தொடர்கள்
அரசியல்
மிஸ்டர் ரீல்

20230007083410521.jpg

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பார்க்கப் போகிறேன் என்று ஆசிரியரிடம் சொன்ன போது " இப்போது ராகு காலம் நடக்குது ….ராகு காலம் முடிந்து போங்கள் " என்றார் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக இருக்கும் என்று மிஸ்டர் ரீல் ராகு காலம் முடிந்ததும் அண்ணாமலையை பார்க்கப் போனார்.

அண்ணாமலை பார்க்க உள்ளே நுழைந்ததும் மிஸ்டர் ரீல் " ஓ இதுதான் அந்த வார் ரூமா" என்று கேட்டார் அதற்கு அண்ணாமலை "இல்லை இது “மோர் ரூம்” வரும் விருந்தாளிகளுக்கு நாங்கள் இந்த ரூமில் தான் மோர் தருவோம்" என்றார்.

அப்போ அந்த வார் ரூம் எங்க இருக்கு என்று கேட்டபோது அது வேண்டாம் உங்கள மாதிரி சின்ன பசங்க எல்லாம் பார்த்தா பயந்து போய் மூச்சா போயிடுவீங்க "என்று சதாய்த்தார் அண்ணாமலை.

உடனே மிஸ்டர் ரீல் "சரி அதை விடுங்க வார் ரூம் பற்றி நிருபர்கள் கேட்டபோது என்னிடம் நேவி, ஏர் போர்ஸ் ,மிலிட்டரி எல்லாம் இருக்கு தேவைப்படும் போது பயன்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். இது தப்பு இல்லையா இதெல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. நீங்கதான் ஆளுங்கட்சி என்றாலும் இதை உங்க கட்சிக்கு பயன்படுத்த போறீங்க என்று நீங்களே சொல்றீங்க நாளைக்கு இதுக்காக உங்க மேல ராஜ்நாத் சிங் மேல 19 பொது நல வழக்கு மேல்கோர்ட், கீழ்கோர்ட், சென்டர் கோர்ட் இப்படி எல்லா கோர்ட்லயும் கேஸ் போட போறதா பேசுகிறார்கள். அவங்க கிட்டயும் இதற்கான வீடியோ ,ஆடியோ ஆதாரம் இருக்காம்.

நாளைக்கு ராகுல் காந்தி ஒரு ஸ்பெஷல் பிரஸ் மீட்டு வச்சிருக்கார். அங்கே சீனா ,அருணாச்சலப்பிரதேச ஆக்கிரமிக்க முயற்சி பண்ணும் போது எங்க அண்ணாமலை மிலிட்டரி, நேவி, ஏர் போர்ஸ் எல்லாம் கட்சிக்காக பயன்படுத்துகிறார் என்று சொல்லப்போகிறாராம் " என்று சொல்ல அதற்கு அண்ணாமலை முகத்தில் கொஞ்சம் பதட்டம் தெரிந்து பயந்து போய் என்னது அப்படியா என்றவர் சுதாரித்துக் கொண்டு " மிலிட்டரி என்று பொதுவாக தானே சொன்னேன் இந்திய மிலிட்டரி என்று சொல்லவில்லை" என்று சமாளிக்க முற்பட அப்போது மிஸ்டர் ரீல் அண்ணாமலை என்று சொன்னால் அது யார் என்று அர்த்தம் உங்களைத்தானே" என்று சொல்ல உடனே பெருமையாக அண்ணாமலை ஆமா …ஆமா… என்று சொல்ல அதேபோல் தான் மிலிட்டரி என்றால் இந்தியா மிலிட்டரி என்றுதான் அர்த்தம் நீங்கள் இந்திய ராணுவத்தை தான் மிஸ் யூஸ் பண்றீங்க அப்படின்னு தான் கொண்டு போகப் போறாங்க "என்று மிஸ்டர் ரீல் பயமுறுத்த அப்போது அண்ணாமலை "கொஞ்சம் பரபரப்பாக இருக்கட்டும் என்று சும்மா அடிச்சு விட்டேன் நீங்க சொல்ற அந்த பொது நல கேஸ் ராகுல் காந்தி எல்லாம் ரீல் தானே "என்று கொஞ்சம் சந்தேகமாக அண்ணாமலை கேட்க அதற்கு மிஸ்டர் ரீல் "நீங்க உங்க வார் ரூம் டீம் இருக்கே அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே அவங்கள கேளுங்க "என்றார்.

