அனுஷ்கா பராக்..!
நடிகை அனுஷ்கா 2020 ஆண்டுக்கு பிறகு தனது உடல் எடை கூடி விட்டது என சில காலம் நடிப்பிற்கு இண்டர்வெல் விட்டு இருந்தார். அதன் பின் நடிகை அனுஷ்காவும் நடிகர் பிரபாஷும் இருவரும் காதலிக்கவில்லை என்று தங்கள் மீது வரும் கிசுகிசுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இப்போது அனுஷ்கா நகைச்சுவை மற்றும் காதல் படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படம் நடித்து வெளியாக தயார் நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆண்களிடம் சம்பளம் எவ்வளவு என்றும் நடிகையிடம் வயதும் கேட்க கூடாது என்பது எழுதப்படாத விதி! இருந்தாலும் கனவு கன்னி நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 41 வயது என்ற தகவல் தெலுங்கு திரை உலகில் பரபரப்பான செய்தியாக உள்ளது.
இயக்குனர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். கதாநாயகன் கார்த்தி படத்தின் கதையை ஜெயம் ரவி சொல்லி கார்த்தி சம்மதமும் சொல்லிவிட்டார்.
கவர்ச்சிக்கு ரெடி
காயத்ரி சங்கர், விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஜோடியாக நடித்தவர் அதன் பிறகு ரம்மி நல்ல நாள் பார்த்து புரியாத புதிர் சீதக்காதி மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். காயத்ரி சங்கர் பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருக்கிறார் விக்ரம் படத்தில் கூட பகத் பாஸில் ஜோடி இவர்தான். திடீரென இன்ஸ்டாகிராமில் கப்பலில் பிகினி உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு நான் கவர்ச்சியாகவும் நடிப்பேன் என்று படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு மெசேஜ் சொல்லி இருக்கிறார் காயத்ரி சங்கர்.
மலையாளத்தில் இருந்து...
தமிழுக்கு இன்னொரு மலையாள நடிகை விரைவில் அறிமுகம் அஹானா கிருஷ்ணா தற்சமயம் இவர் நிறைய மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அடி என்ற படம் மக்களின் வரவேற்பை பெருமளவில் பெற்று இருக்கிறது. இப்போது தமிழ் பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவரை தமிழில் நடிக்க வைக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்று நம்பிக்கையாக சொல்கிறார் அஹானா கிருஷ்ணா.
204 கோடி
தமிழில் அறிமுகம் ஆகி இந்தியில் பிரபலமாகி இப்போது ஹாலிவுட் பிஸியாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஒரு பேஷன் ஷோவுக்கு அவர் வந்து கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து கொண்டிருந்த நெக்லஸ் விலை 204 கோடியாம் .பல்கேரியா டைமண்ட்ஸ் நெக்லஸம் அது.
நாலு கோடி
தெலுங்கு தமிழ் படங்களில் நடித்து பிரபல நடிகை ஆகிவிட்ட ராஷ்மிகா மந்தானா இன்ஸ்டாகிராமில் தற்சமயம் அவரைப் பின்பற்றுபவர்கள் மூணு கோடியே 80 லட்சம் பேர் விரைவில் அது நாலு கோடியாக எட்டு மாம். தென்னிந்திய நடிகைகளின் அதிக ஃபாலோயர்கள் உள்ள நடிகை இப்போதைக்கு ராஷ்மிகா தான்.
அதெல்லாம் இல்லை படம் வெற்றி தான்
நடிகை நாகார்ஜுனா அமலா தம்பதி மகன் அகில் நடித்த ஏஜென்ட் படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. கதை சரியில்லை சம்பந்தமில்லாமல் பாடல் என்றெல்லாம் பேச்சு வர அம்மா அமலா அதெல்லாம் இல்லை என் பையன் நன்றாக நடித்திருக்கிறார் குடும்பம் குடும்பமாக பெண்கள் வந்து பார்க்கிறார்கள் கை தட்டுகிறார்கள் என்று சொல்கிறார்.
100 கோடி
பொன்னியின் செல்வன் இரண்டு இரண்டு நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
விடாமுயற்சி
அஜித் புது படத்தின் பெயர் அவரது பிறந்த தினம் அன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். அதன்படி அஜித் பிறந்த தினம் மே முதல் தேதி படத்தின் பெயர் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்ச்சி திருமேனி இசை அனிருத் என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அறிவாளுடன் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு முன்பு நடித்த கடைசி படம் மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் கையில் துப்பாக்கி உடன் வடிவேலும் அறிவாளுடன் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கும் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். இன்னொரு போஸ்டரில்உதயநிதி ஸ்டாலின் வடிவேலு பகத் பாசில் மூவரும் இருப்பது போல் வெளியிட்டு இருக்கிறார்கள் .மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும்.
மிஸ்டர் எக்ஸ்
ஆர்யா கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் மிஸ்டர் எக்ஸ் இதில் ஆர்யா நாயகன் கௌதம் கார்த்திக் வில்லன் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் உகாண்டா செர்பியா நாடுகளின் படமாக்க இருக்கிறார்கள்.
Leave a comment
Upload