தொடர்கள்
பொது
சென்னையின் முதல் ரோப் கார் - மாலா ஶ்ரீ

20230007001516650.jpg

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, நீண்ட காலமாக ஆட்சிகள், நினைவிடங்கள் என உருமாறினாலும் கிடப்பிலேயே இருந்து வந்திருக்கிறது. இதுபற்றி பல்வேறு விவாதங்கள் நடந்தபோதிலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. ( இரண்டாவது இரண்டாவது என்று சொல்கிறோமே பலருக்கு முதல் கடற்கரை எங்கே என்றே தெரியாது. எனக்கு தெரியும். உங்களுக்கு தெரிந்தால் காமெண்ட்டில் போடுங்கள் 😀)

20230007002005102.jpg

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், "சென்னை நகரில் முதல்கட்டமாக 3.5 கிமீ தூரத்துக்கு ரோப்கார் சேவை திட்டம் கொண்டு வரப்படும். இது, மற்றொரு போக்குவரத்து முறையாகவும் இருக்கும். எதிர்காலத்தில், இது நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!" என்று தெரிவித்திருந்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை வரையிலான சுமார் 4.6 கிமீ தூரத்துக்கு ரோப்கார் சேவையைத் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

இது போக்குவரத்து என்று சொல்ல முடியாது. ஆனால் சுற்றுலாத் துறையின் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்த அறிவிப்பு சென்னைவாசிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'மெரீனா கடற்பகுதியில் கலைஞரின் பேனா சிலை அமைக்கும் திட்டப்பணிகள் தள்ளி போகலாம்' என்ற அச்சமும் (?) பலரிடையே நிலவி வருகிறது.

சிலருக்கு என்ன அச்சம்னா திறப்பு விழா அன்னிக்கு முதல்வர் ரோப் கார்ல வரும் போது நம்ம மேயரை பக்கத்தில ஃபுட் போர்டு அடிக்க விடுவார்களோ....