தொடர்கள்
கதை
வேர் பலா - பா. அய்யாசாமி


20230007002950472.jpg


டேய், நிறுத்து. என முழங்கியபடி அவ்வழியே வந்த ஆட்டோவை கையைக் காட்டி நிறுத்தமுயற்சித்தான் ரகு.

ரகு, முரட்டு உருவம், சிவந்த உடல் வாகு, பார்த்தால் யாருக்கும் சந்தேகம் வாராத தோற்றம்பார்த்ததும் ஏதோ ஒரு போலீஸ் உயர் அதிகாரி போலவே இருப்பான் ஆனால் அவன் ஒருவழிபறித்திருடன்.

வேகமாக வந்த ஆட்டோ நிலைத்தடுமாறி இங்கும் அங்குமாக ஓடி அலைந்து கீரீச்..கிரீச்என சப்தமிட்டபடி இவன் அருகே வந்து நின்றது.

இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் காட்டி உள்ளே இருந்தவர்களை கீழே இறங்கச்சொன்னான், விரைந்து ஆட்டோவில் ஏறியவன், என்ன நினைத்தானோ மீண்டும் கீழேஇறங்கி பெண்ணின் சங்கிலியை கழட்டிக் கொடு என மிரட்டினான். அவள் மறுக்கவே, ஆட்டோவை விட்டுவிட்டு ஓட எத்தனித்த ஓட்டுநரை ஒரு கையால் சட்டையைப் பிடித்துதன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு் மேலும் அவர்களைப் பார்த்து கத்தியை காற்றில்வீசியபடி மிரட்டினான், வயதான அந்த தம்பதியரும் மறுக்கவே ஓங்கி அந்த பெரியவரைகன்னத்தில் அறைந்தான், நிலை குலைந்தவர் மயங்கி கீழே விழுந்திட,அவள் அணிந்துஇருந்த சங்கிலியில் ஒன்றை மட்டும் வெடுக்கெனப் பறித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிவிரைந்து ஆட்டோவை பொன்னம்பலத் தெருவிற்குப் போ எனக் கத்தியைக் காட்டிட,ஓட்டுநர் பயந்தபடியே ஆட்டோவை இயக்கினான்...

சற்று முன்னர்..... அதே பொன்னம்பலத்தெரு, இன்று வழக்கத்திற்கு மாறான அமைதிசூழ்ந்து இருந்தது, ஏழு மணிதான் ஆகுது, அதற்குள் அத்தனை இருட்டு சாலையில் யாரும்இல்லை, நோட்டமிட்டான் அங்கும்இங்கும், பெரிய பெரிய வீடெல்லாம் காவலாளிவாசலில் அமர்ந்து இருக்க ஒரு வீட்டில் மட்டும் ஆள் அரவமே இல்லாமல் வாசல் கேட்டும்திறந்து இருந்ததைக் கண்டவன், மெதுவாக அடி மேல் அடி வைத்து போர்டிகோவினுள்நுழைந்தான்,

வீட்டில் யாரும் இல்லாத்தை உறுதி செய்தவன் , நாம நினைத்தது போலவே இதுவரைநடப்பதைக் கண்டு மனத்திற்குள் ரசித்துக் கொண்டான்.

கதவருகே இருந்த அழைப்பு மணியை அழுத்தினான், யாராவது வருவார்கள், அவர்களைத் தாக்கிவிட்டு உள் நுழைவது அவனின் அப்போதையதிட்டமாக இருந்தது.இதுதான் அவனின் திருடும் விதம்.

“ இதோ வருகிறேன் அப்பா, என்ற குரல் உள்ளே இருந்து கேட்டது, கதவைத் திறக்க பெண் ஒருத்தி வருவதை உணர்ந்து தாக்குவதற்கு தயாரானன் ரகு.

