தொடர்கள்
விளையாட்டு
நீர்மூழ்கி கிரிக்கெட் - மாலா ஶ்ரீ

20230503071504393.jpeg

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சிஎஸ்கே வெற்றி பெற்று, கோப்பையை 5-வது முறையாக வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை நீலாங்கரையில் 60 அடி ஆழ்கடலுக்குள் பயிற்சியாளர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டாடினர்.

புதுச்சேரி மற்றும் சென்னையில் ‘டெம்பிள் அட்வென்ச்சர்’ எனும் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த். இவர், கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஆழ்கடல் பகுதியில் தனது பயிற்சியாளர்களுடன் கொண்டாடி, அப்படங்களை பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் கோப்பையை, கேப்டன் எம்.எஸ்.டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக வென்றது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில், கடந்த 30-ம் தேதி சென்னை நீலாங்கரை கடற்கரை பகுதியில், சுமார் 60 அடி ஆழ்கடலுக்குள் பயிற்சியாளர் அரவிந்த் தனது நண்பர்களுடன் சிஎஸ்கே அணியின் உடையணிந்து, கிரிக்கெட் விளையாடி கொண்டாடினர்.

தினுசு தினுசா யோசிக்கிறாய்ங்கப்பா.....