தொடர்கள்
சோகம்
" முன்னாள் போப் பெனடிக்ட் ஒரு சகாப்தம்" - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த 2022 தன் இறுதி கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வருட இறுதி நன்றி ஆராதனை மற்றும் புது வருட நள்ளிரவு திருப்பலிக்கு தயாராகி கொண்டிருக்க கத்தோலிக்க மதத்தின் தலைமையிடமான வத்திக்கான் மற்றும் போப் பிரான்சிஸ் ரெடியாகி கொண்டிருக்க ....

2023000516313321.jpg
வத்திக்கான் கார்டெனில் உள்ள மாஸ்டர் ஏசிலேசிஏ என்ற இல்லத்தில் கடந்த பத்து வருடமாக தங்கியிருந்த முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் தன் இறுதி மூச்சை இறைவன் கரத்தில் ஒப்படைத்தார் என்ற தகவல் உலகை சற்று அதிர்ச்சியில் உறைய வைத்தது .

20230005163406749.jpg
16 ஆம் பெனடிக்ட் தன் 95 வது வயதில் இறந்து போயுள்ளார் .அவரின் இறப்பு ஒரு இயற்கை நிகழ்வு தான் .அதே சமயம் இந்த முன்னாள் போப் என்பது தான் உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு சகாப்த வரலாறு .
பதினாறாம் பெனடிக்ட் முன்னாள் போப்பாண்டவரான இரண்டாம் ஜான் பாலின் மிக முக்கிய ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது .
அவரின் இறப்புக்கு பின் உலகில் உள்ள அனைத்து கர்தினால்களும் இணைந்து தங்களின் ஒருவரான கர்தினால் ஜோசப் அலோஷியஸ் ராட்சிங்கரை தேர்வு செய்தனர் .

20230005170313629.jpg 2005 ஆம் ஆண்டு மார்ச் 19 சனிக்கிழமை புதிய போப்பின் அறிவிப்புக்காக வத்திக்கான் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வெள்ளம் சூழ்ந்து அனைவரும் சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைக்கூண்டை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர் .

20230005171219102.jpg
வழக்கமாக ஒரு போப்பாண்டவர் தேர்வை அறிவிப்பது சிஸ்டென் சிற்றாலயத்தின் மேற்கூரையில் உள்ள சிம்னியின் வெள்ளை புகை வந்தால் புதிய போப் தேர்வாகிவிட்டார் என்ற சிக்னல் தான் அது . தேர்வாகவில்லை என்றால் கருப்பு புகை வெளிவரும் .

20230005171354322.jpg
அதே போல அன்று சிஸ்டைன் சிற்றாலய சிமினியில் இருந்து வெள்ளைப்புகை வர ஒரே ஆரவாரம் ஆர்ப்பரிக்க செயின்ட் பீட்டர் பேராலயத்தின் மணிகள் ஒலிக்க வெல்லகம் நியூ பப்பா என்று சப்தம் விண்ணை தொட்டது .

20230005171548392.jpg
கர்தினால் ஆலயத்தின் மேல் மாடியில் உள்ள கதவை திறந்து கர்தினால் ஹோர்கே மெதினா " நமக்கு புதிய போப்பாண்டவர் இறைவன் கொடுத்துள்ளார் " என்று கூறி அவர் தான் கர்தினால் ஜோசப் அலோஷியஸ் ராட்சிங்கர் . திருச்சபையில் மிகவும் பிரபலமானவர் என்று அனைவரும் அறிந்த ஒருவர் .

2023000517172977.jpg
இந்த அறிவிப்புக்கு பின் செயின்ட் பீட்டர் பேராலயத்தின் நடு மாடத்தில் வெண்மை அங்கியில் வெளியெ வந்த கர்தினால் ராட்சிங்கர் " போப் ஜான் பாலுக்கு பின் ஆண்டவரின் திராட்சை தோட்டத்தில் எளிமையும் , தாழ்ச்சியும் நிறைந்த பணியாளராக கர்தினால்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் இறைவனுக்கும் அன்னை மரியாளுக்கு நன்றி அவர்களின் உதவியில் உங்களின் நம்பிக்கையில் என் பெரிய பணியை துவங்குகிறேன் . 16 ஆம் பெனடிக்ட் என்ற பெயரை தேர்வு செய்துள்ளேன் " என்று கூறியுள்ளார் .
1914 முதல் 1922 யில் பணியாற்றிய போப் 15 ஆம் பெனடிக்ட் உலக அமைதிக்காக குரல் கொடுத்தவர் என்பதால் அவரின் பெயரை வைத்துக்கொண்டுள்ளார் .
16 ஆம் பெனடிக்ட் ஜெர்மன் நாட்டில் உள்ள ஆஸ்திரியாவின் எல்லையிலுள்ள பவேரியா மாநிலத்தில் மார்க்கெட்டில் ஆம் இன் என்ற சிற்றூரில் 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தார் .

