தொடர்கள்
கதை
கிளுகிளுப்பாய் - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

2022110916484337.jpeg

பியோங் கிரகம் சூரியனிலிருந்து 400மில்லியன் கிமீ தூரத்தில் இருந்தது. ஆரம் 10000கிமீ. கிரகத்தின் ஆயுள் எட்டு பில்லியன் வருடங்கள். கிரகம் முழுமையும் நாவல்நிறம். பியோங் கிரகத்துக்கு நான்கு நிலவுகள்.

பியோங்கின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பிரமாண்டமாய் நிமிர்ந்திருந்தது. பியோங் கிரகவாசிகள் நான்கடி உயரத்தில் மரப்பட்டை நிறத்தில் இருந்தனர். பிதுங்கிய கண்கள். பத்தே ரோமங்கள் துருத்திக் கொண்டிருக்கும் வழுக்கைத்தலை. கைகால்களில் எட்டுஎட்டு விரல்கள்.

பியோங் கிரகத்தின் ஜனத்தொகை 200கோடி. பியோங் மக்கள் ஐஸாலக்கடி மொழி பேசினர். ‘உசு’ என்கிற தானியத்தால் ஆன உணவை உட்கொள்கின்றனர். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் பூமி மக்கள் அளவுக்கு முன்னேறியிருந்தனர்.

விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்துக்குள் தலைமை விஞ்ஞானி காஸ்தோ நடந்து வந்தார். எதிர்பட்டோர் அனைவரும் வணங்கினர்.

“டுமாஸ்!”

“டுமாஸ் டுமாஸ்!”

காஸ்தோ தனது சூப்பர் கம்ப்யூட்டர் முன் போய் அமர்ந்தார்.

கணினியை திறந்தார்.

அறை முழுக்க அதிரடி இசை பரவியது.

காஸ்தோவும் அவரது உதவியாளர்களும் செம குத்தாட்டம் போட்டனர். நான்கு நிமிட குத்தாட்டத்துக்கு பின் காஸ்தோ தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

கணினியில் நூற்றுக்கணக்கான ரேடியோ அலைகள் தோன்றி மறைந்தன.

ரேடியோ அலைகளை இடைமறித்தார் காஸ்தோ.

இடைமறித்த ரேடியோ அலைகளில் எந்த தகவலும் ஒளித்து வைக்கப் படவில்லை.

உதடு பிதுக்கினார் காஸ்தோ.

“கடந்த முப்பது வருடங்களாக ஆராய்கிறோம். எந்த வெளிகிரகத்து மனிதரிடம் இருந்தும் உபயோகரமான தகவல் நமக்கு பெயரவில்லை. நம் விண்வெளி ஆராய்ச்சி ஒரு கிரிமினல் வேஸ்ட்!”

திடீரென்று ஒரு மைக்ரோ நொடியில் கணினியில் ரேடியோ அலைகள் பூகம்பம் பூத்தது.

பைனரி கோடட் செய்திகள் வந்து விழுந்தன.

காஸ்தோ பரபரப்பானார்.

பூமியின் அழகான ஆண்பெண்களின் நிர்வாணப்படங்கள் டிஎன்ஏ வரைபடத்துடன் வந்து விழுந்தன.

மனித உயிர்கள் பூமியில் தோன்றியதற்கான உயிரியல் ரசாயன செப்படி வித்தைகள் செய்முறை படங்களால் காட்டப்பட்டன.

சூரியமண்டலத்தில் பூமியின் இருப்பு வரைபடம்.

பூமி மக்கள் சாப்பிடும் வகைவகையான ரெஸிபிகள்.

பூமி மக்கள் அணியும் டிசைன் டிசைனான ஆடைகள்.

பூமிமக்கள் பேசும் நூற்றுக்கணக்கான மொழிகளின் ஒலிவடிவங்கள்.

ஆசிய அழகு பெண்ணாக பிரியங்கா மோகன்.

ஆப்பிரிக்க அழகு பெண்ணாக ஜோஜிபினி குன்ஸி.

அமெரிக்க அழகு பெண்ணாக ஜென்னிபர் அனிஸ்டன்.

பிரஞ்ச் அழகு பெண்ணாக எஸ்மெரல்டா

இங்கிலாந்து அழகு பெண்ணாக கேட்டி வின்ஸ்லெட்.

