தொடர்கள்
பொது
நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் - ஜெர்மன் டையரி கார்த்திக் ராம்.

20221124075235660.jpeg

என்னப்பா விறு விறுன்னு கொஞ்சம் எழுதினீங்க, அப்புறம் ஆள காணோம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது!
கடைசியா செப்டம்பர்ல எழுதினேன், அப்புறம் அக்டோபர்ல 3 வாரம் இந்தியா மறுபடி நவம்பரில் ஹாங் காங் 2 வாரம்னு கொஞ்சம் பிஸி. இன்னக்கி அதுதான் நம்ம டாபிக்.

6 அக்டோபர் - 26 அக்டோபர் - பெங்களூரு, வடமலைப்பட்டி மற்றும் ஆதி திருவரங்கம்.

மூணு வருஷம் கழிச்சி பெங்களூர் காத்து மூஞ்சில பட்ட உடனே ஒரு பரவசம். ஜெர்மனியில இருந்து பெங்களூரு வரை பயணம் மிக சுமூகம். ஏர்போர்ட்ல இருந்து என் நண்பர் வீட்டுக்குள்ள போறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சி. விடியகால 3 மணிக்கு கூட என்னமா டிராபிக். எதுக்கு அந்த ஹார்ன் போட்டு இப்படி அழுத்துவாங்கனு தெரியல. ஊரு ரொம்ப மாறிடுச்சு. பிளஸ் பாயிண்ட் மெட்ரோ - கிழக்கு பெங்களூருல இருந்து மேற்கு போறதுக்கு ட்ரைன்ல 45 நிமிஷம் தான். டாக்ஸி ஆட்டோல மினிமம் 2 மணி நேரம்.

20221124075408893.jpg

வடமலைப்பட்டி போய் அம்மா அப்பா பாத்தது ரொம்ப சந்தோசம். பெருசா ஒன்னும் பண்ணல, சாப்பிட்டு தூங்கிட்டு ஒரு கல்லு குந்தனியாட்டம் சும்மாவே உக்காந்திருந்தேன். பல வருஷங்கள் கழிச்சு தீவாளி வீட்ல அம்மா அப்பா கூட கொண்டாடியது ரொம்ப தித்திப்பு. அப்புறம் தென்னை மரமேறி வாலுத்தனம் பண்ணி அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு குரங்கு குட்டியாட்டம் ஓரமா உக்காந்திருந்ததும் ஒரு சுவாரசியம்.

2022112407561165.jpeg

20221124075502538.jpeg

ஆதிதிருவரங்கம் - அப்பாகிட்ட மாட்டினா ஒரு வரலாறு சொல்லி ஏதோ ஒரு கோவிலுக்கு இழுத்துட்டு போயிடுவார். இந்த முறை ஆதி திருவரங்கம் அப்பறம் உலகளந்த பெருமாள். ரொம்ப நல்ல தரிசனம், அப்பா சொல்லலைனா இந்த கோவிலுக்கெல்லாம் போவநான்னு தெரியாது.

(கோவிலைப் பத்தி விலாவாரியா எழுதணும்னா நம்ம ஆரூர் சந்திரசேகர் தான் சரி. நமக்கு வராது)

விடாது பெய்ஞ்ச மழையில தமிழ்நாட்டோட அழகே அழகுதான்.

அடிச்ச பொகைலயும் ஹார்ன் சத்தத்துலயும் ஓடி பொய் வண்டி ஏறி ஜெர்மனி திரும்ப வந்தாச்சு. என்ன தான் 40 வயசு அரை கிழவனா இருந்தாலும் அம்மாக்கு கொழந்தைதானே. கண்ல கலங்கின தண்ணீரோட வழியனுப்பி வச்சா. மனசுல ஒரு வேளை, சின்ன பிள்ளையாவே இருந்து முந்தானை பிடிச்சிட்டு சுத்தி சுத்தி வந்திருக்க கூடாதோன்னு நெனைச்சிருப்பாளோ ?

20221124075739795.jpeg

வந்த பிறகு குடும்பத்தோட போர்ரா (Vorra) அப்படிங்கிற மிக அழகான ஊருக்கு போயிருந்தோம். ஜெர்மனி இலையுதிர் கால அழகே ஒரு மயக்கம் தான். ஒரு வண்ணமிக காஞ்சி பட்டு சேலை கட்டின மணப்பெண் போல சுத்தும் முத்தும் அத்தனை அழகு, அதோட சேர்ந்த ஒரு அமைதி. மணப்பெண் சேலை நடக்கும் போது எப்படி சேலைல இருந்து சத்தம் வருமோ அந்த மாதிரி இலை விழுகிற சத்தம். ஒரு காபி சாப்பிடலாமே,அப்டின்னு நினைச்ச போது, அங்க பக்கத்துல ஒரு கடைல இருந்து மூக்கை துளக்கிற மாதிரி காபி வாசம். அதைவிட அந்த கடை இருந்த இடம்- ஒரு சின்ன ஆறு / ஓடைன்னு கூட சொல்லலாம். அது மேல அந்தரத்துல தொங்கற மாறி மர மேடை, மேடைக்கு மேல காபி குடிக்க வசதியா சேர் டேபிள் போட்டு வச்சிருக்காங்க. பெஸ்டு காபி!

நவம்பர் - ஹாங் காங்

ஆறு மாசம் கழிச்சு இந்த முறை போய் இறங்கிய போது ஒரு புது வித உணர்வு. இது வரைக்கும் நேரா வீட்டுக்கு போவேன், இப்ப ஹோட்டலுக்கு - அதுதான் காரணம். நண்பர்களை சந்திச்சு அவங்களோட ஊரு சுத்தி வெட்டி டைம் பாஸ் பண்ற சொகம் இருக்கே, அனுபவிச்சாதான் புரியும். எப்படி நேரம் ஓடுச்சுனு புரியல, இறங்கின மாறி இருந்திச்சு, திரும்ப போக நேரம் வந்திருச்சு. சந்தோசமான விஷயம், இந்த கொரோனா குவாரன்டின் எல்லாம் எடுத்தாச்சு.

20221124075641166.jpeg

திரும்பி வந்து இறங்கின, குளிர் பட்டய கெளப்புது ஜெர்மனில- -10 டிகிரிக்கு கீழ போயிடுச்சு.

அப்புறம் பனியும் கொட்ட ஆரம்பிச்சுருச்சி. அத பத்தி ஒரு சின்ன காணொலியோட அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன்.