20230005172224713.jpg
இவரின் தந்தை ஹிட்லரின் நாசி கொள்கைகளை எதிர்த்ததால் குடும்பத்தை துன்புறுத்தினார்கள் .

20230005173336559.jpg
ராட்சிங்கர் தன் பதினான்காம் வயதில் ஜெர்மன் படையில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் நாசி சிறையில் துன்புறுத்தப்பட்டு பின் விடுதலை கிடைத்தவுடன் இவரின் அண்ணன் ஜார்ஜ் ராட்சிங்கர் இருவரும் குருத்துவக்கல்லூரியில் சேர்ந்து பயின்று குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர் .

20230005173152941.jpg

பின்னர் மெய்யியல் மற்றும் இறையியல் பயின்று " புனித அகஸ்டின் கோட்பாடுகளில் இறைமக்கள் இல்லம் " என்ற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக மீண்டும் ஒரு முனைவர் பட்டம் பெற்று Freising கல்லூரி பேராசிரியராக பணி செய்துள்ளார் .
போன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய முதல் நாளிலே , "நம்பிக்கையின் கடவுள் மற்றும் மெய்யியலின் கடவுள்" என்ற தலைப்பில் இவரின் சொற்பொழிவு வத்திக்கானை ஈர்த்தது .
1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2 ஆம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் வல்லுனராக அழைக்கப்பெற்று சிறப்பிக்க .

20230005173516969.jpg
இவரின் இறைப்பற்று திருச்சபையுடன் உள்ள பற்றை உணர்ந்த போப் 6 ஆம் பால் 1977 ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மியூனிச் பேராயராக நியமித்து அதே ஆண்டு ஜூன் 27 அன்று கர்தினாலாக உயர்த்தினார் .பின் 1981 ல் 2 ஆம் ஜான் பால் இவரை திருப்பீட நம்பிக்கை கோட்பாடு பேராய தலைவராக நியமித்தார் .
போப்பாகும் வரை குடும்பக்கட்டுப்பாடு , ஓரினசேர்க்கை எதிர்ப்பு , பல்சமய ஒற்றுமை திருச்சபையின் போதனைகளை உலகுக்கு உணர்த்தினார் .மனிதாபிமானம் முக்கியம் கடவுளின் சாயல் மனிதன் அதனால் மாண்புடன் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் .
கர்தினால் ஜோசப் ராட்சிங்கர் 78 வது வயதில் திருஅவையின் 265 வது போப்பாக 2005 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் போப் பணியை துவக்கினார் .
இவர் போப் 12 ஆம் கிளமெண்ட் க்கு பின் வயது முதிர்ந்த போப்பாக பொறுப்பையேற்றவர் .

20230005173709342.jpg
எட்டு ஆண்டுகள் போப்பாக சிறந்த பணியை செய்து வந்த போப் பெனடிக்ட் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி தன் போப் பணியில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தவுடன் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது .
கடந்த எழுநூறு வருடங்களில் பணி ஓய்வு பெரும் முதல் போப் இவர்தான் .

20230005174232173.jpg
1294 ஆம் ஆண்டில் பணி ஓய்வை அறிவித்த போப் புனித ஐந்தாம் செலஸ்தீனுக்குப்பின் முதல் முறையாக தலைமை பணி ஓய்வை அறிவித்து உலகை திரும்பி பார்க்க செய்தார் .அவரின் தாழ்மையும் துணிச்சலையும் , மத வேறுபாடினிறி அனைவரும் பாராட்டினார்கள் .
ஒரு போப் தன் இறப்பு வரை பணியில் இருக்கலாம் .

தன் ஓய்வுக்கு அவர் கூறிய காரணம் வயது முதிர்வு .
புனித 2 ஆம் ஜான் பால் ஆழ்நிலை துறவு சபைக்காக அமைத்த Mater Ecclesiae இல்லத்தில் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்தார் .