எஸ்கிமோ பெண்

சீனப்பெண்

ஜப்பானிய பெண்

பெண்களின் மார்பகங்கள், புட்டங்கள், தொப்புள், தொடைகள், கண்கள், மூக்குகள், காதுகள், வாய்கள், நாக்குகள் தனியே பெரிதுபடுத்தப்பட்டு ஒப்பிடப்பட்டிருந்தன.

காஸ்தோ வாயிலிருந்து இரண்டு லிட்டர் ஜொள் வடிந்தது.

“அடடே… என்ன கவர்ச்சி என்ன கவர்ச்சி… இது ஒரு கவர்ச்சி நீர்வீழ்ச்சி!”

“மாரியாத்தோ (பூமி) கிரகப்பெண்கள் காமதேவதைகள் விண்வெளி தலைவரே.. இவங்களை பாத்தாலே மனசு டங்ஸ்டன் ஆகுது!”

“தலை இருக்க வால் ஆடக்கூடாது சிஷ்யா!”’

“சரி, அடக்கி வாசிக்கிறேன்!”

“இந்த நிர்வாணப்படமெல்லாம் மாரியாத்தோ மக்கள் நமக்கு ஏன் அனுப்பியிருக்கிறார்கள். தெரியுமா?”

“தெரியவில்லை!”

“அவர்களின் கிரகம் பற்றி மட்டும் புள்ளிவிவரங்கள் அனுப்பியிருந்தால் அது நம்மை பெரியஅளவில் ஈர்க்காது. நிர்வாணப்படங்கள் பார்த்து நாக்கை தொங்க போட்டுக் கொண்டு நாமும் நம் கிரகப்பெண்களின் நிர்வாணப்படங்களை அவர்களுக்கு அனுப்புவோம். இது ஒரு நீலப்பட பரிமாற்றம்!”

கணினியில் வேறொரு கிரகத்திலிருந்து ரேடியோ அலைகள் வந்து தலை நீட்டின.

அந்த டிஜிட்டிலைஸ்டு தகவல்களை டிகோடிங் செய்தார் காஸ்தோ.

“கமோக்கி கிரகத்திலிருந்து டிஜிட்டலைஸ்டு நிர்வாணப்படங்கள் வந்திருக்கின்றன!”

கமோக்கி கிரகத்தின் ஏழெட்டு வகைப்பெண்கள் நிர்வாண போஸ் கொடுத்திருந்தனர்.

“மாரியாத்தோவுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கமோக்கி கிரகப் பெண்கள். இவர்களுக்கு ஒன்று கூடி இருந்தால் அவர்களுக்கு ஒன்று குறைந்திருக்கிறது. இவர்களுக்கு ஒன்று குறைந்து இருந்தால் அவர்களுக்கு ஒன்று கூடியிருக்கிறது!”

பூமி கிரகத்து பெண்களின் புகைப்படங்களையும் கமோக்கி கிரகப் பெண்களின் புகைப்படங்களையும் எடுத்து தலைக்கு மேல் வைத்துக்கொண்டு கூத்தாடினார் காஸ்தோ.

“என்ன அழகு என்ன அழகு கோடி மலர் கொட்டிய அழகு!”

காஸ்தோவின் இடுப்பை கட்டிக்கொண்டு சாண்டிமாஸ்டர் போல ஆடினான் உதவிஅதிகாரி.

மூன்றாவது முறையாக கணினியில் ஒரு ரேடியோ அலை அடித்தது.

அதனை இடைமறித்து குறிவிலக்கம் செய்தார் காஸ்தோ.

ரூடி கிரகத்திலிருந்து பைனரி கோடட் தகவல்கள் வந்திருந்தன.

ரூடி கிரகத்திலிருந்து பெண்களின் நிர்வாணப்படங்கள்!

மாரியாத்தோ கிரகத்தின் பெண்கள் அசத்துகிறர்கள் என்றால் கமோக்கி கிரகத்துப்பெண்கள் மயக்குகிறார்கள் கமோக்கி கிரகத்துபெண்கள் மயக்குகிறார்கள் என்றால் ரூடி கிரகத்து பெண்கள் தூள் கிளப்புகிறார்கள்.

