தொடர்கள்
கவிதை
கனவு  - சத்யபாமா ஒப்பிலி

20221124092709224.jpg

கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போன கனவு அது.

ஒரு அர்த்தமில்லா த் தருணத்தில் தலை நிமிர்த்தி எட்டிப் பார்க்கும்.

எனக்குள் இருக்கும் என்னுடைய பல அவதாரங்களில் ஒன்று,

அந்த தலையைத் தட்டி உள்ளே அழுத்தும்.

மற்றொன்று வெளியே இழுக்கும் அதை,

"உன் கனவு அது உன் கனவு" என்று கதறிக் கொண்டே!

பின் அவதாரங்களின் மாநாடு நடக்கும்.

அதற்கு நடுவே கனவு அங்கங்கே அலக்கழியும்.

தட்டு த் தடுமாறி தேடி மறுபடியும்

என்னிடம் வந்தடையும் அந்தக் கனவு.

இரு கையினால் தாங்கி பிடித்து கண்களின் வழியே

மறுபடியும் உள்ளே செலுத்தி ஆழப் புதைக்கப்படும்.

ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில்

வெளியே தலை நீட்டும் வரை அதுவும் புதைந்தே கிடக்கும் !