தொடர்கள்
அரசியல்
அதிருப்தியில் அரசு ஊழியர்கள்-ஜாசன்

20230006200730599.jpg

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொல்லியது. இது பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்பட சொல்லி ஆட்சிக்கு வந்ததும் உடனே அமல்படுத்தோம் என்று சொன்னார்கள்.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்கு பிறகு தமிழக அரசு நிதி சுமை 5 லட்சம் கோடியை தாண்டி விட்டது. எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக சொன்னார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதேபோல் தமிழக அரசு அகவிலை படியும் உரிய காலங்களில் வழங்காமல் தொடர்ந்து இழுத்து அடித்துக் கொண்டு வருகிறது. இது பற்றிய அரசு ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பி கூட கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த புத்தாண்டுக்கு முன்தினம் தமிழக முதல்வர் வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக கூடுதலாக 4 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்தார். கூடவே இது கூடுதல் நிதிச் சுமை என்று அறிவித்து அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்தார் முதல்வர். ஆனாலும் அரசு ஊழியர் சங்கங்கள் வேறு வழி இன்றி தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நான்கு சதவீத அகவிலைப்படிக்கு நன்றி தெரிவித்தார்கள். அப்படி நன்றி தெரிவித்துவிட்டு வந்த தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அகவிலைப்படி தந்ததற்கு நன்றி. ஒன்றிய அரசு 1.7.2022 முதல் அறிவித்த உடனே அறிவிக்காமல் காலதாமதம் செய்ததுடன் அந்த ஆறு மாதத்துக்கான நிலுவைத் தொகை அகவிலைப்படி வழங்காமல் 1.1.2022 முதல் தான் அகவிலைப்படி வழங்கி இருக்கிறீர்கள் அது கூடுதல் சுமை என்று செய்தி வெளியிட்டு இருக்கிறீர்கள் உள்ளபடியே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இதைப் படித்து வேதனைப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறது.

இனிவரும் காலங்களில் மாதாந்திர ஊழியம் வழங்குவது ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்குவது கூட கூடுதல் சுமை என அரசு கருதுமோ என்ற நிலையை முதல்வரின் இந்த அறிக்கை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சரண்டர் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வு திட்டம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று சொல்லி இருக்கிறது தமிழ்நாடு அரசு செயலக ஊழியர் சங்கம். இந்த செய்தி குறிப்பு பெரும்பான்மை பத்திரிகையில் வெளியிடாமல் பார்த்துக் கொண்டது தமிழக அரசு.

இதே போல் கொரோனா காலத்தில் தற்காலிக செவிலியர்களாக அதிமுக அரசு 4000 பேரை பணி அமர்த்தி இருந்தது. கொரோனா பற்றிய அச்ச உணர்வு தான் அப்போது எல்லோருக்கும் இருந்தது .அப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைந்த ஊதியத்தில் அந்த தாற்காலிக பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். அதாவது தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த தற்காலிக செவிலியர்கள் இந்தப் பணியை செய்தார்கள். அவர்களுக்கு இந்த அரசு புத்தாண்டு பரிசாக இனிமேல் நீங்கள் வேலைக்கு வர வேண்டாம் என்று அரசாணை வெளியிட்டது. இதைக் கண்டித்து தாற்காலிக செவிலியர் சங்கம் போராட்டம் நடத்திய போது சுகாதாரத் துறை அமைச்சர் வழக்கப்படி இந்த பழியையும் அதிமுக அரசு மீது போட்டார். இட ஒதுக்கீடு நெறிமுறைப்படி அவர்கள் நியமிக்கப்படவில்லை அப்படி இருக்கும்போது அவர்களை எப்படி நிரந்தரப்படுத்துவது என்று எதிர் கேள்வி கேட்டார்.ஆனால் செவிலியர் சங்கம் இதை கடுமையாக ஆட்சேபித்தது. உரிய முறையில் நேர்முகத் தேர்வு வைத்து இட ஒதுக்கீடு அடிப்படையில் தான் பொது சுகாதாரத்துறை எங்களை நியமித்தது என்று அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்தார்கள். இன்று வரை அவர்கள் போராட்டம் தொடர்கிறது.

இதேபோல் இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதிய முரண்பாடுகளை சரி செய்யக்கோரி ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் அதில் பல பெண் ஆசிரியைகள் உண்ணாவிரதம் காரணமாக மயங்கி விழுந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்கள் அதன் பிறகு தான் இது பற்றி ஆராய குழு அமைப்பதாக அரசு ஒப்புக்கொண்டது.

