தொடர்கள்
ஆன்மீகம்
நான் மறைந்த தினம் - இறுதிப் பகுதி பால்கி

20221110131136851.jpeg

தீபக் முதல் முறையாக வரும் கன்னி அய்யப்பன். தன்னோடஆல்குச்சியை சரங்குத்தியில் குத்தட்டும்என்று எண்ணி அந்த சரங்குத்தி என்னுமிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இன்றைய மாரக்கூட்டம்என்னுமிடத்தின் சன்னிதி நோக்கிய திசையில் வலது புறமாய் மேலெழுந்த பாதை அது.

ழி நெடுக தன்னிஷ்ட்டப்படி வளர்ந்துவிட்டிருந்த ராட்ஷச புற்கள், இன்னும் இயக்கப்படாத ட்யூப்லைட்டுகள். கொண்டு போன டார்ச் லைட் இருட்டுக்கு பயந்து கீழே தரை வரை செல்ல முடியாமல்நலிந்தது.

னக்குத் தனியாக டார்ச் வேண்டுமென்றான் தீபக். கொடுத்தேன். வானை நோக்கி டார்ச் அடித்த வண்ணம்நடந்தான். பச்சை இலைகளும் கருமை பூண்டன. கவ்விய இருளில் கருமை பளிச்சென கண்களைப்பறித்தன திடீரென சிறு சப்தமும் பயங்கரமாக பளீரெனக் கேட்டது. ஒலிகள் விதம் விதமாய் சிறுத்தும்பெருத்தும் நேர அளவில் சிறியதும் பெரியதுமாக …..ஆகஆக….

நா தழு தழுத்தன. நாளங்கள் சுருங்கிக்கொள்ள ஆரம்பித்தன. காலம் யுகமாய் நீண்டது. நடை பின்னின.

தீபக் தன்னோடு வந்த அவனது வயதொத்த சிறுவ சிறுமியர்களைப் பற்றிக் கேட்டான், “ எங்கேஅவர்கள்?” கூடவே வானத்திலிருந்து பெய்த மழைத்துளிகள் அங்கு வளர்ந்து விட்டிருந்த ராட்ஷச புற்கள்மரக்கிளைகளில் பட்டுக் கீழே விழுந்திருந்த இலைச் சறுகுகளில் மீது விழ, எழுந்த சல சலப்பு க்ரிஸ்டல்கிளியராக சர்ர்ர்ர்ர்ரிட..சர சரவென அளந்த காற்றினால் அசைந்த கொடிகளால் பின்னப்பட்ட கிளைகளப்பார்க்க கேட்க ஜன்னியே வந்து விட்டது எனக்கு.

த்தியமாக, தீபக்கைத் தவிர மற்ற எங்கள் மூவருக்கும் கிலி தான். மண்டலத்தின் முதல் நாள்செப்பனிடப்படாத பாதையில் மேடெது பள்ளமெது என்றே தெரியவில்லை. எதிரிலிருப்பதும் சுத்தமாகத்தெளிவுறத்தெரியவுமில்லை. தீபக்கின் கேள்விகளுக்கு பதில் அளிக்க எங்கள் மூவரில் யாருக்குமேத்ராணியும் இல்லை. கடந்து விட்ட தூரமும் நேரமும் தெரியவில்லை.

யிரை….இல்லை இல்லைகழுத்தில் தொங்கிய துளஸி மணி மாலையைக் கெட்டியாகப் பிடித்தவாரேபலம் கொண்ட மட்டும் உச்சஸ்தாயியில் மனதிற்குள் சரண கோஷங்கள் எழுப்பியவாறு நடந்தேன். மற்றஇருவரும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

ரு பயமும் அறியாத தீபக், கேள்விகளை நிறுத்தத் தெரியாது தொடர்ந்த வண்ணமிருந்தான்.

…..ஹ்..அய்யப்பா! ஈதென்ன சோதனை? இன்னும் எத்தனை தூரம்? எத்தனை நேரம்? தலை சுற்றிற்று. இது கனவாயிருக்கக்கூடாதா என்று கூடக் கண்னை மூடித் திறந்து பார்த்தேன். முன்னை விடகருவிழிக்குள் இருள் மங்கித்தான் தெரிந்தது. அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் ஏதொ வாழ்க்கையின்எல்லைக்கே போவது மாதிரி இருந்தது.

நேரம் கடந்தது. தூரம் கரைந்தது. இது எப்படியென்று தெரியாதபோது, சரம்குத்தியால் இடம் சற்றுதூரத்தில் மங்கலான ட்யூப் லைட் வெளிச்சத்தில் தெரிய, எங்கிருந்து வந்ததோ தெரியல அந்த சரணமுழக்கம். ஸ்வாமியே ஸரணம் ஐய்யப்பா என்று அடி வயிற்றிலிருந்து நாளங்கள் அவையவங்கள் எல்லாம்போட்டி போட்டுக் கொண்டு சந்தோஷமாய் குதித்து முழக்கமிட்டன அந்த முழக்கங்கள் வானத்தின் மீதுபட்டுத் தெரித்து எங்கும் எதிரொலித்தன. அங்கு படுத்திருந்த வனப்பகுதி அலுவலர்கள் தங்கள் கைய்யில்வாட்ச்சைப் பார்த்தவாரே மலையாளத்தில்,” மணி 9.30 ஆகிறது. நாங்கள் இந்த பாதையைப் பயன்படுத்தஇன்னும் திறந்தே விட்டிடவில்லையே. அதுவும் ஒரு குழந்தையை வேறு கூட்டிட்டு வந்திருக்கிறீர்களேஎன்று கடுமையாக பறைய ஆரம்பித்து விட்டனர்.

20221110131246734.jpg

தீபக்கின் காலைப் பிடித்தேன். “ஏன் தெய்வமே! மணி கண்டா. என்னை மன்னித்து விடு. நீ தான் எங்களஅழைத்து வந்தாய்என்று கண்ணீர் விட்டு அவனை உச்சி முகர்ந்தேன். ஆனந்தத்தில் கதறினேன். தூக்கிகொண்டு ஆராதித்தேன். கூட வந்த இருவரும் தீபக்கை தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

ன்னிதி அருகே பதினெட்டாம் படி அருகே எங்கள் நால்வரைக்க் காணாது குழம்பியிருந்த எங்கள்குரூப்பைச் சேர்ந்த மற்ற ஐய்யப்பமார்கள் எங்களைக் கண்டதும் சந்தோஷமடைந்தனர். தீபக்கைக்கொண்டாடினர்.

டித்தேங்காயை உடைத்து விட்டு பதினெட்டுப் படிகளேறி கொடிமரம் அருகே வந்ததும் தத்வமஸி என்றஅத்வைத வாக்கியம் சன்னிதி முற்றத்தின் கூரைத்தலைப்பில் பளிச்சென தெரிந்தது. அழைத்தது. அணைத்தது. நீ எதைத் தேடி வந்தாயோ? அது நீயே தான். உன்னுள் இறைவன் இருக்கிறான் என்றுவிளக்கியது விளங்கியது. என் அய்யன் மீது கர்வம் கொண்டேன்.

20221110131642938.jpeg

ன்றும் அவன் தான் எல்லாம் யாவர்க்கும். துளியும் ஐய்யமில்லை இதில்.

(முற்றும்)