தொடர்கள்
அரசியல்
நம்ம ஸ்கூல் திட்டம் - குளறுபடியின் உச்சம் - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

20221124104609142.jpg

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தைத்முதல்வர் சென்ற வாரம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தும் திட்டம் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த திட்டப்படி நீங்கள் அரசுப் பள்ளிகளுக்கு எப்படி வேண்டுமானாலும் உதவலாம். அரசுப் பள்ளிகளின் பட்டியலை இந்த பவுண்டேஷன் தனது வலைதளத்தில் ஏற்றி இருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்ற விவரம் அதில் இருக்கிறது. கழிப்பறை வசதி தேவைப்படும் பள்ளி எது. மின்விசிறி தேவைப்படும் பள்ளி எது மாணவர்களுக்கான மேஜை நாற்காலி தேவைப்படும் பள்ளி,கரும்பலகை விளையாட்டு சாதனங்கள் இப்படி பள்ளி மாணவர்களின் கட்டமைப்புக்கு தேவையான அனைத்தும் இனிமேல் தனியார் நன்கொடை மூலம்தான் அரசு பள்ளிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் கிட்டத்தட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் தனது சொந்த நிதியிலிருந்து 5லட்ச ரூபாய் நன்கொடையாக இந்த திட்டத்திற்கு தருவதாக அந்த விழா மேடையிலேயே அறிவித்தார். அன்றைய தினமே நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு 50 கோடி ரூபாய் நன்கொடை உதவி கிடைத்தது.

இந்த திட்டம் பற்றி குறிப்பிட்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழகத்தில் தான் பள்ளிக்கல்விக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் 90% நிர்வாகச் செலவுக்கு செலவு செய்யப்படுகிறது. அதாவது ஆசிரியர் சம்பளம் மற்றும் இதர செலவினங்களை அமைச்சர் நிர்வாக செலவினங்கள் என்று குறிப்பிடுகிறார். மூன்றில் ஒரு பகுதி ஆசிரியர் பயிற்சிக்கு செலவு செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டார் அமைச்சர். அதாவது பள்ளிகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய போதிய நிதி வசதி இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டினார் அமைச்சர். மொத்த நிதியில் பெரும் பங்கு ஆசிரியருக்கு செலவு செய்தாலும் பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவருடன் போட்டி போட முடியாத நிலை தான் இன்றும் தொடர்கிறது. அப்படி என்றால் எங்கே கோளாறு என்பது பற்றி இதுவரை எந்த அரசும் யோசித்ததாகவோ அல்லது ஆசிரியர்கள் கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு போராடுவதில் காட்டும் அக்கறையை பள்ளி கட்டமைப்புக்கு மாணவர்களின் வசதிக்கு என்றும் போராடியது இல்லை. மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவது பற்றி அரசோ அல்லது ஆசிரியரோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நீட் தேர்வில் கூட அரசு மாணவர்களின் வெற்றி என்பது மிகவும் சொற்பம் தான்.

மத்திய அரசை கார்ப்பரேட் அரசு என்று விமர்சனம் செய்யும் திமுக இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனை கூட ஒரு தனியார் அமைப்பிடம் தான் ஒப்படைத்து இருக்கிறது. இதன் தலைவர் பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசன். இது அரசு பள்ளிகளை அரசு கைவிடும் மறைமுக திட்டம் என்ற விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது.

20221124104716529.jpeg

இந்த திட்டம் சொல்வதென்ன தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாக தத்தெடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த திட்டம். அதாவது இதன் மூலம் அரசுப் பள்ளிகள் தங்கள் கட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனம் அல்லது முன்னாள் மாணவர்களை நம்பி இருக்க வேண்டும் என்பதுதான் நம்ம ஸ்கூல் திட்டம்.

இந்த நிதியை அரசு கையாளப்போவதில்லை அதையும் தனியார் வசம் ஒப்படைத்து விட்டார்கள். ஏற்கனவே அரசு பள்ளிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் வகுப்பறை கழிவறை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் அரசு திணறி வருகிறது. இப்போதைய இதையெல்லாம் தனியார் பார்த்துக் கொள்வார்கள் என்று அரசு பள்ளிகளை கை கழுவி விட்டதா என்கிறார்கள் விமர்சகர்கள். நமது கல்வி மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தான் இந்த திட்டம் காட்டுகிறது என்ற விமர்சனமும் இப்போது எழுந்திருக்கிறது.

ஒரு பக்கம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திமுக கடுமையாக எதிர்க்கிறது தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை உருவாக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில் சென்ற வாரம் தனியார் பள்ளி கூட்டமைப்பு சொன்ன கருத்து இருமொழிக் கொள்கைக்கு பதில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துங்கள் மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூடுதலாக கற்றுக் கொள்ளட்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை திராவிட கட்சிகள் நீண்ட காலமாக இரு மொழிக் கொள்கை என்பது உறுதியாக இருக்கிறது.தனியார் பள்ளிகள் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்கிறது காரணம் ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் தமிழுக்கு மரியாதை இல்லை அவர்கள் இந்தி கற்றுத் தருவார்கள் அவ்வளவு ஏன் சில தனியார் பள்ளிகள் பிரஞ்சு மொழி சீன மொழி ஸ்பானிஷ் போன்ற மொழிகள் கூட சொல்லித்தரும் தனியார் பள்ளிகள் இருக்கின்றது ஆனால் தமிழ்சொல்லித் தர மாட்டார்கள். இதெல்லாம் தமிழக கல்வித் துறைக்கு தெரியும் அரசியல் தலைவர்களுக்கும் தெரியும் காரணம் பல தனியார் பள்ளிகள் நடத்துவது அரசியல் தலைவர்கள் தான்.

தமிழக அரசு புதிதாக அறிமுகப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி எண்ணும் எழுத்தும் திட்டம் திறன் மேம்பாடு என்னும் நான் முதல்வன் திட்டம் எல்லாமே தேசிய கல்விக் கொள்கையில் இருப்பது தான். ஆனால், இந்த திட்டங்களால் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் சொல்லி வருகிறார்கள். இப்போது நம்ம ஸ்கூல் திட்டம். இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலங்களை விட தேசிய கல்விக் கொள்கையை ஓசைப்படாமல் அமுல்படுத்துவது தமிழ்நாடு தான் என்ற விமர்சனமும் இப்போது எழுந்திருக்கிறது.