வத்திக்கான் அரசின் இந்திய தூதரும் போப் ஆண்டவரின் இறை தூதருமான பேராயர் .லியோ போல்டோ ஜிரேலி செவ்வாய் கிழமை நீலகிரிக்கு விஜயம் செய்தார் .
டெல்லியில் இருந்து மைசூர் வந்த தூதர் கூடலூர் வந்து சேர செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது .
மைசூர் பேராயர் வில்லியம் தூதரை ஊட்டிக்கு அழைத்து வந்தார் .
ஊட்டி பிஷப் இல்லத்தில் தூதர் ஜிரேலி தங்க ஏற்பாடு செய்யப்பட்டது .
ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் வரவேற்று மதிய உணவை முடித்த கையோடு அருகில் உள்ள ரெக்ஸ் பள்ளி ஆடிட்டோரியத்தில் நீலகிரி குருக்கள் மற்றும் துறவறத்தார் கலந்து கொண்டு அறிவுரை வழங்கி கலந்துரையாடினார் இறை தூதர் .
மாலை 4.30 மணிக்கு தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு சென்ற தூதருக்கு குழந்தைகள் மலர் தூவி வரவேற்க பூரித்து போனார் .
ஜெபமாலை 53 மணிகளை குறிக்கும்பேராலயத்தின் 53 படிகளில் ஏறி நடந்து சென்றார் .
கத்தோலிக்க பேப்பல் கொடியை ஏற்றினார் .வெள்ளை புறாவை பறக்க விட்டு அமைதியை வலியுறுத்தினார் .
பேராலய வெற்றி கோபுரங்களின் எதிர்புறம் அமைக்க பட்ட சிறிய மேடையில் வரவேற்பு மற்றும் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்தார் தூதர் .
நிகழ்வை ஆசிரியர் கிறிஸ்டோபர் ராஜ்குமார் தொகுத்து வழங்கியதை தூதர் ரசித்தார் .
நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள் இரண்டு பிஷப்புகளுடன் இணைந்து ஆடம்பர திருப்பலி சிறப்பித்தார் தூதர் ஜிரேலி .
உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் சர்வசமய உறுப்பினர்கள் சந்திப்பில் பேசும் போது , " இந்த பேராலயத்தின் முன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .நம் போப் பிரான்சிசின் ஆசியுடன் இங்கு வந்துள்ளேன் .இந்த அழகிய நகரில் உங்களின் பங்கு முக்கியம் எனவே அன்பு அமைதி மத நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் .ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் .அனைத்து மதத்தினரும் ஒற்றுமை அமைதியை பேணிக்காக்க வேண்டும் ". என்று கூறினார் .
புதன் கிழமை காலை நாசரேத் கான்வென்டில் காலை உணவை முடித்து கொண்டு நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்திற்கு விஜயம் செய்தார் தூதர் .
பங்கு குரு செல்வநாதன் கூடலூர் ஆணையாளர் பிரான்சிஸ் , கவுன்சிலர் பிளோரினா மார்ட்டின் வரவேற்க இசையுடன் ஆலயத்தினுள் செல்ல பாரம்பரிய லத்தின் பாடல்கள் பாடப்பட்டன .
குழுமியிருந்த மக்களியிடம் ஆலயத்தின் வரலாற்றுடன் அதன் முக்கியத்துவதை எடுத்து கூறினார் .
மாதா பாடல் பாட சொல்லி குவாதலூப் அன்னை திருஉருவ படத்தின் முன் நின்று பிராத்தித்தார் .
பின்னர் மக்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் .
நாம் அருகில் சென்று 'ஊட்டி நகர் 200 வது வருடத்தை சிறப்பிக்கிறது இந்த தருணத்தில் நீங்கள் வந்தது மிக சிறப்பு' என்று கூற அப்படியா என்று கூற நாம்.. ஊட்டி எப்படி இருக்கிறது பிடித்ததா என்று கேட்க சிரித்து கொண்டே இன்டெர்வியூவா ? நேற்றில் இருந்து என்னை பாலோ செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி சிரித்து கொண்டே நகர்ந்தார் .
ஆலயத்தை விட்டு வெளியே வந்து நேராக கல்லறை தோட்டத்திற்கு சென்று மரித்த குருக்கள் கல்லறைகளில் ஜெபித்து புனித நீரால் மந்தரித்தார் .
" இங்கு துயில் கொள்ளும் அனைத்து ஆன்மாக்களுக்கு தினமும் ஜெபியுங்கள் " என்று கூறினார் .
தூதர் கல்லறைக்கு சென்றதை ஆச்சரியத்துடன் பார்த்தனர் .
தென்னகத்தின் கல்வாரி என்று அழைக்கப்படும் குருசடிக்கு சென்ற தூதுவர் புதிய நுழைவுவாயில் ஆர்ச்சை திறந்து வைத்து புதுப்பிக்க பட்ட ஆலயத்தை புனித படுத்தினார் பின் ஏசு சுமந்த சிலுவையின் ஒரு சிறிய பாகம் அமைந்துள்ள சிலுவையின் முன் ஜெபித்தார் .
ஆடம்பர கூட்டு திருப்பலியை குருசடியின் உயரத்தில் அமைந்துள்ள சிலுவையின் முன் நிறைவேற்றி சத்திய மங்கலத்திற்கு சென்றார் இறை தூதர் ஜிரேலி .
சத்தியில் புனிதர் ஜான் டி பிரிட்டோ வாழ்ந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி டெல்லி சென்றார் .
2005 ஆம் ஆண்டு ஊட்டி மறைமாவட்டத்தின் பொன்விழாவை சிறப்பிக்க அப்போதைய வத்திக்கான் இந்திய தூதர் பேராயர் .பெட்ரொ லோபஸ் க்விண்டனா விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது .
தற்போதைய தூதர் இந்தியா மற்றும் நேபாள நாட்டின் தூதராக பணியாற்றுகிறார் .
இந்த வருட ஊட்டி கோடை சீசனில் நாட்டின் மிக பெரிய சமாதான தூதுவராக அமைந்தது இவரின் விசிட் .
ஒரு மூத்த குரு நம்மிடம் கூறும் போது " "நுண்சியோ வருகை ஆலயங்களை விசிட் செய்தது மட்டுமல்ல அவரின் பார்வை மறைமாவட்டத்தின் ஒரு உன்னிப்பான ஆய்வு என்பது தான் முக்கியம் .
போப் ஆண்டவரின் இறை தூதர் ஜிரேலி ஊட்டியில் பவனி வந்த நேரங்கள் மற்றும் அவரின் அமைதியான அழகான புன்னகை இன்னும் அனைவரின் நினைவில் உலாவி கொண்டிருக்கின்றன .
Leave a comment
Upload