தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்

20221124103940110.jpg

அண்ணாமலையை பார்க்கப் போகும் போது ஜாக்கிரதையாக பேசு அவர் கட்டியிருக்கும் வாட்சில் கேமரா எல்லாம் இருக்கிறது நீ பேசுவது கூட அப்படியே அதில் பதிவாகிவிடும் என்று எச்சரிக்கை செய்து ஆசிரியர் அனுப்பி வைத்தார். கேமரா என்றதும் மிஸ்டர் ரீல் தலை எல்லாம் நன்றாக வாரிக் கொண்டு ஆடையை ஒழுங்கு படித்துக் கொண்டு பளிச்சென அண்ணாமலை பார்க்க கமலாலயம் புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.

மிஸ்டர் ரீல் உள்ளே நுழைந்ததும் அண்ணாமலையை பார்த்து "இதுதான் அந்த ரபேல் பாஷா வாட்சா " என்று கேட்டார். உடனே அண்ணாமலை" இது மொத்தம் 500 "என்று ஆரம்பிக்க "அந்த டீடைல் எல்லாம் ஏற்கனவே நீங்க சொல்லி நான் யூடியூபில் பார்த்து விட்டேன்"என்ற மிஸ்டர் ரீல் "இந்த வாட்சில் ஆடியோ வீடியோ எல்லாம் இப்ப நான் பேசறது உடன் சேர்த்து படம் எடுக்குமாமே இந்த திமுக காரங்க சொத்து விவர ஆதாரம் எல்லாம் இதுக்குள்ள இருக்காம்" என்று கேட்க அதற்கு அண்ணாமலை "எல்லாம் பீலா இது டைம் கூட சரியா காட்டாது செந்தில் பாலாஜி ஏதோ கேட்டாரு சும்மா அடிச்சு விட்டேன் "என்று அண்ணாமலை சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "ஆச்சரியமா இருக்கு சாராய மந்திரி செந்தில் பாலாஜி என்று தானே நீங்கள் எப்போது சொல்லுவீங்க " என்று கேட்க அதற்கு அண்ணாமலை நான் தப்பா எல்லாம் சொல்லவில்லை அவருக்கு கலால் துறை ஒதுக்கி இருக்கு அந்தத் துறை வேலை சாராயம் விற்பது அதைத்தான் நான் சொன்னேன் "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "அதை விடுங்க திமுக அமைச்சர்களுக்கு ரெண்டு லட்சம் கோடி சொத்து இருக்கு இந்தோனேசியாவில் துறைமுகம் பிலிப்பைன்ஸில் தீவு நிலக்கரி சுரங்கம் என்றெல்லாம் சொல்கிறீர்களே அதெல்லாம் உண்மையா இல்ல அதுவும் ரீலா "என்று கேட்க அதற்கு அண்ணாமலை "எல்லாம் நெசம் சார் ஆதாரம் இருக்கு "என்று சொல்ல உடனே மிஸ்டர் ரீல்" நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் ஆளுநர் அவர் சும்மா அடிச்சு விடுறாரு எதுக்கும் ஆதாரம் கிடையாது எங்கிட்ட கூட ஒரு மகஜர் தந்தாரு ஒரு ரெண்டு மூணு அட்ரஸ் குறிப்பிட்டு இதெல்லாம் அவங்க சொத்து என்று சொன்னார் பார்த்தால் அப்படி ஒரு விலாசமே இல்லை "என்கிறாரே என்றும் மிஸ்டர் ரீல் சொல்ல ஆச்சரியப்பட்டு அண்ணாமலை "ஆளுநர் அப்படியா சொன்னார் "என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அப்போது மிஸ்டர் ரீல் ஆனா நான் இது ஆடியோ வீடியோ எல்லாம் வெச்சிக்கல ஆனால் ஆளுநர் சொன்னது உண்மை அதேசமயம் நீங்க பல விஷயம் சொல்றீங்க அப்புறம் அத்தோடு விட்டுடறிங்க எனக்கு என்னமோ திமுக உங்கள வந்து உங்களை காமெடி பீசா பார்க்கிற மாதிரி தெரியுது "என்று மிஸ்டர் ரீல் சொல்ல அப்போதும் அண்ணாமலை முகம் மாறி யோசிக்க ஆரம்பிக்க உடனே பேச்சை மாத்த மிஸ்டர் ரீல் "திடீர்னு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தனித்துப் போட்டி என்று அடித்து விட்டீங்க என்னால எடப்பாடி வாழ்க கோஷமெல்லாம் போட முடியாதுன்னு வேற சொல்லி இருக்கீங்க"என்று சொல்ல உடனே அண்ணாமலை" உங்களுக்கு இது எப்படி தெரியும் அந்த கூட்டத்தில் யாருமே செல்போன் எடுத்து வரலையே "என்று சொல்ல நான் இதை வந்து யூடியூப்ல பார்த்தேன் செல்போன் எடுத்துட்டு வந்திருக்க மாட்டாங்க ஆனா வாட்ச் கட்டிருப்பாங்க இல்ல அந்த வாட்ச் உண்மையாவே வீடியோ ஆடியோ இருக்கிற வாட்சா இருக்கலாமே "என்று சொல்லி அண்ணாமலையை பதற வைத்தார் மிஸ்டர் ரீல்.

