தொடர்கள்
அரசியல்
சொகுசு ரயில் ஸ்டாலின் - தென்காசிக்கு ஒரு ஜிலு ஜிலு பயணம் - மாலா ஶ்ரீ

20221110075511364.jpg

திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 'தென்காசி' மாவட்டம் உருவான பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட சொகுசு ரயில் பெட்டியில் தனது மனைவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தனி செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ கிளம்பினார்.

பின்னர் மதுரையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக சென்னை திரும்பினார். தென்காசியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பல்வேறு கோயில்களுக்கு தனியே சென்று தரிசனம் செய்து வந்தார்.

செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இந்த பயணத்தை சொகுசு ரயில் பெட்டியில் செய்தார் ஸ்டாலின்.

20221110075535251.jpg

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட, தனியே இணைக்கப்படும் 2 காஸ்ட்லி சொகுசு ரயில் பெட்டிகளில் ஒன்றாகும். அதிக கட்டணத்துடன் பயணிகளும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் தென்காசி ரயில் பயணத்துக்காக ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைக்கப்பட்டதாகும். அப்படியென்ன இந்த சொகுசு ரயில் பெட்டியில் பிரத்யேக வசதிகள் உள்ளன என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

2022111007560360.jpg

இந்த சலூன் கோச் 'ஹோம் ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் அழைக்கப்படும் சொகுசு ரயில் பெட்டியில் உள்ள பிரத்யேக வசதிகள் , அதிக இடவசதி கொண்ட லிவ்விங் ரூம், 2 பெட்ரூம், லிவ்விங் ரூமிலேயே அமர்ந்து சாப்பிடுவதற்கான டைனிங் டேபிள் வசதி, சமையலறை, 4 முதல் 6 பெர்த், டிவி வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது, குடும்பத்துடன் தனியே பயணிக்க விரும்பும் மக்களுக்கும், ஹனிமூன் செல்லும் புதுமண தம்பதிகளுக்கும், அரசியல் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய 2 ஆப்ஷன்கள் உள்ளன. ஆன்லைனில் புக் செய்ய, ஐஆர்சிடிசி தளத்துக்கு சென்று FTR புக்கிங் செய்யலாம். அல்லது நேரடியாக ரயில்வே ஸ்டேஷனில் புக்கிங் செய்ய முடியும். இந்த கோச்சை புக் செய்வதற்கு வெறும் ₹2 லட்சம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ₹25 ஆயிரம் செக்யூரிட்டி டெபாசிட்டாக வைத்துக் கொள்ளப்படும்.

பின்னர் பயணத்தின்போது இதில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர் என்பதை பொறுத்தது. ஒரு நபருக்கான டிக்கெட்டை கணக்கிட்டு, மீதமுள்ள தொகையில் பயணம் செய்பவர்களின் டிக்கெட் கட்டணம் கழிக்கப்படும். பயணம் முடிந்ததும் புக் செய்தவர்கள், இந்த சொகுசு பெட்டியில் எவ்வித சேதமும் ஏற்படுத்தவில்லை என்றால், செக்யூரிட்டி டெபாசிட் தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும். இதுதவிர, ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவிகித சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சொகுசு ரயில் பெட்டியை 'புக்' செய்ய வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 500 கிமீ பயணிக்க வேண்டும். மேலும், இதில் பயணம் செய்பவர்களின் டிக்கெட் கட்டணம், முதல் வகுப்பு ஏசி கட்டணத்தைவிட அதிகம். இந்த சொகுசு ரயில் பெட்டிக்கு பயண தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது குறைந்தபட்சம் 30 நாட்களுக்குள் புக்கிங் செய்ய வேண்டும். புக்கிங் செய்பவர்கள், இதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ஹூம் ஒரு நடுத்தர குடும்பத்தில் இப்படிப்பட்ட சொகுசு ரயில்களை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.

முதல்வர் ஏன் இப்படி செலவு செய்து போக வேண்டும். விமானத்தில் போகக் கூடாதா என்று கேட்பவர்களுக்கு, ஏன், அவருக்கும் ஆசை இருக்காதா ?? போகட்டுமே என்ன கெட்டு போச்சு.