தொடர்கள்
அரசியல்
நாயின் விலை 20 கோடி - மாலா ஶ்ரீ

20230007001242376.jpeg

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ். இவர், இந்திய நாய் வளர்ப்போர் சங்கத் தலைவராகவும், பெங்களூரில் ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து ₹20 கோடி மதிப்பிலான ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாயை சதீஷ் வாங்கியுள்ளார். தற்போது இந்த நாய்க்கு ஒன்றரை வயதாகிறது. இதற்கு ‘கடபோம் ஹைடர்’ என சதீஷ் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாய்கள் பெரும்பாலும் ரஷ்யா, துருக்கி, பெர்ஷியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் அதிகளவு காணப்படுகின்றன. இந்தியாவில் இவ்வகை நாய்களை காண்பது மிகவும் அரிது. இந்த நாய் இன்றைய மனிதர்களிடம் இல்லாத, தன்னம்பிக்கை, தைரியம், அறிவுத்திறன் உள்பட பல்வேறு திறன்கள் கொண்டவையாக உள்ளன. இது 10 முதல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. இந்த காகேசியன் ஷெப்பர்டு’ நாயை தவிர, ₹10 கோடி மதிப்பிலான ‘திபெத்தியன் மஸ்டிப்’ எனும் அரியவகை நாய், ₹8 கோடி மதிப்பில் ‘அலஸ்கன் மலமுடே’ எனும் அரியவகை நாய், ₹1 கோடி மதிப்பிலான கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாய் என பல்வேறு உயர்வகை நாய்களை சதீஷ் வாங்கி, ஏசி அறையில் வைத்து பராமரித்து, அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில்,‘‘ஐதராபாத்தை சேர்ந்த நண்பரிடம் இருந்து ₹20 கோடி மதிப்பில் ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாயை வாங்கியுள்ளேன். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், எனது ‘கடபோம் ஹைடர்’ நாய் 32 பதக்கங்களை வென்றுள்ளது. எனது வீட்டில் இந்நாய்க்காக ஏசி வசதியுடன் தனியறையை ஒதுக்கியுள்ளேன். இது, அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது.

தற்போது கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்னை உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் கடபோம் ஹைடரை அனைவருக்கும் றிமுகப்படுத்துவேன். இதுதவிர, காகேசியன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை ₹5 கோடி கொடுத்து வாங்கி, அதன் தாயுடன் சேர்த்து வளர்த்து வருகிறேன்!’’ என்று சதீஷ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இத்தனை கோடி கொடுத்தால் 'எந்த நாய்' தான் பாசத்தோடு இருக்காது ????

மாலாஸ்ரீ