தொடர்கள்
பொது
ஆப்பிள் வாங்கலையோ ஆப்பிள். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பை - பால்கி

20230405155708617.jpg

ஆப்பிள்னாவே ஆஆஆ…னு வாயப் பொளக்காதவங்க இல்லைதான்.

அது

பழமாகட்டும். மொபைலாகட்டும்.

இந்தியாவிலேயே முதல் ஆப்பிள் ஸ்டோர் பெற்ற முதல் நகரம் என்ற பெருமை அம்ச்சி மும்பைக்கு உண்டு.

ஆமாங்க, இரு வாரங்களுக்கு முன் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (Bandra Kurla Complexல்) உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் (இந்த இடம் முன்னளில் டிரைவ்-இன் தியேட்டராக இருந்த இடம்), தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது இருபத்தைந்தாவது வயதைக் கொண்டாடும் வகையில் தனது முதன்மை சில்லறை விற்பனைக் கடையை இந்தியாவில் திறந்தது. அந்தக் கடையை திறந்து வைக்க முதலாளியே, டிம் குக் வந்திருந்தார்.

20230405155750206.jpg

(இது டிம் குக் அல்ல. நம்ம பால்கிதான்)

ஆப்பிள் BKC என்ற இந்த ஸ்டோர் செயல்படும் வகையில் கார்பன் நியூட்ரல், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் (renewable energy) இயங்குகிறது. Apple BKC , தனக்கு ஸ்டோர் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றல் அனைத்தையும் பிரத்யேக சோலார் எனர்ஜி மூலமாகவே பெற்றுக்கொள்வது போன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு ஹைலைட்.

கூரை உச்சியில் 1,000 ஓடுகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஓடுகளும் 408 மரக்கட்டைகளால் 31 தொகுதிகளை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த அழகான வடிவமைப்பு, கடைக்குள் நுழையும் எவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

உலகின் வேறு எந்த ஆப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கப்பெறும் 1) ஸ்டோரிலேயே பிக்-அப் வசதி, 2) ஆப்பிள் ‘ஜீனியஸ்’ உடனான தொடர்புகள் போன்ற சேவைகளை இந்த ஸ்டோரிலும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்பது தான்.

ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு அமர்வுகள் Apple BKC இல் தினமும், Today at Apple" அமர்வுகள் மூலம் நடத்துகின்றது. இது தொழில் வல்லுநர்கள், படைப்பாளிகள் அல்லது Apple பணியாளர்களால் நடத்தப்படும். இந்த அமர்வுகளில் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாற்றல் வல்லுநர்கள் தலைமையில் வகுப்பறைகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆப்பிள் வாங்குபவர்கள் தங்கள் பழைய ஐபோன்கள், மேக், ஐபாட் ஆகியவற்றை புதியதாக மாற்றிக்கொள்ளும் திட்டம் இங்கும் உண்டாம். டிரேட் இன் திட்டம் ஆப்பிள் பிகேசியிலும் கிடைக்கிறது.

ராஜஸ்தானில் இருந்து பெறப்பட்ட இரண்டு கல் சுவர்கள் உள்ளன.

Apple BKC ஸ்டோரில் பணி புரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூட்டாக 20 மொழிகளைப் பேசுகிறார்கள்.

அமேரீக்காவ்லத் தான் ஆப்பிள்னு இனி சொல்லத்தேவையே இல்லை. அங்க உள்ள கடைய்ல என்னவெல்லாம் கிடைக்குமோ அதெல்லாம் இங்க கிடைக்குமா என்றேன். அதற்கு, வாயிலில் நின்றிருந்து வரவேற்ற இளம் பெண்மணி அதையே,” இங்க என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் அங்க கூட கிடைக்கும்” என்றாளே பார்ப்போம்.