அப்போது அண்ணாமலை" யாரும் பத்திரிக்கையாளர்களை இப்படி உட்கார வைத்து சந்திப்பது கிடையாது நான் தான் இப்படி சந்தித்து ஓபனா எல்லா விஷயத்தையும் சொல்றேன் "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் டிவி சேனல்களைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களை பொருத்தவரை அவங்களுக்கு நீங்க தெய்வம் சார் அவங்க உங்கள மறக்க மாட்டாங்க உங்க பேட்டி என்றால் 15 பிரேக்கிங் நியூஸ் கன்ஃபார்ம் என்ற நம்பிக்கையுடன் அவங்க வராங்க " என்று மிஸ்டர் ரீல் சொல்ல அப்போது அண்ணாமலை "நெசமாவா சொல்றீங்க "என்று கேட்டார்.

அப்போது மிஸ்டர் ரீல் "எனக்கு பொய் சொல்ல தெரியாது சார் உங்க பேரு இப்ப சேனல்களில் “பாதர் ஆப் பிரேக்கிங் நியூஸ்” பெருமையா சொல்றாங்க உங்க கிட்ட வந்தா நம்பிக்கையா பரபரப்பு செய்திக்கு பஞ்சம் இருக்காது அந்த மந்திரி துறைமுகம் வாங்கி இருக்காரு …இந்த மந்திரி இந்தோனேஷியாவில் தீவு வாங்கி இருக்காரு ….பிலிப்பைன்ஸ்ல முதலமைச்சர் ஒரு மாநிலத்தை வாங்குறதுக்கு பேச்சு வார்த்தை நடக்குது. அது சம்பந்தமா என்கிட்ட ஆதாரம் இருக்கு என்று நீங்க அடிச்சு விடுறீங்க இல்ல அதனாலதான் சார் அவங்க டி ஆர் பி ரேட்டு எகிறுது" என்று சொன்ன மிஸ்டர் ரீல் "நான் உங்களுக்கு இன்னொரு உண்மையை சொல்றேன் எல்லா டிவி சேனல் நிருபர்கள் போன் ஓபன் பண்ணா ஸ்கிரீன் சேவர்ல உங்க போட்டோ தான் சார் வச்சிருப்பாங்க நீங்க தெய்வம் சார் தெய்வம் " என்ற மிஸ்டர் ரீல் நான் கூட உங்க போட்டோ தான் வச்சிருக்கேன் இது போனை காட்ட முற்பட "அப்போது அண்ணாமலை" வேண்டாம் நீங்க பொய் சொல்ல மாட்டீங்க எனக்கு தெரியும் "என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல் "நான் இப்போ இன்னொரு உண்மையை சொல்லவா "என்று கேட்க அதற்கு அண்ணாமலை "நீங்க சொல்வதெல்லாமே உண்மைதான் எனக்கு தெரியும் மிஸ்டர் ரீல் சொல்லுங்க" என்றார் டிவி சேனல் டிஆர்பி ரேட் கொஞ்சம் டல் ஆனால் உடனே அண்ணாமலை பேட்டி வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று விளம்பர ஏஜென்சி எங்களுக்கு கோரிக்கை வைக்கும் உடனே நாங்கள் அண்ணாமலை பேட்டிக்கு ஏற்பாடு செய்வோம் என்றார். என்னிடம் ஒரு சேனல் காரர் "என்று மிஸ்டர் ரீல் சொல்ல அதற்கு அண்ணாமலை பேட்டி தர வேண்டியவர் நான் அது நான் தானே தீர்மானிப்பேன் நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும் எனக்கெனவே மிஸ்டர் ரீல் இது மட்டும் உண்மையாக தெரியவில்லை ரீல் மாதிரி தெரியுது "என்று சொல்ல "நீங்கள் கேட்ட அதே கேள்வியை நான் அந்த சேனல் நிருபரிடம் கேட்டேன் அதற்கு அவர் சொன்னது எல்லா சேனல்களும் சேர்ந்து ஒரு வார் ரூம் வைத்திருக்கிறார்களாம் அந்த வார் ரூம் இந்த வேலையை பார்ப்பார்களாம்" என்று மிஸ்டர் ரீல் சொல்ல உடனே அண்ணாமலை அதிர்ச்சியாகி " என்னது அவங்களும் வார் ரூம் வைத்திருக்கிறார்களா "என்று கேட்டுவிட்டு சரி அப்படியே வைத்துக் கொண்டால் கூட அந்த வார் ரூம் என்னை எப்படி பேட்டி குடுக்க வைக்க முடியும்" என்று கேட்டார் அண்ணாமலை.