கதவு திறக்கப்பட்டதும், அவன் கதவை உந்தித் தள்ளியதில் அந்தப் பக்கத்தில் இருந்துகதவைத் திறந்த பெண், அம்மா..ஆ..ஆஆ..அம்மா.. என்று அலறியபடி வானம் பார்த்தபடிபொத் என்று விழுந்தவள் நிறை மாத கர்ப்பிணி.
கதவைத் திறந்து உள்ளே வந்தவன், அவள் கீழே வீழ்ந்ததையும், அவளின் விழுந்தநிலையைக் கண்டதும் ரகுவிற்கு என்னவோ போல் ஆயிற்று மனம் கடந்துஅடித்துக்கொண்டது,

தன் மனைவியை நிறை மாதமாக விபத்தில் இழந்தபோது கடைசியாக பார்த்தது இதேநிலையில், ரத்தப்போக்கோடு தரையில் விழுந்து புரண்ட காட்சி அவன் கண் முன்னே வந்துபோனது.

திருட வந்தவனுக்கு திருந்த ஒரு வாய்ப்பு வந்தது போல, உடன் மனிதம் தன் வேலையைசெய்ய ஆரம்பித்தது.

“அம்மா, பதறாதே, கொஞ்சம் பொறுத்துக்கொள், இதோ வண்டி ஏதாவது பார்த்து அழைத்து வருகிறேன், உடனே நாம மருத்துவமனைக்குப் போயிடலாம் தைரியாமாஇருங்கள். "நான் இருக்கேன்"
என நம்பிக்கை வார்த்தைகளை கூறி, வெளியே ஓடிச்சென்றவன் ஆட்டோ ஒன்றினை வீட்டிற்கு அழைத்து வந்து அவளை அவள் கூறியது போலவே தொடர்ந்து சிகிச்சைப்பெறும் மருத்துவமனையில் பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு வாசலில் அமர்ந்திருக்கின்றான் ரகு.

விஷயம் கேள்விப்பட்டு அவளது பெற்றோர்களும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

பலமாக முதுகில் அடிப்பட்டு இருக்கு, நல்ல வேளை தலையில் ஏதும் அடியில்லை, மேலும்சரியான நேரத்திற்கு அழைத்து வந்ததால் எங்களால் சிகிச்சை அளிக்க முடிந்தது, சிறிதுகாலம் கடந்ததிருந்தாலும் இரண்டு உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியாமல்போயிருக்கும், நீங்கள் போய் உங்க மகளையும், பேரனையும் பார்க்கலாம் என்றார் மருத்துவர்.

“எங்களை மன்னிச்சுடும்மா, இப்படி இந்தநிலையிலே உன்னை தனியே விட்டு நாங்கள் வெளியே போயிருக்க கூடாது, என்ன நெருங்கியச் சொந்தக்காரர்களின் திருமணமாக இருந்தாலும், தவிர்த்திருக்கனும் எனபுலம்பிக் கொண்டு இருந்தபோது, ரகு மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

வா அண்ணா! என்றாள் உரிமையோடு ரகுவை. “அப்பா, இவர் மட்டும் அந்த நேரத்திற்கு நம்வீட்டிற்கு வரவில்லை என்றால் என் கதி ?

இல்லைம்மா, இப்படி நடக்க காரணமே நான்தானே, என்னை மன்னித்து விடுங்கள் என்ற ரகு, “ இந்தாங்க அம்மா உங்கள் செயின் என கொடுத்தபோதுதான் அவர்கள் கவனித்தார்கள் ஆட்டோவை வழி மறித்த செயின் திருடன்தான் இவன் என.

“வேண்டாம், அதனை நீயே வைத்துக்கொள், இத்தனை பெரிய உதவி செய்து இருக்கே என்றாள் அம்மா, கன்னத்தை தடவியபடி இருந்த அப்பாவைப் பார்த்த ரகுமன்னித்துவிடுங்கள் ஐயா, என்றான்.

மகளை இந்த நிலையில் தனியே விட்டு போனதற்கு நீ எனக்கு கொடுத்த தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார் சிரித்தபடி,இந்த செயின் என் மருமகனுக்கு என குழந்தைக்கு அணிவித்து விட்டு மகிழ்ச்சியோடு கிளம்பினான் ரகு.