தொடர்கள்
பொது
அழுதால் மரண தண்டனை - மாலா ஶ்ரீ

20221124092422205.jpeg

வடகொரியாவில் ஏற்கெனவே பல்வேறு சர்வாதிகார சட்டங்கள் அமலில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் தடை விதித்ததோடு, தடையை மீறி சத்தமாக அழுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையுமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினம் கடந்த 17-ம் தேதி வடகொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக்கூடாது, கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, இந்த 11 நாட்களில் அங்கு குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால்கூட, அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அழக்கூடாது. அனைவரும் சத்தமின்றி மெதுவாகவே அழவேண்டும். இத்தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அதிபர் கிம் ஜாங் உன் அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்ல வேளையாக தமிழ் டிவி சீரியல்கள் அங்கே வராது. வந்தாலும் அவர்களுக்குப் புரியாது. பொழச்சுப் போகட்டும்.