அதாவது நம்ம கட்சிக்காரங்க எல்லாருமே எம்பி ஆகி ஸ்ட்ரைட்டா அமைச்சரா ஆகணும்னு விரும்புறாங்க அவங்கள குஷிப்படுத்த நான் சொன்னது இது" என்று அண்ணாமலை சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் சரி கூட்டணி உண்டா இல்லையா அத சொல்லுங்க என்று கேட்க அதற்கு அண்ணாமலை "இதெல்லாம் அமித்ஷா மோடி முடிவு செய்ய வேண்டும் எனக்கு எப்படி தெரியும் " என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் பாராளுமன்றம் போவார்கள் அதில் ஐந்து பேர் மந்திரிகள் என்று சொன்னீர்களே அதுவும் சும்மா அடிச்சுவிட்டது தானே "என்று கேட்க உடனே அண்ணாமலை "நான் பேசுனது எல்லாத்தையும் மறக்காம ஞாபகத்துல வச்சிருக்கீங்க எனக்கே இது இப்படி எல்லாம் பேசினான்னு மறந்து போச்சு "என்று சமாளிக்க பிறகு சுதாரித்துக் கொண்டு இன்றைக்கு யூடியூப் என்பது ஒரு பெரிய தொழில் அந்தத் தொழில் என்னை நம்பி ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் ஆசையை நிறைவேற்ற இப்படி பரபரப்பா சொல்ல வேண்டி இருக்கு நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க சில ஐடியா பரபரப்பா இருக்கும் என்று அவங்க கொடுத்தது தான் நீங்க சொல்றீங்களே சும்மா அடிச்சு விடுறீங்களே என்று அதெல்லாம் கூட அவங்க யோசனை தான் என்று சொல்ல அந்த 25 எம்பி அஞ்சு மந்திரி ஐடியா கூட உங்க சொந்த சரக்கு இல்லையா YouTube காரங்க சொன்னது தானே "என்று மிஸ்டர் ரீல் கேட்க அப்போது அண்ணாமலை 50000 யூடியூப் காரங்க என்ன நம்புறாங்க 28 லட்சம் பேர் என்னோட ரசிகர்கள் அவங்க எல்லாம் அண்ணாமலை சொன்னா ஓட்டு போடுவாங்க "என்று சொல்ல உடனே மிஸ்டர் ரீல் ஓ இவங்கள நம்பி தான் நீங்க தனித்துப் போட்டி என்று சொல்லிட்டீங்களா என்று கேட்க உடனே அண்ணாமலை "மிகப்பெரிய அறிவாளின்னு எனக்கு தெரிஞ்சு போச்சு "என்று சொல்ல மிஸ்டர் ரீல் கண்டுகொள்ளாமல் 234 தொகுதி ஒரு வருஷம் பாதயாத்திரை அப்படின்னு சொல்லி இருக்கீங்க அது என்ன திட்டம் என்று மிஸ்டர் ரீல் கேட்க பாதயாத்திரை திட்டம் மூன்று விஷயம் இருக்கு உண்மையில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கு எனக்கு தெரியும் YouTube இப்போது கிராமம் சின்ன கிராமம் சின்ன ஊர் பெரிய ஊர் இப்படி எல்லா இடங்களிலும் நிறைய இருக்கு அவங்க எல்லாம் எனக்கு பேட்டி தாங்கோ என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கிறாங்க அவங்க கோரிக்கையை பாஜக தலைவர் என்ற முறையில் நான் நிறைவேற்றி தானே ஆக வேண்டும் அந்தக் கடமை தான் இது என்று சொல்ல "உடனே மிஸ்டர் ரீல் தமிழக அரசியல் வேணாம், நம்ம ஏன் சொல்லணும் நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்று யோசித்தபடி புறப்பட்டார்.