தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 15 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

இக்கரைக்கு அக்கரை பச்சை...


நான் எங்கே பிறக்க வேண்டும் என்கிற கேள்வியை எல்லாம் தீர்மானிக்க இறைவன் நம்மை விடுவதில்லை.. உயிரின் ஜனனம் கருவிலே இருக்கும்போதே இவன் இந்த இடத்தில்.. இந்தக் குடும்பத்தில் பிறந்திடட்டும் என்று முன்மொழியப்படுகிறது. பிறக்கின்ற குழந்தை வீறிட்டு அழும்குரலில் அது வழிமொழியப்படுகிறது. அப்படி அமையும் பிறப்பின் ரகசியங்கள் இன்றுவரை மனிதனின் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகின்றன. மனிதன் அணியும் ஆடை கூட, மற்றவர்கள் பார்வையில் தான் எப்படி இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையில்தான் அமைகிறது என்பார்கள். அவனுக்குத்தான் எத்தனை செல்வங்கள்? அவளுக்குத்தான் எத்தனை அழகு? என்னைவிட அவன்.. என்னைவிட அவள்.. என்கிற ஏக்கப் பெருமூச்சுகளை எல்லாம் சேர்த்துப்பார்த்தால் ஒரு வெப்ப மண்டலம் உருவாகிவிடும் அல்லவா?
தனது நிலை, வருமானம், செல்வாக்கு என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ற வாழ்க்கை முறையை வகுப்பார் எவரிங்கே? இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதான் என்கிற பழமொழியும் இங்கு உண்டு கவியரசர் இந்தக் குழப்பங்களுக்கு விடைதருகிறார்.. வெள்ளித்திரையில் விளைந்த இப்பாடலில் பழமொழி பல்லவியாகிறது. அடுத்தவரியைக் கேளுங்கள்.. பல்லவியோடு எப்படி அமர்க்களமாக ஜோடி சேர்கிறது?
பம்மலில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கலந்து கொண்டு முதன் முறையாக நிறுவப்பட்ட கண்ணதாசன் விருதினைப் பெற்ற மெல்லிசை மன்னர் நிகழ்த்திய ஏற்புரை முற்றிலும் வித்தியாசமானது! ஆம்.. பாடல்கள் சில உருவான விதம் பற்றியும் அச்சமயம் ஏற்பட்ட அனுபவங்களையும் சொல்லி அப்பாடல்களை ஆர்மோனியத்துடன் பாடிக் காட்டினார்.
குறிப்பாக இப்பாடலைப்பற்றி அவர் சொன்னபோது மக்கள்திரள் மகிழ்ச்சியில் மிதந்தது.
இப்பாடலில் கருத்துக்கள் நல்லா வந்திருக்கு. இதை வழக்கம்போல் இனிமையான குரலில் பாடினால், கருத்துக்கள் மக்களை ஈர்க்காது. எனவே மக்களிடம் பளிச்சென்று சேர சரியான குரல் வேண்டும். எனவே இப்பாடலை நீயே பாடிடு என்று கவியரசு கண்ணதாசன் – மெல்லிசை மன்னரிடம் கேட்டுக்கொண்ட பாட்டு.. அதன்படி விஸ்வநாதன் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாட்டு!


இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
.
சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மானலயும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
.
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
.
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா,
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா,
.
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
.
மழை நாளில் உன் எண்ணங்கள் வெயில் தேடும் - கோடை
வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்,
அது தேடி, இது தேடி அலைகின்றாய், - வாழ்வில்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்,
அவரவர்க்கு வைய்த்த இடம் அவன் போட்ட பிச்சை,
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை

கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா,
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா, கண்ணதாசனே! உன் வரிகளில் எப்படி தத்துவமும் சரி.. காதலும் சரி.. இயல்பான மழைபோல.. இதமான மழலையின் குரல்போல.. சரம்சரமாய்..சுகம்சுகமாய்…
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
அற்புதமாய் பாடல் முடியுமிடமிதோ..
அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை..
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை.. - தத்துவ தரிசனமல்லவா?

பயணம் தொடரும்...