தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 13 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

தயரத மன்னன் தம் நாட்டு மக்களை
எவ்வாறு பாதுகாத்தான் என்பதை
பாமர மக்களுக்கு எளிதில் புரியும் படி
எளிமையாக கவிநயமாக
பாலகாண்டத்தின் நாட்டுப்படலத்தின்
பாடலில் செப்புகின்றார்

எய் என எழு பகை எங்கும் இன்மையால்
மொய் பொறாத் தினவு உறு முழவுத் தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்

தயரதனுக்கு எவ்விடத்திலும்
பகைமை இன்மையால் போர்த்
தொழில்இன்மையால் மத்தளம்
போன்ற திரண்ட தோள்களை
உடைய அவன் உலகில் வாழும்

அனைத்து உயிர்களையும்
குறிப்பாக கோசல நாட்டு
மக்களை ஒரு ஏழை தனக்குரிய
ஒரே வயலை எப்படி கண்ணும்
கருத்தாய் பாதுகாப்பானோ
அது போல பொது மக்களை
பாதுகாத்து இனிமையாக
ஆட்சி செய்தான் என்பதே
இப் பாடலின் பொருள்

ஒரு நாட்டை ஆளும் மன்னன்
மக்களை எவ்வாறு பாதுகாக்க
வேண்டும் என்பதற்க்கு எளிய
உதாரணம் மூலமாகவும் தயரதன்
தம் மக்களை எப்படி பாதுகாத்தான்
என்பதை நம் மனக்கண் முன்
காட்சிபடுத்திய கம்பரைப் போற்றுவோம்
பாராட்டுவோம்

மீண்டும் சந்திப்போம்...