எனது மகனை தோற்கடிக்க இந்த தொகுதிக்கு மூன்று முறை பிரதமர் வந்திருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.
ஆட்சி .........அதிகாரம் .......அரசியல் ......நாற்காலி .......இதுக்கு தான் வேற எதற்கு
நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டுமென்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமோ அல்லது தனிநபர் தீர்மானமோ எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தார்களா அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
அண்ணே டெல்லியில் நம்ம கூட எதிர்க்கட்சி தானே நம்ம கூட கொண்டு வரலாம் அண்ணா
மூத்த அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
தலைவரை நிம்மதியா தூங்க விடுங்கப்பா
மேகதாது அணை கட்ட 9000 கோடி கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்
கூட்டணி தர்மம் சொல்லி இங்க நம்ம கூட்டணி கட்சிகள் எல்லாம் நம்ம எது பண்ணாலும் மௌனமாய் இருப்பது போல் நாமும் மௌனமாய் இருப்போம்.
பலத்தைக் கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை பலவீனமானதால் இதை வாபஸ் பெறவும் இல்லை தொழிலாளர் சட்டம் மசோதா பற்றி முதல்வர் ஸ்டாலின்.
கமலஹாசன் உடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னால் கேட்டால் தானே இப்போது அவர் மாதிரி இவரும் புரியாத மாதிரி பேசுறார்.
நேர்மையான அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி
நம்ம ஆட்சியில் நம்ம நேர்மைக்கே இடம் தரவில்லையே அண்ணே
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்காக கட்சி வழக்கு தொடுக்காது டி கே எஸ் இளங்கோவன்
ஆமா அப்புறம் கோர்ட்ல உண்மையை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கும் எதுக்கு வம்பு
திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் திமுக அறிவிப்பு
நீங்க சாதனை என்று சொல்ற எல்லா விஷயத்தையும் ஊழல்ன்னு தானே சொல்றாரு அண்ணாமலை
மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை திமுகவை ஆதரிப்பேன் மதிமுக அவைத் தலைவர் துரைசாமி
உங்களுக்கு நல்ல எதிர்காலம் விடுங்கள்
அதிமுகவில் தற்போது இருக்கும் போலிப் பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு
அண்ண இன்னும் தூக்க கலகத்திலேயே இருக்காருப்பா எழுப்பி விடுங்க
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதில் அமா மு க வின் பங்கு முதன்மையாக இருக்கும் டிடிவி தினகரன்
தலைவர் எப்பவுமே தமாஷா பேசுவார்
தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை அதிர்ச்சி அளிக்கிறது திருமாவளவன்
ஆமா அதிர்ச்சி இத்தோடு இந்த பிரச்சனை முடிந்தது
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் அண்ணாமலை
நம்ம கட்சிக்காரர்களே சிட் பண்டு நடத்தி மோசடி பண்ணி தலைமறைவாய் இருக்காங்க இது ஊழலா மோசடியா தலைவரே
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் சந்து கடைகளை மூட வேண்டும் அன்புமணி ராமதாஸ்
ஐயா அதெல்லாம் டாஸ்மாக் கூட பிரான்ஞ் அது எப்படி மூட முடியும்
திராவிட மாடல் கொள்கை காலாவதி ஆகிவிட்டது ஆளுநர் ஆர் என் ரவி
காலாவதியான கொள்கை பற்றியா நம்ம இத்தனை நாளா பெருமையா பேசிட்டு இருந்தோம்
Leave a comment
Upload