தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20221123184539362.jpeg

புதுவை முதல்வரின் மன உளைச்சலை தீர்ப்பேன் தமிழிசை சௌந்தர்ராஜன்

அந்த மன உளைச்சலே நீங்கதானே சிஸ்டர் அதையே நீங்க இன்னும் தெரிஞ்சுக்கலையா

15 கோயில்களில் 75 ஆயிரம் பேருக்கு பிரசாதம் அமைச்சர் சேகர்பாபு

இப்ப பிரசாதம் எல்லாம் கூட ஒரு சாதனை ஆயிடுச்சா

காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை ரீதியாக துணை நிற்போம் தொல். திருமாவளவன்

அப்ப திமுக கொள்கைக்கு முட்டு கொடுக்க போவது யாரு ரவிக்குமாரா?

குஜராத் தேர்தலில் நாங்கள் காளையிடம் பால் கறந்திருக்கிறோம் என்றார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

சரி சரி தூங்கினது போதும் முழிச்சுக்கோங்க ஆளுநர் ஏதோ நோட்டீஸ் அனுப்பி இருக்கார் அது என்ன என்று பாருங்க

கேரள அரசின் நில அபகரிப்பை கண்டுகொள்ளாதது ஏன் தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

அண்ணே கர்நாடகா மகாராஷ்டிரா நம்ம கட்சி தான் ஆட்சி அங்கேயும் இதே பிரச்சனை தான் ஓடுது

மக்கள் நீதி மையக் கொள்கையை வெளியே சொல்ல முடியாது சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள் தலைவர் கமல்ஹாசன்

இதில் உலகநாயகன் நமக்கு இரண்டு விஷயம் சொல்கிறார் ஒன்னு கட்சிக்கு கொள்கை இருக்கு இன்னொன்னு காப்பி அவர் சினிமா படம் நிறைய எடுத்து இருக்கிறார் அந்த அனுபவம் பேசுது

அண்ணாமலை வாட்சுக்கு பில் இருக்கா செந்தில் பாலாஜி கேள்வி

அவர் டாஸ்மாக் பில் தரீங்களா என்று கேட்பாரு இப்ப இது நமக்கு தேவையா

நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் திராவிட மாடல் கனிமொழி

அக்கா அவங்க குடும்ப பாதுகாப்ப பத்தி பேசுறாங்க

இந்திக்கு ஆதரவாக பேசுபவரின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கிறார்கள் ராகுல் காந்தி

இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களே நடத்துகிறார்கள் தலைவரே

தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அதனால் தான் புதுவையில் மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொல்கிறார் தலைவரே

பெரியாரின் ஆசைகளை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றுகிறது ஏவா வேலு

சீக்கிரம் பேசி முடிங்க அமைச்சரே பூமி பூஜைக்கு போகணும் அப்புறம் ராகு காலம் வந்துவிடும்

நடை பயணத்தை ஒத்தி வையுங்கள் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்

ஆமா கூட்டத்தை பார்த்தால் பயமா இருக்கு அதுதானே தாமரை

ரூபாய் 500க்கு கேஸ் சிலிண்டர் ராஜஸ்தான் முதல்வர் அதிரடி

இதெல்லாம் ரொம்ப தப்பு கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கு நம்ம கிட்ட கேக்க மாட்டாங்களா என்கிறார் திமுக அமைச்சர் ஒருவர்

தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்

அவர்தான் கட்சியைச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டாரே இப்ப நீங்க தான் தொடங்கணும் மாத்தி பேசுறீங்க

பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் பாடத்திட்டம் எப்படி உள்ளது பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

டமில் வால்க இப்படி இருக்குது மை லார்ட்

முதலமைச்சர் மருமகன் கட்டியிருக்கும் கை கடிகாரம் விலை 14 கோடி அண்ணாமலை

பிளாஷ் நியூஸ் தலைவர் சொல்கிறார் கேட்டுக்கோங்க