20230405160434553.jpg

பச்சை நிற டீ ஷர்ட் போட்ட பசுமை நிறைந்த சேல்ஸ் எக்ஸிகூட்டிவ்ஸ் பம்பரமாய் கிரவுண்ட் ஃப்ளோர் என்ன முதல் மாடி என்ன இவ்விரண்டு நிலைகளிலும் சுமார் 22,000 அடி பரப்பளவை சுற்றி சுற்றி வந்து வரும் பார்வையாளர்களை (ஆமாம், இப்ப இங்க மியூஸியம் பாக்க வர்ர மக்கள்) கிரவுண்ட் ஃப்ளோரிலும், ஆப்பிளை வாங்க கூடையோடு, ஆமாங்க, கூடை பணத்தோடு, முதல் மாடியிலும் கவனிக்கிறாங்க. அவர்கள் ஆப்பிள் தயாரிப்புகளில் சிறந்த மிகுந்த அறிவு பெற்றவர்களும் கூட.

ஐ ஃபோன் மட்டுமில்லைங்க, Mac கம்ப்யூட்டர், Ipad, airpod, TV என்ற பல பல பள பள எலக்ட்ரானிக் அயிட்டங்கள் நம்மை போட்டி போட்டுக்கொண்டு கட்டி போட்டு போடுகின்றன.

ஸ்ம்மர் வெகேஷன் ஆரம்பிச்சாச்சு. அங்க ஏதோ குழந்தைகள் கும்மாளமிட்டவாரு இருந்தனர். எந்த பொருளையும் பல்லை பிடுங்கி பார்த்து வாங்கலாம் என்பது போல், குழந்தைகள் தனக்கிஷ்டப்பட்ட இயங்கிகளில் இயங்கினர். கூடவே நடமாடும் ஏடிஎம்களும். இருந்த நிலைமைப் பார்த்தால் வந்தோமா பாத்துட்டுப் போய் வீட்டுல அக்கம் பக்கத்துல பேசி முடிவெடுத்து என்ற பத்ததியே இல்லாமல், வந்தோமா பாத்தோமா வாங்கிட்டு போனோமா என்றே அந்த முதல் மாடி ஏரியாவில் நிகழ்வுகள் இருந்தன.

2023040516031952.jpg

கிரவுண்ட் ஃப்ளோரில் தனது தயாரிப்புகள் மற்றும் மென் பொருள் பற்றி அவ்வப்போது ராட்ஷத டீ வி ஸ்க்ரீனில் விவரித்தும் வருகிறார்கள்.

இவ்வளவு கூர்ந்து நோக்கியும் கல்லாப் பொட்டி டேபிளோ பணத்த வாங்கி எண்ணிப் போட ஒருவரோ அங்கு காணவில்லை. அந்த பச்சை டீ ஷர்ட்களில் யார் சீனியர் என்றே தெரியவில்லை. அதுதான் ஆப்பிள் ஸ்டோரின் தத்துவமோ!

ஒவ்வொரு ஆண்டும், 'பேக் டு ஸ்கூல்' எனப்படும் விளம்பரத் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்திடுகிறது, அங்கு, கல்வியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பிற தகுதிவாய்ந்த வாங்குபவர்களுக்கு சில தயாரிப்புகளில் தள்ளுபடியை வழங்குகிறது. சிறப்பு விலைகளுடன் கூடுதலாக, ஆப்பிள் ஏர்போட்களை பயனர்கள் தகுதிபெறும் பொருட்களை வாங்கும்போது இலவசமாக வழங்குகிறது.

இந்தியாவிலேயே நமது தமிழகத்தில் தான் ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில், ஹோசூர் என்ற இடங்களில் ஆப்பிளின் தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பது நமக்கு பெருமை தானே.

சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட ஐபோன் சிறந்த மறுவிற்பனை மதிப்பைக் கொண்டிருப்பதற்கு மற்றொரு பெரிய காரணம் அதன் தனித்துவமான இயக்க முறைமையாகும் (operating syatem). தங்கள் சொந்த செயலி மற்றும் ஐபோன் பயன்பாடுகளை மட்டுமே இயக்கும் இயக்க முறைமையுடன் ஐபோனை உருவாக்கும் ஒரே உற்பத்தியாளர் ஆப்பிள்.

மென்பொருளைப் பொறுத்தவரை, iPhone க்கு எந்தப் போட்டியும் இல்லை.