தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

திரிஷா

20230006183723840.jpg

எனக்கும் நயனுக்கும் இடையே இருக்கும் போட்டி ஆரோக்கியமான போட்டி தான். நயன்தாரா உட்பட எந்த நடிகையுடனும் எனக்கு நெருக்கமான நட்பெல்லாம் இல்லை ஒருவருடன் நட்பாக இருந்தால் தானே பிரச்சனை வரும் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை திரிஷா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கஜிஜா கேரக்டருக்கு விக்னேஷ் சிவன் சாய்ஸ் நடிகை திரிஷா ஆனால் நயன்தாரா தான் திரிஷா வேண்டாம் என்று சொல்லி நடிகை சமந்தாவை நடிக்க வைத்தார். நட்பு பற்றி நடிகை திரிஷா சொல்லி இருக்கும் கருத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பத்து தல

20230006184033208.gif

சிம்பு நடித்துள்ள பத்து தல படம் மார்ச் முப்பதாம் தேதி ரிலீஸ் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் கௌதம் வாசுதேவ் கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் இசை ஏ.ஆர். ரகுமான்.

ராதிகா ஆப்தே

20230006184209416.jpg

நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் திரைக்கதை எழுதி படம் இயக்க இருக்கிறேன் என்று சொன்னார். இந்த செய்தியை படித்த யாரோ இனிமேல் ராதிகா ஆப்தே நடிக்க மாட்டார் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டார் என்று கதை கட்டி விட்டார்கள். இதனால் அவரது ரசிகர்கள் படு அப்செட். அதன் பிறகு ராதிகா ஆப்தே இது ராங் நியூஸ். நான் எப்படி நடிப்பதை விட முடியும் அதுதானே என் உயிர் என்று சொல்லி ரசிகர்கள் மனதில் பால் வார்த்து இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

தமன்னா காதலிக்கிறாராம்

20230006184332992.jpg

தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகை தமன்னா. இந்தி நடிகர் விஜய் வர்மா உடன் இவருக்கு காதலாம். புத்தாண்டை இருவரும் கோவாவில் கொண்டாடிவிட்டு காதல் வயப்படும் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த போட்டோக்கள் ஆமா இது லவ் தான் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தி நடிகர் விஜய் வர்மா. 2012 இல் சிட்ட காங் படம் மூலம் அறிமுகமானார்.

உதவினார்கள்

20230006184529264.jpg

நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு அன்று கொண்டாடிய இந்த குடும்பத்தினர் புத்தாண்டு எழும்பூர் பகுதியில் சாலையோர மக்களுக்கு குடும்பத்துடன் சென்று பரிசுப் பொருட்களை வழங்கினார்கள் இது பற்றிய வீடியோவை நயன்தாரா வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மராத்தி நடிகருடன் விஜய் சேதுபதி

20230006184851275.png

விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். லேட்டஸ்டாக மராத்தி இயக்குனர் கிஷோர் பெலேகர் இயக்கும் காந்தி டாக்ஸ் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இவருடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி இது தவிர மராத்தி நடிகர் சித்தார்த் ஜாதவ் நடிக்கிறார். இது ஒரு மௌனப் படம் இசை ஏ. ஆர். ரகுமான்

வில்லி வேடம் ஏன்

20230006185201848.jpg

தமிழ் தெலுங்கு படங்களில் வில்லி மற்றும் குணர்ச்சித்திர வேடங்களில் நடித்து எல்லோரையும் அசத்துகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சினிமாவில் வில்லி வேடம் என்றாலே உடனே நினைவுக்கு வருவார் வரலட்சுமி சரத்குமார் தான்.நான் மட்டும் இது போன்ற வில்லியான வேடத்தில் நடிக்க தகுதியாக இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி தான் என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

கண்டித்தது ரயில்வே

20230006185358281.jpg

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இவர் செய்த உதவி மறக்க முடியாதது பாதிக்கப்பட்ட மக்களை தேடித்தேடி போய் உதவினார். சமீபத்தில் நடிகர் சோனு சூட் ரயில் படியில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வடக்கு ரயில்வே நிர்வாகம் உலகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு உதாரண புருஷர். ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது.இது போன்ற வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான செய்தியை தான் கொடுக்கும் தயவுசெய்து இதுபோன்று செய்யாதீர்கள் சமூகம் மற்றும் பாதுகாப்பான பயணம் செய்ய உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது வடக்கு ரயில்வே நிறுவனம். வடக்கு ரயில்வே இந்த பதிவை பார்த்து நடிகர் சோனு சூட் மன்னிக்கவும் . ஆனால், லட்சக்கணக்கான ஏழைகள் ரயில்வே கதவுகளுக்கு அருகே அமர்ந்து பயணம் செய்ய விரும்புகிறார்கள். நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கு நன்றி என்று பதில் சொல்லி இருக்கிறார் நடிகர் சோனு சூட். மும்பை போலீஸ் கமிஷனரும் நடிகர் சோனு சூட்டின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.