தமிழக அரசு அரசு தேர்வாணைய மூலம் தேர்வு நடத்துவதை மெல்ல குறைத்துக் கொண்டு வருகிறது தேவையான பணியாளர்களை விட குறைந்த அளவு பணியாளர்களுக்கு அரசுத் தேர்வு அணையின் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதேசமயம் ஓசைப்படாமல் தமிழக அரசு அவுட்சோர்சிங் மூலமாக பணியாளர்களை நியமிக்கும் வேலையை நடத்துகிறது ஏதாவது ஊதிய உயர்வு அகவிலைப்படி ஓய்வூதியம் போன்ற நிதி சுமை வேலைகள் எல்லாம் இல்லை இதை முதல்வரை சந்தித்து சில அரசு ஊழியர்கள் சங்கம் குறிப்பிட்டு சொன்னபோது அவுட்சோர்சிங் ஆணையை நான் திரும்ப பெற சொல்கிறேன் என்றார்.

20230006201702157.jpg

ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. இப்போது கூட தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியாளருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார் அதன்படி தகுதியின் அடிப்படையில் தற்காலிக எழுத்தர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நிரந்தரம் செய்யலாம் என்று அந்த ஆணையில் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்த ஆணையின் பின்புறம் என்னவென்றால் சம்பந்தப்பட்டவர்கள் அந்த மாவட்ட அமைச்சரை பார்க்க வேண்டும் அவர் பெற வேண்டியது பெற்று அவர்களுக்கு நியமன ஆணை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வார் இது எல்லா மாவட்டத்திலும் தெரிஞ்சே நடக்கிறது.

போக்குவரத்து ஊழியர் நிலைமை இன்னும் கேவலம் மாத சம்பளம் முதல் தேதி வருமா என்ற ஏக்கம் அவர்களுக்கு இப்போது வரத் தொடங்கி விட்டது. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் பஸ் டிப்போக்களில் இந்த அரசை கண்டித்து எழுதி வைக்கும் வாசகங்கள் ஆளுங்கட்சி தொழிலாளர்கள் ரசித்துப் படித்து விட்டு போகிறார்கள் அவ்வளவு கடுமையான வாசகங்கள் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் அரசு கையால் ஆகாத அரசு என்றெல்லாம் கண்டித்து வாசகங்கள் எழுதுகிறார்கள். இது தவிர தொடர் போராட்டம் கம்யூனிஸ்காரர்கள் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த அரசு எப்படி எல்லாம் வஞ்சிக்கிறது என்று பட்டியல் போட்டு சாடுகிறார்கள்.

ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர் அவருக்கு சேர வேண்டிய பணப்பலன் காசோலை நிச்சயம் ஓய்வு பெறும் என்று கிடைக்காது எப்போது கிடைக்கும் என்பது நிர்வாகத்துக்கே தெரியாது இதுதான் போக்குவரத்து துறையில் உண்மையான நிலைமை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்காததை கண்டித்து தொழிற்சங்கம் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியது அப்படி பிச்சை எடுத்து ஒரு தொழிற்சங்க உறுப்பினர் தட்டில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை நிறுத்தி தனது பர்சில் இருந்த முழு பணத்தையும் அந்த தட்டில் போட்டு தனது ஆதரவையும் ஆதங்கத்தையும் தெரிவித்தார். நெஞ்சை உருக்கும் இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் சுற்றி சுற்றி வருகிறது. ஆனால், அரசு இது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

மருத்துவர் சங்கம் மௌன போராட்டம் கருப்பு பேட்ச் போராட்டம் இடைவெளி போராட்டம் என்று தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறார்கள் அவர்களையும் இந்த அரசு கண்டு கொள்வதில்லை.

அரசு ஊழியர்கள் எப்போதும் திமுக ஆதரவாளர்கள் என்ற ஒரு கருத்து எப்போதும் உண்டு அதிமுக ஆட்சியில் கூட ஊழியர்களை ஊதிய முரண்பாடு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்ததில்லை ஒரே ஒருமுறை அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது ஒரே கையெழுத்தில் அத்தனை பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார் அதன் பிறகு நீதிமன்றம் தலையிட்டு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும், ஜெயலலிதா அவர்கள் மீது பழிவாங்க நடவடிக்கை எல்லாம் அதன் பிறகு ஏதும் செய்யவில்லை எடப்பாடியும் அரசு ஊழியர்களிடம் கரிசனமாக தான் நடந்து கொண்டார் ஆனாலும் அப்போதும் அவர்கள் தங்கள் திமுக விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். திமுக ஆட்சி வந்ததும் தங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் நிதியமைச்சர் வாய்ப்பே இல்லை என்கிறார் முதலமைச்சர். உங்களுக்கு வழங்கும் ஊதியம் நிதிச் சுமை என்கின்றார். இவற்றையெல்லாம் இவர்கள் பாராளுமன்ற தேர்தல் பொது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்களா என்பது தான் கேள்வி