தொடர்கள்
கவிதை
எப்படிச் சொல்வது.?-மகா

20221109163042604.jpg

பால்காரருக்கு ஏரியா

அத்துப்படி

பேப்பர் போடுபவருக்கு

விலாசம் சொல்லி விட்டோம்

கீரைக்காரப் பாட்டி

விசாரித்து வந்துவிடும்

கொரியர் பையனுக்கு

அலைபேசி எண்

எங்கிருந்தோ தினமும் வந்து

மொட்டை மாடியில்

குருணையுண்ணும்

அந்த

பெயர் தெரியாப்

பறவைக்கு மட்டும்

எப்படிச் சொல்வதெனத்

தெரியவில்லை

புது வீட்டு முகவரியை.