20230005174423766.jpg
பல்வேறு கிறிஸ்துவ சபைகளுடன் நல்லுறவை ஏற்படுத்தினார் .அனைத்து மதங்களையும் மதித்து நடக்கவேண்டும் என்று வலியறுத்தினார் .
இவரின் கோட்பாடுகளால் ஏற்கப்பட தலாய்லாமா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் வத்திக்கான் வந்து இவரை சந்தித்து உரையாடி மகிந்துள்ளார் .
இவர் தன் குரு போப்பான 2 ஆம் ஜான் பால் புனிதராக உயர்த்த செய்தார் .கேரளாவின் புனிதரான சிஸ்டர் அல்போன்சா உட்பட 45 பேருக்கு புனிதர் பட்டத்தை வழங்கியுள்ளார் .
இவர் எழுதிய புத்தகங்கள் ' கடவுளே அன்பு - எதிர்நோக்கால் மீட்கப்பட்டுள்ளோம் -உண்மையில் பிறரன்பு , கடைசியாக " நம்பிக்கையின் ஒளியில் " என்ற புத்தகத்தை எழுத அதை போப் பிரான்சிஸ் வெளியிட்டார் .

20230005174618176.jpg
போப் 16 ஆம் பெனடிக்டின் கரத்தால் பிஷப் பதவியை பெற்றவர் ஊட்டி பிஷப் அமல்ராஜ் அவரை சந்தித்து பேசினோம் ,

20230005175038489.jpg

"திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தான் என்னை பிஷப்பாக தேர்ந்தெடுத்தார் 2006 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி அவர் எனக்கு பிஷப்பாக தேர்வு செய்தார் .ஆகஸ்ட் 9 ஆம் தேதி பதவியை அவரின் ஆசீருடன் ஏற்றுக்கொண்டேன் .
2007 ஆம் ஆண்டு முதல் முறையாக வத்திக்கான் சென்று அவரை சந்தித்தேன் .அவர் சொன்ன வார்த்தை " தைரியமாக பணி செய்யுங்கள் இறைவனின் நம்பிக்கையில் ஆயராக திருச்சபைக்கு பணி செய்யுங்கள் " என்று கூறினார் .


மீண்டும் 2011 ஆம் ஆண்டு அவரை இந்திய ஆயர்கள் இணைந்து சந்தித்தோம் அப்பொழுது , அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தினார் எல்லோரையும் அரவணைத்து செல்லுங்கள் என்று கூறினார் .ஒரு அன்பான திருத்தந்தை
2013 ல் பிப்ரவரி 13 தேதி மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் .

20230005175719248.jpg
அவரின் ஓய்வு முடிவு மிகவும் வருத்தமான ஒன்று .தன் ஓய்வை ஒரு மடத்தில் தங்கி புனிதர் வாழ்வை பத்து வருடம் வாழ்ந்து இறைவனிடம் சேர்ந்துள்ளார் .அவரை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது அவர் கொடுத்த கிபிட் தான் இந்த பிஷப் பதவி " என்று வருத்தத்துடன் கூறினார் .
ஜெர்மனியில் வசிக்கும் சமூக சேவகி பிரிஜ்ஜிட்டை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20230005175853807.jpg
" எங்க ஜெர்மன் நாட்டு போப் எங்க சொந்தம் மறைந்து விட்டார் என்ற வருத்தம் எங்களின் இதயங்கள் வலிக்கின்றது .
போப் இரண்டாம் ஜான் பால் பாதர் .ஜோசப் ராட்சிங்கரை முனிச் பிஷப்பாக உயர்த்தியது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம் .அவரை நேரில் சந்தித்து கைகுலுக்கி பேசினது எல்லாம் இன்னும் என் கண்முன் இருக்கின்றது . அதை விட மகிழ்ச்சி அவரை இரண்டாம் ஜான் பால் ரோமுக்கு அழைத்து தன் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பை கொடுத்தது தான் .2005ல் போப்
இரண்டாம் ஜான் பால் இறந்த போது இவர் தான் அவருக்கு இறுதி திருப்பலி நிறைவேற்ற பீட்டர் பேராலயத்தில் ஒரு பெரும் காற்று வீசி பைபிளை முடிவிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை .
அடுத்த சில வாரங்களில் கார்டினால் ஜோசப் ராட்சிங்கர் புதிய போப்பாக உயர்த்த பட்டுள்ளார் என்ற செய்தி ஜெர்மனி முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் தான் . இவர் தான் ஜெர்மனியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற பொழுது எல்லோர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் தான் .
2006 ல் எங்களின் புதிய திருத்தந்தை தன் நாடான ஜெர்மனிக்கு வந்தார் . நாங்களும் எங்க ஊரில் இருந்து முனிச் பயணித்து புதிய போப் 16 ஆம் பெனடிக்ட்டை சந்திக்க சென்று அவரின் திருப்பலியில் கலந்து கொண்டோம் .அவர் தான் ஜெர்மனியின் முதல் போப் ..அவரை சந்தித்து கை குலுக்கி பேசியதை மறக்க முடியவில்லை அந்த நிகழ்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .

2023000518140254.jpg
2013 நாங்கள் முதல் முறையாக ரோம் சென்று பீட்டர் பேராலயத்தில் போப்பின் ஈஸ்டர் திருப்பலி காண சென்றோம் எங்க ஜெர்மன் போப்பை சந்தித்து உரையாட சென்றோம் .
எங்களுக்கு தெரியவில்லை பிப்ரவரியில் அவர் தன் பதவியை துறந்து ஒய்வு பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் எங்களை கண்கலங்க செய்தது .
பின்னர் புதிய போப் பிரான்சிசின் முதல் ஈஸ்டர் திருப்பலியில் கலந்து கொண்டோம் .
பின்னர் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அவரை பார்க்க செல்ல தன் காரில் நேராக எங்கள் அருகில் வந்து பேசினார் .போப் பெனடிக்ட் எப்பொழுதும் எங்களின் போப் மற்றும் ஓய்வு பெற்ற மாண்பு மிக்கவர் தான் .எப்பொழுதும் அவரை அன்பு செய்கிறோம் அவரின் ஆன்மாவுக்கு எங்களின் ஜெபங்கள் .அவரை இழந்த வருத்தத்தில் ஜெர்மனி இருக்கிறது "
என்று கூறினார் .

20230005180054198.jpg

போப் பெனடிக்டின் உடல் கடந்த நான்கு நாட்களாக செயின்ட் .பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டு ஏராளமான பிஷப்புகள் , குருக்கள் , கன்னியர்கள் , மக்கள் வெள்ளமாக வந்து இறுதி வணக்கத்தை சமர்ப்பித்தனர் .
5 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு செயின்ட் .பீட்டர் சதுக்கத்தில் அவரின் உடல் தாங்கின சவ பெட்டி வைக்கபட்டு இறுதி துக்க திருப்பலி போப் பிரான்சிஸ் தலைமையில் 125 கர்தினால்கள் இணைந்து நிறைவேற்றினார்கள் .

20230005180235910.jpg
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த இறுதி திருப்பலியில் கலந்து கண்டு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் .
பெனடிக்டின் நீண்டகால செயலர் பேராயர் ஜார்ஜ் கைஎஸ்வீன் அவரின் உடலை தாங்கி வந்த சவ பெட்டியின் மேல் திறந்து வைத்திருந்த சுவிசேஷ புத்தகத்தை முத்தமிட்டு தன் இறுதி மரியாதையை செலுத்தினார் .

20230005180438383.jpg
அவர் இறந்து அடக்கம் செய்யும் வரை இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் வெள்ளமாக வந்து இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர் .
முன்னாள் போப் பெனடிக்ட் உடல் இறுதியாக செயின்ட் .பீட்டர் ஆலயத்தினுள் பன்னிரண்டு வத்திக்கான் காவல் அதிகாரிகளால் எடுத்து செல்ல போப் பிரான்சிஸ் பெனடிக்டின் உடல் தாங்கிய சவ பெட்டியை தொட்டு முத்தமிட்டு வழியனுப்பிவைக்க

20230005180905810.jpg
குழுமியிருந்த மக்கள் வெள்ளம் போப்பிடம் " இவரை விரைவில் புனிதர் நிலைக்கு உயர்த்துங்கள் என்று கோஷத்தை எழுப்ப . முன்னாள் போப் பெனடிக்ட் உடல் புனிதர் போப் ஜான் பால் கல்லறையில் அமைதியாக அடக்கம் செய்யப்பட்டது .