துள்ளினான் உதவிஅதிகாரி.

“நான்காவதாக ஒரு டிஜிட்டலைஸ்ட் தகவல் வருகிறது அதனை என்ன வென்று பாருங்கள் விண்வெளி தலைவரே!”

அதில் ரிரி கிரகத்து பெண்களின் நிர்வாணப்படங்கள்.

நான்கு கிரகத்து பெண்களின் நிர்வாணப்படங்களை சீட்டுக்கட்டு கார்டுகளை விசிறியாய் வைத்தது போல வைத்து சீழ்க்கை அடித்தார் காஸ்தோ.

“பொதுவாக நிர்வாணம் அருவெறுப்பூட்டும் என்பார்கள். ஆனால் இங்கு நிர்வாணம் பிரமிப்பூட்டுகிறது கிளுகிளுப்பூட்டுகிறது கவிதைபாடுகிறது. வானவில்களை ரங்கோலிகளாய் வாரி இறைக்கிறது. கண்களில் க்ளைடாஸ்கோப் உணர்வுகள் என் மனமெல்லாம் காதல் நந்தவனம்!”

“இந்த படங்களை தொடர்ந்து ஒரு ஒளி வருடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல…”

அவனது தலையில் ஒரு தட்டுதட்டி புகைப்படங்கள் முழுவதையும் பறித்தார் காஸ்தோ.

“விண்வெளி தலைவரே!”

“என்ன.. சொல்லு…’’

“நாலு வெவ்வேறு கிரகங்களிலிருந்து ரேடியோ தகவலை பெற்று மெஹாசாதனை புரிந்து விட்டீர்கள். பதில் தகவல் அனுப்பினால் அவர்களோடு நட்பாவோம். அவர்களை நம் கிரகத்துக்கு வரவேற்று உபசரிக்கலாம். அவர்கள் நம்மை அவர்களின் கிரகங்களுக்கு வரவேற்று விருந்து உபசரிப்பார்கள். மீடியா உங்களை தலையில் தூக்கி வைத்து கூத்தாடும்!”

“நான் வேறுமாதிரி யோசிக்கிறேன்!”

“எப்படி?”

“அந்த நாலுகிரகத்துப்பெண்களோடு நம் கிரகத்துபெண்களை ஒப்பிட்டு பாரத்தால் நம் கிரகத்து பெண்கள் நூற்றுக்கு ஐந்து மதிப்பெண் கூட பெற மாட்டார்கள். ஒரு மரியாதைக்காக நம் கிரக ஆண்கள் அவர்கள் கிரகபெண்களை மணந்து கொள்கிறார்கள் நம் கிரகபெண்கள் அவர்களின் கிரக ஆண்களை மணந்து கொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? அழகிலும் அறிவிலும் குறைவான கிரககலப்பு குழந்தைகள் பிறக்கும். அந்த கிரககலப்பு குழந்தைகள் நம் கிரகத்தாராலும் ஒதுக்கப்படுவர் அந்த நாலு கிரக மக்களாலும் ஒதுக்கப்படுவர்!”

“ஓஹோ!”

“அதனால் நான் ஒன்று செய்யப்போகிறேன்!”

“என்ன?”

“நான்கு கிரகத்திலிருந்து வந்த நிர்வாண ரேடியோ தகவல்களை வந்த தடம் தெரியாமல் அழித்து விட போகிறேன். நமக்கு யாரும் எந்த ரேடியோ தகவலும் அனுப்பவில்லை. நம்மைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறெங்கும் உயிர்கள் இல்லை. நம் கிரகத்து பெண்களே அற்புத அழகிகள்…”

“ஆம்… இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே. நம் கிரகத்துபெண்கள் பிரபஞ்ச பேரழகிகள்”

வந்த ரேடியோ தகவல்கள் அனைத்தையும் அழித்தார் காஸ்தோ. புகைப்படங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

பிரியங்கா மோகனின் புகைப்படத்தை பேன்ட்பாக்கட்டில் பத்திரபடுத்திக் கொண்டார் காஸ்தோ. கேட்டி வின்ஸ்லெட்டின் புகைப்படத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான் துணை அதிகாரி.

பிரியங்கா மோகனின் புகைப்படம் குறும்பாய் கண் சிமிட்டி சிரித்தது!