தொடர்கள்
அரசியல்
ஒரு திருமணம். ! ஒரு டிவீட் ! புது ரோடு பரிசு ! மாலா ஶ்ரீ

20221110081313740.jpg

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் நுகுஷ் பாத்திமா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அது செய்தியல்ல.

திருமணம் செய்வதற்கு, ஒரு மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் நுகுஷ் பாத்திமா வீட்டில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. எனினும், அவர் வசிக்கும் பகுதியில் தார்சாலைகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியிருந்தது. இதனால் 'தனது திருமணத்துக்கு யாரும் வரமாட்டார்களோ?' என நுகுஷ் பாத்திமா கவலையுடன் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே மோசமாக சேதமடைந்த சாலையை செல்போனில் படம்பிடித்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் டுவிட்டர் பக்கத்தை 'டேக்' செய்து, தான் எடுத்த சாலையின் புகைப்படங்களை இணைத்து நுகுஷ் பாத்திமா டுவீட் செய்திருந்தார். தனது செய்தியில், "உ.பி முதல்வர் அவர்களே, கடந்த 15 ஆண்டுகளாக எனது பகுதியில் சாலைப் பணிகள் எதுவும் இல்லை. தற்போது சாலையும் மோசமான நிலையில் உள்ளது.

எனக்கு வரும் 7-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது, இதில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். தயவுசெய்து இந்த சாலை வழியை அணுகவும். உங்களுக்கும் எனது விருந்தினர்களுக்கும் வருவதில் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் எனது பகுதி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது!" என நுகுஷ் பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

20221110081638847.jpg

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், உ.பி. முதல்வரின் அறிவுறுத்தல் பேரில், அப்பகுதியை சுத்தம் செய்து, ஒரே நாளில் தரமான தார்சாலையை நகராட்சி நிர்வாகம் அமைத்து, நுகுஷ் பாத்திமாவுக்கு கடந்த 7-ம் தேதி உ.பி முதல்வரின் சார்பில் திருமணப் பரிசாக வழங்கியுள்ளது!

20221110081905965.jpg

தார்சாலை போட்டாச்சுன்னு செய்தி தான் கிடைக்குதே தவிர தார்சாலை போட்ட போட்டோ நெட்ல தேடினா கிடைக்கலை. உங்களுக்கு யாருக்காவது கிடைச்சா இங்க காமெண்ட்ல போடுங்கப்பா...... புண்ணியமா போவும். நுகுஷ் பாத்திமா வீட்டுக்கு போய் ஒரு பிரியாணி சாப்பிட்டு வரலாம்.