அந்த சமயத்தில் தான் நிதி சுதந்திரம் உள்ளிட்டவற்றின் மதிப்பை என்னால் உணர முடிந்தது என்கிறார் ஸ்ருதிஹாசன்.
தோசை
ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இந்தப் படம் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நிருபர்கள் இவரை தோசா தோசா அழைத்தனர். தென்னிந்தியர்களை வட இந்தியர்கள் தோசை இட்லி சாம்பார் என்று கிண்டல் செய்வது வழக்கம். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ்ஷை கிண்டல் செய்வது போல் நிருபர்கள் தோசா என்று சொல்ல எங்கள் ஊரில் தோசை ரொம்ப பிரபலம் உங்களுக்கு பிடிக்காதோ என்று பதில் சொன்னார் கீர்த்தி சுரேஷ். அதே சமயம் பேபி ஜான் பட நாயகன் வருண் தவன் விருந்தாளிகளை இப்படி கிண்டல் செய்யக்கூடாது என்று நிருபர்களை கண்டித்தார்.
நிமிஷாசஜயன்
கருணாஸ் நிமிஷாசஜயன் நடிப்பில் உருவான என்ன விலை படப்பிடிப்பு முடிந்துவிட்டது விரைவில் ரிலீஸ்.
கே ஜி எஃப் நாயகி
ரஜினி நடிக்க இருக்கும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் கே ஜி எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருக்கிறாராம்.
விடாமுயற்சி
அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையாம்.
தடை
விஜயின் கடைசி படம் பற்றி எந்த தகவலும் வெளியே போகக்கூடாது என்று கடுமையாக உத்தரவு போட்டு இருக்கிறார் நடிகர் விஜய். இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்பேசிக்கு அனுமதி இல்லை. அதேபோல் இந்த படம் பற்றி பொதுவெளியில் யாரும் பேட்டி தரவும் தடை விதித்து இருக்கிறார்கள்.
மாதவன் படகு
நடிகர் மாதவன் நவீன வசதிகளுடன் கூடிய படகு ஒன்றை 14 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். நவீன வசதிகள் கொண்ட இந்த படகை ஓய்வெடுப்பதற்காக மாதவன் பயன்படுத்துகிறார். தற்சமயம் துபாயில் தனது படகில் மாதவன் ஓய்வெடுத்து வருகிறார். நயன்தாரா விக்னேஷ் தம்பதிகள் குழந்தைகளுடன் இந்தப் படகில் புத்தாண்டை கொண்டாடினார்கள். இதை மாதவனின் மனைவி சரிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் படகின் முன் பகுதியில் போர்வையை போர்த்திக் கொண்டு மாதவன் விக்னேஷ் சிவன் ,நயன்தாரா, சரிதா இருக்கும் படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
Leave a comment
Upload