தொடர்கள்
அரசியல்
மோடியுடன் சந்திப்பு - மிஸ்டர்.ரீல்

2022111010235610.jpeg

பிரதமர் மோடியை மிஸ்டர் ரீல் பார்க்க போன போது யாரோ இரண்டு வட இந்தியர்கள் உல்லன் ஸ்வெட்டர் போட்டு கொண்டு உக்காந்து இருந்தார்கள் அவர்களைப் பார்த்தப்படியே மிஸ்டர் ரீல் உட்கார உடனே பிரதமர் மோடி "இவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணும் ஆவலா இருக்கீங்க அதானே இவங்க ரெண்டு பேரும் இமாச்சலப்பிரதேஷ் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இவங்க கூட இன்னும் ஒன்பது பேர் தாமரைக் கட்சிக்கு வர தயாரா இருக்காங்க எவ்வளவு தருவீங்க எத்தனை இலக்கா என்று பேரம் பேச வந்திருக்காங்க "என்று பிரதமர் மோடி சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "இது உங்க இலக்கா இல்லையே இவங்க அமித்ஷாவை தானே பார்க்கணும் "என்று சொல்ல உடனே மோடி "பாருங்க தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்க இவருக்கு கூட விஷயம் நல்லா தெரியுது உங்களுக்கு தெரியல "என்று சொல்லி சிரிக்க அதற்கு அந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் "நாங்க அமித்ஷாவை போய் பார்த்துட்டோம் இப்ப வேணாம் ஆறு மாசம் ஆகட்டும் என்று சொல்லி அனுப்பி விட்டார் "என்று சொல்ல உடனே பிரதமர் மோடி "அமித்ஷா சொல்லிவிட்ட பிறகு நான் ஒன்றும் பண்ண முடியாது நான் ஒரு சாதாரண பிரதமர் அவர்தான் கட்சி அவர்தான் மேலிடம் அவர்தான் சூப்பர் பவர் நீங்க கிளம்புங்க "என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

" பிரதமர் மோடி எப்படி குஜராத் சரித்திரம் சாதனை இல்ல "என்று பிரதமர் மோடி பெருமையாக கேட்க அதற்கு மிஸ்டர் ரீல் என்ன சரித்திரம் என்ன சாதனை நீங்க ஒரு 45 முறை பிரச்சாரம் அமித்ஷா 145 முறை பிரச்சாரம் வாரி வழங்கிய இலவச அறிவிப்புகள் ஆனா நீங்களே ஆறு மாசம் முன்னே இலவச எல்லாம் ரொம்ப தப்பு அப்படின்னு பேசினீங்க "என்று மிஸ்டர் ரீல் சொல்ல "குஜராத்துக்கு நான் பிரதமராக போகல பாஜக தொண்டனா போனேன் கட்சி அப்படி கட்டளையிட்டு இருக்கு நான் என்ன செய்ய "எந்த பிரதமர் சொல்ல எந்த பிரதமர் சொன்னார்

அப்போது மிஸ்டர் ரீல் "நீங்க குஜராத் வரலாறு சாதனை ஓகே ஆனா இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சிய காங்கிரஸ் கட்சி கிட்ட தந்துட்டீங்க டெல்லி மாநகராட்சிய தொடப்பம் கட்சி கிட்ட தந்துட்டீங்க டெல்லிக்கு ராஜா நீங்க தான் ஆனா மேயர் நீங்க இல்ல முதலமைச்சர் உங்க கட்சி இல்ல அதன் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கோங்க "என்று சொன்னார்.

பிரதமர் மோடி "உங்களுக்கு அமித்ஷா அரசியல் புரியாது எனக்கே சில சமயம் புரிய மாட்டேங்குது அவர் கேட்டா என்ன சொல்றார் இது திட்டமிட்ட திட்டம் என்று சொல்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிந்ததா" என்று மிஸ்டர் ரீலிடம் கேட்க அவர் "உண்மையில் புரியல "என்று சொல்ல சிரித்தபடி "திட்டமிட்ட திட்டம் என்றால் டெல்லி மாநகராட்சி ஆம் ஆத்மிக்கு கட்சி கிட்ட போச்சு ஆனா காங்கிரஸ் கட்சி அங்க காணாம போச்சு. குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி காலி பண்ணிச்சு அதுக்கு நன்றிக்கடன் தான் டெல்லி மாநகராட்சி நீங்க சொன்ன மேயர் முதல்வர் எல்லாம் நெசந்தான் திகார் ஜெயிலில் இருக்கிற மந்திரி யாரு ஆம் ஆத்மி கட்சி இதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஜெயிச்சது இதனால ராகுல் காந்தி நான் தான் பிரதமர் வேட்பாளர் நான் போய் இமாச்சலப்பிரதேசத்தில் பிரச்சாரம் பண்ண போகவில்லை. அதனால்தான் காங்கிரஸ் ஜெயிச்சது என்று சொல்வார் இதனால் பிரதமர் வேட்பாளராக இருக்க ஆசைப்படும் மம்தா பானர்ஜி நிதீஷ் குமார் ஆகியோர் குழம்பி போய்டுவாங்க "என்று சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "ஓ இதுதான் அந்தத் திட்டமிட்ட திட்டமா" என்று கேட்க உடனே பிரதமர் இப்போ உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருச்சா" என்று கேட்க அதற்கு மிஸ்டர் ரீல் சுமாரா என்று பதில் சொன்னார்.

அப்போது பிரதமர் இமாச்சலப்பிரதேச முதல்வர் நாற்காலி டெல்லி மேயர் நாற்காலி இதெல்லாம் அமித்ஷா நெனச்சா உடனே முடிச்சிடுவார். இப்போதைக்கு அவருக்கு பார்லிமென்ட் தேர்தல் பற்றிய கணக்குல பிஸியா இருக்கார் இதுதான் அமித்ஷா அரசியல் "என்று சொல்லி சிரித்தார்.

அப்போது மிஸ்டர் ரீல் "சரி அதை விடுங்க டெல்லியில் நீங்க முதல்வர் ஸ்டாலினை பார்த்து ஏதோ பேசி சிரிச்சீங்களா அது என்ன "என்று கேட்க அதற்குப் பிரதமர் "ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் நீங்கள் சொல்லுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார் நான் ஆளுநரை நியமிப்பது ஜனாதிபதி அவர் சொன்னால் தான் அவர் கேட்பார் நான் பிரதமர் நான் ஏதாவது கையெழுத்து போடணுமா சொல்லுங்க உடனே போடறேன் என்றேன் "அதற்கு முதல்வர் அந்த மாதிரி சின்ன விஷயம் எதுவும் எங்களிடம் இல்லை என்று சொல்ல அதற்கு அருகில் இருந்த டி ஆர் பாலு ஆமாம் ஆமாம் என்று சொல்லி சிரித்தார் இதுதான் நடந்தது என்றார் மிஸ்டர் ரிலுக்கு ஒன்னும் புரியவில்லை புயல் மழைக்கு முன்பு வீட்டுக்கு போகலாம் என்று புறப்பட்டு விட்டார்.