தொடர்கள்
பொது
மயிலாப்பூர் திருவிழா - சிற்றுலா - வேங்கடகிருஷ்ணன்

20230006233614636.jpg

மார்கழி வந்தாலே சென்னையின் தெற்குப்பகுதி களைகட்டிவிடும். குறிப்பாக மயிலாப்பூர், அடையார் , பெசன்ட் நகர் பகுதிகள் கச்சேரிகள், கேன்டீன் ஸ்பெஷல் மற்றும் கலகலவென சுற்றிவரும் மக்கள்.

20230006233711281.jpg

அதுவும் ஜனவரியில் முற்பகுதி " மைலாப்பூர் திருவிழா " வால் கோவிலின் வாசல் முதல் நான்கு மாட வீதிகளும் கடைகளால் நிரம்பி விடும்.

20230006233804647.jpg20230006233845370.jpg

ஒரு புறம் கோலப்போட்டி, (பெண்களை விட அழகாய் கோலம் போடும் ஆண்கள். ) மறுபுறம் மாலையில் ராஜகோபுரம் வாசலில் உள்ள மேடையில் கலை நிகழ்ச்சிகள். கிராமத்து திருவிழா போலவே படபடக்கும் பட்டாம்பூச்சிகளாய் வலம் வரும் இளம் பெண்களை காணவே வரும் இளைஞர் கூட்டம்.

20230006233943268.jpg20230006234026452.jpg

அவரவர் வீட்டுவாசலிலேயே தங்கள் கைவண்ணத்தை, சமைக்கும் திறமையை கடை விரிக்கும் மயிலை வாசிகள். சுந்தரேஸ்வரர் தெரு முழுதும் சாப்பாட்டுக்கு கடை தான். அங்கெ சூடாய் போட்ட மிளைக்காய் பஜ்ஜியை பேப்பரில் சுற்றி ஒரு கடி, காளத்தி கடை ரோஸ் மில்க் ஒரு குடி...ஜீலி ஜிலுவென காற்று வீச, மேடையில் அழகான நடனம் நடக்க, கபாலிகோயில் பின்னணியில் அப்படியே உட்கார்ந்து அதை ரசிக்கும் போது....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...(மயிலாப்பூர் வாசிகளுக்கு மட்டும்....பொறாமை...லைட்டா.) என்று பாடத் தோன்றும்.

20230006234208313.jpg2023000623424594.jpg

அங்கே நாம் கண்ட, நம்மைக் கவர்ந்த காட்சிகள் உங்கள் கண்ணுக்கு விருந்தாக...எமது கமெண்டுகளோடு.....உங்கள் பார்வைக்கு....

20230006234333897.jpg20230006234406988.jpg

வாய்ப்பு இருப்பவர்கள்...சனி மற்றும் ஞாயிறு சென்று அனுபவித்துவிட்டு வரலாம். ...