தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

நயன்தாராவின் பேய் பயம்

20221123182821129.jpg

நடிகை நயன்தாரா மல்லாக்காக படுக்க மாட்டாராம் அப்படிப் படுத்தால் செத்துப்போன யாராவது பேயாக வந்து நம்மில் இறங்கி விடுவார்கள் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதை இப்போதும் நம்பி பயந்து நான் ஒரு பக்கமாக தான் படுத்துக்கொள்வேன் மல்லாந்துபடுக்க எனக்கு பயம் என்கிறார் நயன்தாரா.

அதிதி பாலன்

20221123180054306.jpg

அருவி படத்தில் ஹீரோயினியாக நடித்த அதிதி பாலன் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஷாலின் போலீஸ் பரிவு

20221123180351953.jpg

தமிழகத்தில் போலீஸ் படும் பாடு அதிகம் அவர்களுக்கு மன ரீதியான உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகம் ஓய்வில்லாமல் லீவு இல்லாமல் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு சங்கம் கிடையாது அவர்கள் ஒரு நாள் கூட ஸ்ட்ரைக் செய்தது கிடையாது கான்ஸ்டபிள்கள் உயர் அதிகாரிகளால் மக்களால் திட்டப்படுகிறார்கள். லத்தி படத்தை போலீஸ் குடும்பத்துக்கு பிரத்யோகமாக திரையிட்டு காட்ட இருக்கிறோம் என்கிறார் நடிகர் விஷால்.

நாயகி நான் தான்

20221123180644386.jpg

கடாவர் படத்தை தயாரித்த அமலா பால் மீண்டும் படங்கள் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார். ஆனால், நாயகி அவர்தான் என்கிறார் இயக்குனர்களே ஓகே தானே

ஷ்ரத்தாஸ்ரீநாத்

20221123180814577.jpg

விக்ரம் வேதா நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அடுத்த படம் கலியுகம் ஆடுகளம் கிஷோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வால்

20221123181026673.jpg

திருமணத்துக்குப் பிறகு அம்மாவான பிறகும் நான் அப்படியே தான் அழகாக இருக்கிறேன் என்பதை சொல்கிறார் போல் புது போட்டோ செஷன் எடுத்து படங்களை உலா விட்டிருக்கிறார் காஜல் அகர்வால் அதாவது மீண்டும் நடிக்க தயாராம் அதுதான் விஷயம்.

திரிஷா

2022112318121934.jpg

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.சரவணன் இயக்கத்தில் உருவான படம் ராங்கி முப்பதாம் தேதி ரிலீஸ். இது கதாநாயகி திரிஷா இந்த படத்தில் அவர் கேரக்டர் பெயர் தையல்நாயகி ரிப்போர்ட்டர் வேடம் இந்தப் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார் திரிஷா.

இயக்குனர் சிவகார்த்திகேயன்

20221123181910785.jpg

விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் 2023 அவரது சொந்த தயாரிப்பில் அவரே இயக்கி அவரே நடிக்க இருக்கிறாராம்.

2 கோடி பேர்கள்

20221123181621922.jpg

அஜித் நடிக்கும் துணிவு படத்தில் முதல் பாடலான சில்லா வெளியாகி ரெண்டு கோடி பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது. இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா வெளியாகி உள்ளது.

அம்மா ஆண்டு

2022 நடிகைகளுக்கு அம்மா ஆண்டு என்று சொல்லலாம் நடிகை காஜல் அகர்வால் ,நயன்தாரா ,நமிதா ,பிரணிதா இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர் குழந்தை பெற்று அம்மா ஆனார்கள் அதை சந்தோஷமாக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தார்கள்.