தொடர்கள்
அரசியல்
அதிமேதாவி போட்ட அரசாணை - விகடகவியார்

20221124104158957.jpg

திமுகவைப் பொறுத்தவரை அதற்கு எப்போதும் இரண்டு முகம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு முகம் ஆளும் கட்சியாக இருக்கும் போது இன்னொரு முகம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயின் மீது கரிசனம் காட்டுவது போல் பேசுவார்கள். சுற்றுச்சூழல் காவலர்கள் போல் அவர்கள் பேச்சு இருக்கும். ஆனால் ஆளும் கட்சியானதும் அவர்கள் முகம் மாறும். எட்டு வழி சாலை திட்டத்திற்கு எகிரி குதித்த திமுக பரந்தூர் விமான நிலையம் தொடங்குவதில் அவர்கள் காட்டும் ஆர்வம் அதற்காக அவர்கள் சொல்லும் சப்பை கட்டுகள் அள்ளி விடுகிறார்கள். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகும் தமிழ்நாட்டின் வருமானம் கூடும். இதெல்லாம் பரந்தூர் விமான நிலையம் வந்தால் தான் நமக்கு கிடைக்கும் என்கிறார்கள் அமைச்சர்கள் விவசாயிகளுக்கு மூன்றரை மடங்கு இழப்பீடு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை மாற்று இடம் இப்படி வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார் அமைச்சர் ஏவா வேலு. ஆனால் இந்த வாக்குறுதிகளுக்கு எல்லாம் அசராமல் பரந்தூர் கிராம விவசாயிகள் விமான நிலையம் வேண்டாம் என்று தங்கள் போராட்டத்தை இன்று வரை தொடர்கிறார்கள்.

இப்போது காப்புக்காடுகள் விஷயத்துக்கு வருவோம் இதிலும் ஆளுங்கட்ச்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு இதான் திமுகவின் திராவிட மாடல். சுரங்கம் குவாரி கிரஷ் போன்ற தொழில்களை காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேற்கொள்ளக்கூடாது என 2021நவம்பரில் மூன்றாம் தேதி தமிழ்நாடு சிறு கனிம சலுகைவிதிகள் 1959இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு என்ற தடையை தமிழக அரசு நீக்கி இருக்கிறது. இதற்கு அரசு சொல்லும் காரணம் அரசுக்கு கிடைத்து வந்த நிதி குறைந்ததாக அதிகாரிகள் முன் வைத்த கருத்துக்களின் அடிப்படையில் அரசு இதை ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறது அதாவது சுற்றுச்சூழல் வனங்கள் பாதுகாப்பு இவை எல்லாவற்றையும் விட அரசுக்கு வருமான முக்கியம் என்கிறது அரசு.

இந்த அரசாணை மூலம் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை எவ்வித அகழ்வு மற்றும் சுரங்கத் தொழில் நடைபெறக்கூடாது என்கிற தடை தளத்தப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள 28 யானை வழித்தடங்களில் 17 யானை வழித்தடங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. ஆனால், கர்நாடகத்திலும் கேரளத்திலும் இருப்பது போல் இல்லாமல் தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் தூண்டாடப்பட்ட வழித்தடங்களாகவே உள்ளன.

இந்த புதிய அறிவிப்பால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் சீரழிவதோடு வனவிலங்குகளும் தாவரங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்கு சரணாலயம் தேசிய பூங்காக்கள் புலிகள் காப்பகம் யானைகள் வழித்தடம் போன்றவற்றிற்கு இந்த திருத்தம் பொருந்தாது என்று அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த விளக்கம் எல்லாம் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளுக்கு தெரியாது அவை சுதந்திரமாகத் திரியும் விலங்குகளுக்கென்று எல்லையை வரையறுத்து சொல்ல முடியாது. மேட்டுப்பாளையம் நீலகிரி போன்ற இடங்களில் தேயிலை தோட்டம் கரும்புக்காடு போன்ற இடங்களில் யானைகள் வந்து போவது வழக்கமான ஒன்று நீலகிரியில் வீட்டு குடியிருப்புகளில் புலி சிறுத்தைகள் நடமாடும். அவற்றிற்கு காடு மனிதர்கள் வாழும் இடம் என்ற பேதம் எல்லாம் அவற்றுக்கு தெரியாது. ஆனால், வருமானத்தை மட்டும் கணக்கு பார்க்கும் அரசுக்கு இந்த விலங்குகளின் சுதந்திரம் பற்றிய ஒரு புரிதலோ அல்லது அக்கறையோ இருக்காது என்பதைத்தான் இந்த அரசு ஆணை வெட்டச் வெளிச்சமாக தெரிவிக்கிறது.

தமிழகத்தில் அதிகம் காப்புக் காடுகள் உள்ளன.மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களில் பெரும்பாலும் காப்புக்காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. இப்போது இந்த அரசாணை அந்த யானைகளின் நடமாட்டத்திற்கு தடையாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் அரசு இது பற்றி எந்த அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இந்த அரசாணை குவாரி தொழில் முதலாளிகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை தான் அதில் நன்கு தெரிகிறது.

20221124104334937.jpg

கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் காடுகளை ஒட்டி உள்ள மலைகளை சிதைத்து கற்களும் மண்ணும் ஏற்கனவே சட்டவிரோதமாக பிற மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக இருந்தது இப்போது அந்த சட்ட விரோதம் இந்த அரசாணைப்படி சட்டப்படி என்று ஆகிவிட்டது.

தேசிய பூங்கா வனவிலங்குகள் சரணாலயம் இங்கு மட்டும்தான் வனவிலங்குகள் வசிக்கும் என்று கண்டுபிடித்த, அதை சுட்டிக்காட்டி இந்த அரசு ஆணையை வெளியிட்டிருக்கும் மேதாவி யார் என்று தெரிந்தால் நல்லது.