உக்கிரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இன்று போர் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் பலதரப்பட்ட சமாதான தூதுவர்களை அனுப்பினாலும் ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் போரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கிட்டதட்ட உக்கிரைன் தற்போது ரஷ்யாவின் குண்டுமழையால் சின்னபின்னமாகி உருக்குலைந்து போய்விட்டது. வானுயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் ரஷ்யாவின் குண்டு மழை பொழிவில் அழிந்து கொண்டிருக்கிறது.
ரஷ்யாவின் போர் அணுகுமுறைகள் அடுத்து என்ன என்ற குழப்பத்தில் உக்கிரைன் ராணுவத்தினர் நடுக்கத்தில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உக்கிரைன் நாட்டில் மருத்துவ படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவ-மாணவிகள் போர் ஓய்ந்தால் மீண்டும் படிக்க செல்லலாம் என்ற கனவு கடந்த ஒரு வருடமாக விடாமல் நடக்கும் போரினால் தவிடு பொடியாகிவிட்டது.
ரஷ்யாவின் போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலகமே பார்த்து கொண்டிருக்கும் வேளையில் புதன்கிழமையன்று ரஷ்யா அதிபர் வசிக்கும் கிரம்ளின் மாளிகை அருகே நடு இரவில் இரண்டு டிரோன்கள் தாக்குதல் நடைப்பெற இருந்ததை ரஷ்ய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் முறியடித்து சுட்டு வீழ்த்தியது .அத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு ட்ரோன்களை ரஷ்யா பாதுகாப்பு படையினர் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர் என்ற செய்தி வெளியானது. அப்போது ரஷ்யா அதிபர் புடினை கொல்ல டிரோன் தாக்குதல் சதி செய்தது என உக்கிரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டினை எழுப்பியது.
இதற்கு எங்களது எல்லைக்குள் தான் நாங்கள் நடவடிக்கையில் இறங்கினோம்…ரஷ்ய அதிபர் மாளிகை அல்லது ரஷ்ய அதிபரை கொல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று மறுப்பு தெரிவித்தார் உக்கிரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கி.
ரஷ்யா கோபத்தினை மேலும் உக்கிரைன் சீண்டினால் அடுத்து அணு ஆயுத போராக மாறும் அபாயம் இருக்கிறது.அத்துடன் ரஷ்யா அடுத்து மிகப்பெரிய தாக்குதலை உக்கிரைன் மீது நிகழ்த்த வாய்ப்பிருப்பதாக ராணுவ வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.
ஆக , உக்கிரைன் போரால் யாருக்கும் லாபமில்லை என்பதோடு நமக்கு தான் விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது தான் நிஜம்!.
Leave a comment
Upload