தொடர்கள்
பொது
சாதனைப்பெண்கள் - மன நலம் காக்கும் ரேணு மீரா - வேங்கடகிருஷ்ணன்

20221117082730447.jpg

இதுவரையில் நாம் சந்தித்தவர்கள் எல்லாருமே எதோ ஒரு வகையில் நமது உடல் நலம் காப்பவர்களாக இருந்தார்கள். இன்று நாம் சந்திக்கப்போகும் "ரேணு மீரா " மன நலம் காக்கும் பணியில் நீண்ட காலமாய் இருப்பவர். மன நலம் குன்றிய குழந்தைகளையும் , அவர்களை கையாளும் திறனை அவர்களின் பெற்றோருக்கும் சொல்லித் தருபவர். தனிமனித மன நள பிரச்சனைகளையும், தம்பதியருக்கான உளவியல் பயிற்சியையும் தருபவர்.
மைலாப்பூரில் இவரது சிகிச்சை மையத்தில் இவரை சந்தித்தோம். இவரின் ஆச்சரியமான, சுவாரசியமான இன்னொரு முகம் இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தீவிர விசிறி, ரசிகை, பக்தை.
அவரது அனைத்து எழுத்துக்களையும் கரைத்துக் குடித்தவர். அவரது கதைகளை உணர்வுபூர்வமாக நடித்துக்காட்டி சொல்லக்கூடிய திறன் பெற்றவர். பல மேடைகளிலும், குழுக்களிலும் தொடர்ந்து சொல்லி அந்த எழுத்துலக சிம்மத்தின் புகழ் பரப்புபவர். ரசிகர்கள் ஏகோபித்து அளித்த பட்டம் " ஜெயகாந்தினி". அந்த அளவு ஈடுபாடு அவர்பால் கொண்டவர்.
அவரை சந்தித்து பேசி விகடகவி வாசகர்களுக்காக ஜெயகாந்தனின் கதை ஒன்றை சொல்லச்சொன்னோம். தனது வேலைகளுக்கிடையில் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் சொல்லிய அந்த கதையும் , உரையாடலும் இங்கே காணொளியாக உங்களுக்கு.......