தொடர்கள்
விளையாட்டு
உலகக்கோப்பை –ஒர் ரவுண்ட் அப்!-ஆர்.ராஜேஷ் கன்னா

20221122202228226.jpg

உலக கால்பந்து திருவிழா கோலாகலமாக கத்தார் நாட்டில் நடந்து முடிந்தது. விளையாட்டிற்கு நாடு, மொழி கிடையாது என்பதால் உலகமே கால்பந்து போட்டியை ரசித்தது.

இந்திய நடிகை தீபிகா படுகோன் உலகக்கோப்பையை அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.

முன்னாள் கால்பந்து சாம்பியன்களான ஜெர்மனி , உருகுவே முதல் சுற்றிலேயே வெளியேறியது.மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான பிரேசில் அணி கால் இறுதி சுற்றில் வெளியேறியது.

ஒட்டுமொத்த கால்பந்து அணிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த மொரோக்கா முதல் முறையாக அரை இறுதி போட்டியில் முன்னேறியது தான் ஹைலைட்.

கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் எல்லா ஆட்டங்களும் த்ரிலிங்காக இருந்ததால் மிகசிறந்த உலகக்கோப்பை போட்டி என்று கால்பந்து விளையாட்டு சம்மேளேன தலைவர் கியான்னி இன்பாண்டினோ பெருமையடைந்தார்.

உலகக்கோப்பை நடந்த 64 ஆட்டங்களையும் 33 லட்சம் பேர் நேரடியாக வந்து பார்த்தனர். 500 கோடி மக்கள் நேரலையாக தொலைகாட்சிகளிலும் , சமுக வலைதளங்களிலும் பார்த்தனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா இறுதி போட்டியில் தீப்பொறி பறக்க விளையாடியது. கிட்டதட்ட ஆட்டம் நிறைவு தரும் வாயில் அர்ஜெண்டினா இரண்டு கோல்கள் போட்டு முன்னனியில் இருந்தது. யாரும் எதிர்பாராத இரண்டு சந்தர்பர்ங்கள் பிரான்ஸ் அணியின் இளம் வீரர் மாப்பே இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தினை விறுவிறுப்பாக்கினார்.

இரண்டு அணிகளும் சம நிலையடைந்தும் அடுத்து எக்ஸ்ட்ரா டைம் கொடுத்தும் சம நிலை தொடர்ந்ததால் பெனால்டி ஷீட்-அவுட் முறை வந்தது. அர்ஜெண்டினா இதனை லாவகமாக பயன்படுத்தி 4 கோல் அடித்தது, பிரான்ஸ் 2 கோல் அடித்தது. அர்ஜெண்டினா 36 ஆண்டுகளுக்கு பின்பு உலக்கோப்பையை கைப்பற்றியது.

அர்ஜெண்டினாவின் மெர்ஸி தன் நாட்டிற்காக இறுதி ஆட்டத்தில் சூப்பர் மேனாக ஜொலித்தாலும் பிரான்ஸ் நாட்டின் இளம் வீரர் மாப்பே தான் உலகம் முழுவதும் ஓரே இரவில் சூப்பர் ஹீரோ ஆனார். அவரது தளராத கடைசி நிமிட தீப்பொறி பறக்கும் ஆட்டம் கால்பந்து ரசிகர்களை சீட் நுனியில் அமர செய்தது.

இது தான் தனக்கு கடைசி உலக கால்பந்து போட்டி என்று அறிவித்த அர்ஜெண்டினாவின் மெர்சி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தான் ஆட்டத்தை தொடர போவதாக அறிவித்தார். மெர்சி தனது அணி வென்ற உலகக்கோப்பையுடன் அன்றிரவு உறங்கிய காட்சி வைரல் ஆனது.

என்னதான் உலகக்கோப்பையை அர்ஜெண்டினா வென்றாலும் இன்றும் கால்பந்து ரசிகர்களின் மனதில் பிரான்ஸ் நாடின் மாப்பே தான் குடியிருந்து வருகிறார்.

இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழவிய பின் மாப்பே மனம் கலங்கி கிரவுண்டில் அமர்ந்து இருந்த போது பிரான்ஸ் பிரதமர் உடனடியாக தனது நாட்டு வீரனை சமாதானப்படுத்த மைதானத்தில் நடந்து வந்து இறுதிவரை சமாதானப்படுத்தி சென்ற காட்சி ஒட்டு மொத்த உலகத்தினரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

விளையாட்டில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பது உலகக்கோப்பை கால்பந்திற்கும் பொருந்தும் என்பது நிஜம்!!

உலகக்கோப்பை கால்பந்து ஒரு போட்டோ ரவுண்ட அப்

20221122201902675.jpg

20221122201928923.jpg

20221122201954155.jpg

20221122202022635.jpg

20221122202335379.jpg

20221122212212266.jpg20221122202536757.jpg