அப்போது மிஸ்டர் ரீல் நான் இன்னொரு உண்மையை உங்களுக்கு சொல்லப் போகிறேன். நீங்கள் அதிர்ச்சி அடையக் கூடாது உங்களுடைய வார் ரூம் ஐடியாவே கூட அந்த வார் ரூம் ஏற்பாடு தான் அதே மாதிரி உங்க வார் ரூம் நிபுணர்கள் சேனல் வார் ரூம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். உங்க வார் ரூம் உங்களுக்கு பேட்டி தர யோசனை சொல்லும் தானே அந்த யோசனையை உங்க வார் ரூமுக்கு சேனல் வார் ரூம் தான் சொல்கிறது என்று சொல்ல என்ன விட சேனல் வார் ரூம் அறிவாளிகளா இருப்பாங்க போல இருக்கே என்று அண்ணாமலை யோசிக்க ஆரம்பிக்க அப்போது மிஸ்டர் ரீல் "நான் இப்போது ஒரு உண்மை சொல்லுவேன் ஆனால் இதுதான் கடைசி உண்மை "என்று சொல்ல "சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாது தயவு செய்து அந்த கடைசி உண்மைய சொல்லுங்க "என்று அண்ணாமலை கேட்க அப்போது மிஸ்டர் ரீல் "நீங்க காயத்ரி ரகுராம் பிரச்சனை பற்றி நிருபர்கள் கேட்டபோது அதற்கு என்ன பதில் சொன்னீர்கள் அதை சொல்லுங்கள் "என்று கேட்க அப்போது அண்ணாமலை "அண்ணே உண்மையில் எனக்கு ஞாபகம் இல்லை உண்மை உரிமையாளர் நீங்கதான் நான் அப்ப என்ன பதில் சொன்னேன் என்ற உண்மையை நீங்களே சொல்லுங்க "என்று கேட்க அதற்கு மிஸ்டர் ரீல் "விமர்சனங்களுக்கு என்னுடைய பதில் மௌனம் தான் என்று பதில் சொன்னீர்கள் கரெக்டா "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு நீங்க உண்மையில் மிஸ்டர் ரீல் இல்லை உங்க பேர் மிஸ்டர். உண்மை கரெக்ட் அப்படி தான் பதில் சொன்னேன் "என்று அண்ணாமலை சொல்ல நீங்க சொன்னத காயத்ரி ரகுராம் அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி ஒரு பெரிய பிரஸ்மிட்டே வைக்கப் போறாங்க நாளைக்கு "என்று சொல்ல "நான் எங்க அவங்க சாதகமா சொன்னேன்" என்று அண்ணாமலை கேட்க நீங்க என்ன பதில் சொன்னீங்க… மௌனம் தான் என் பதில் அப்படின்னு சொன்னீங்க அவங்க என்ன சொல்றாங்க மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அவரே என் குற்றச்சாட்டு எல்லாம் ஒப்பு கொண்டு விட்டார் என்று பெருசா பேச போறாங்க "என்று மிஸ்டர் ரீல் சொல்ல என்னது மௌனத்துக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா என்று அப்படியே அண்ணாமலை உறைந்து போய் இருக்க… இனிமே இங்க இருந்தா சரி படாது என்று புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.